RO Water Purifier
இன்று பெருன்பான்மையான வீடுகளில் RO water purifier மூலமாக சுத்தம் செய்த தண்ணீரைத்தான் குடிக்கிறார்கள். ஒரு லிட்டருக்கு 5 மில்லிகிராம் அளவுக்கு குறைவான திடப்பொருள் இருக்குமாறு சுத்தம் செய்கின்ற அனைத்து சுத்தீகரிப்பான்களுக்கும் தடை விதிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
குளத்து நீரையும் மழை நீரையும் பருகி வந்தபோது உடலுக்கு தேவையான சத்துக்கள் குடிநீரில் இருந்து மக்களுக்கு கிடைத்து வந்தது. தொழில்நுட்ப முன்னேற்றம் சுற்றுசூழல் மாசுபாடு காரணமாக சுத்தமான தண்ணீரை பெறுவதற்கு வீட்டிலேயே மெஷின் [RO Water Purifier] ஒன்றை அமைக்க துவங்கினார்கள். அந்த தண்ணீர் சுத்திகரிக்கும் மெஷினானது தண்ணீரில் இருக்கும் மிக நுண்ணிய பொருள்களை கூட நீக்கிவிட்டு சுத்தமான நீராக தரும். இங்கு தான் பிரச்சனை எழுந்தது, சில நிறுவனங்களின் தண்ணீர் சுத்திகரிப்பான்கள் தண்ணீரில் இயல்பாகவே இருக்கும் இரும்பு, மெக்னீசியம், கார்பனேட், சுண்ணாம்பு என பல்வேறு சத்து மூலக்கூறுகளையும் நீக்கி விடுகின்றன. இதனால் மக்களுக்கு எலும்பு சத்து குறைபாடு துவங்கி பல்வேறு நோய்களுக்கு காரணமாகின்றன என வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் தீர்ப்பை அறிந்துகொள்வதற்கு முன்னதாக தண்ணீர் சுத்திகரிப்பான்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை பார்ப்போம்.
தலைகீழ் சவ்வூடுபரவல் [reverse osmosis]
பாடப்புத்தகத்தில் இதுகுறித்து நீங்கள் படித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் மிக எளிமையாக புரிந்துகொள்ள மீண்டும் ஒருமுறை சொல்கிறேன். பொதுவாக, இருவேறு அடர்த்தி கொண்ட கரைசலை ஒரு சவ்வினைக்கொண்டு பிரித்து வைத்தால் தண்ணீரானது அடர்த்தி குறைவான பக்கம் இருந்து அடர்த்தி அதிகமான பக்கம் நோக்கி நகரும். இது இயற்கையான பண்பு, இதனைத்தான் சவ்வூடுபரவல் [Osmosis] என்பார்கள். தலைகீழ் சவ்வூடுபரவல் [reverse osmosis] முறையில் மிக மிக நுண்ணிய துகள்களைக்கூட தடுக்கும் விதமான மிக நுண்ணிய துளைகளைக்கொண்ட சவ்வு அடுக்கின் வாயிலாக தண்ணீரானது அதிக அழுத்தத்துடன் அனுப்பப்படும். இந்த முறையில் அதிக அடர்த்தி கொண்ட பக்கத்தில் இருந்து அடர்த்தி குறைவான பக்கம் நோக்கி நீர் மூலக்கூறுகள் நகரும்.
RO மெஷின்களில் என்ன பிரச்சனை?
நீங்கள் விளம்பரங்களை நன்றாக கவனித்து இருந்தால் சில விளம்பரங்களில் கிருமிகளை மட்டும் நீக்கிவிட்டு சத்துள்ள மூலக்கூறுகளை தண்ணீரிலேயே இருக்கும்படி எங்களது மெஷின் செயல்படும் என்பார்கள். ஆனால் பெரும்பான்மையான நிறுவனங்களின் மெஷின்கள் தண்ணீரில் இருக்கும் நல்ல சத்தான வைட்டமின்களையும் தடுத்து நிறுத்தி விடுவதனால் மக்கள் வெறும் சக்கை போன்ற நீரைத்தான் பருக வேண்டி இருக்கிறது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட நீரை குடித்து வந்தால் பல்வேறு சத்து குறைபாட்டு நோய்கள் ஏற்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
பசுமை தீர்ப்பாயம் அதிரடி
இப்படிப்பட்ட ஆபத்தை விளைவிக்கக்கூடிய தண்ணீர் சுத்திகரிப்பான்கள் தொடர்பாக ஆய்வு நடத்திய நிபுணர் குழு தனது அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் அளித்தது. இதனை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது. அதன்படி, சுத்தீகரிக்கப்பட்டதற்கு பின்பாக கிடைக்கின்ற தண்ணீரில் கரைந்துள்ள திடப்பொருளின் அளவு 1 மில்லிகிராம் அளவிற்கு குறைவானதாக இருக்கிற விதத்தில் செயல்படுகின்ற RO சுத்திகரிப்பான்களுக்கு தடை விதிப்பது குறித்த அறிவிப்பாணையை 2 மாதங்களுக்குள் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசோ சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதனால் 4 மாத கால அவகாசம் கேட்டுள்ளது.
மக்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த தடை என்பது மக்களின் நலனுக்காக விதிக்கப்பட்டது. இதனை மக்கள் உணர வேண்டும். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்துகிற RO தண்ணீர் சுத்திகரிப்பான் மேற்கூறிய அளவுக்கு ஒத்துவராமல் இருந்தால் அதனை உடனடியாக மாற்றிவிடுங்கள். இல்லையேல் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலன் தான் பாதிப்படையும். அதேபோல புதிதாக ஆர்வோ சுத்தகரிப்பான் வாங்க நினைப்பவர்களும் மேற்கூறிய அளவுகளை கடை ஊழியர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு வாங்குங்கள்.
உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த பதிவை அனுப்பிடுங்கள்.
இந்தக்கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா? கமெண்டில் பதிவிடுங்கள்
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.