மொபைலில் சீன ஆப்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை ஸ்கேன் செய்து கண்டுபிடிக்க ஒரு புதிய ஆப் வெளியாகி பலரால் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது.
நாம் அதிக அளவில் பயன்படுத்தும் பெரும்பான்மையான ஆப்கள் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் உருவாக்கியவையாக இருக்கலாம் அல்லது சீன நிறுவனங்கள் அந்த ஆப்களில் அதிக அளவில் முதலீடு செய்தும் இருக்கலாம். உதாரணத்திற்கு டிக்டாக் ஆப்பை கூறலாம். இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை பிரச்சனை அல்லது வர்த்தக பிரச்சனை போன்றவை ஏற்படும் போதெல்லாம் சீன பொருள்களை புறக்கணியுங்கள், சீன ஆப்களை உங்களது மொபைலில் இருந்து நீக்குங்கள் என்பது போன்ற கோரிக்கைகள் எழுவது உண்டு.
ஆனால் தற்போது சீனாவை சேர்ந்த நிறுவங்களின் பங்களிப்பு இருப்பதாக கருத்தப்படக்கூடிய சீன ஆப்களை உங்களது மொபைலில் இருந்து நீங்கள் நீக்க விரும்பினால் அதற்கென ஒரு ஆப் தயாரித்து இருக்கிறார்கள். “Remove China Apps” என்ற பெயரில் தற்போது கூகுள் பிளேஸ்டோரில் கிடைக்கும்.
https://www.youtube.com/watch?v=c9WVaYmiiTk
பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருக்கும் இந்த ஆப்பை நீங்கள் உங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் ஸ்கேன் செய்யுமாறு கூறும். நீங்கள் ஸ்கேன் செய்தால் உங்களது மொபைலில் சீன ஆப்கள் இருந்தால் உங்களுக்கு அந்த ஆப்களை வரிசைப்படுத்தி காட்டும். அருகிலேயே “uninstall” ஆப்சனும் இருக்கும். நீங்கள் விரும்பினால் அந்த பட்டனை கிளிக் செய்து உங்களது மொபைலில் இருந்து அந்த ஆப்களை நீக்கிக்கொள்ளலாம். உங்களது மொபைலில் எந்தவொரு சீன ஆப்களும் இல்லையென்பது தெரிந்தால் உங்களுக்கு வாழ்த்து செய்தியை காண்பிக்கிறது.
இந்த ஆப்பை இந்தியாவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் “OneTouch AppLabs” உருவாக்கி இருக்கிறது. தற்போது வரைக்கும் இந்த ஆப்பை 5 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் டவுன்லோட் செய்திருப்பதாக தெரிகிறது. இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த ஆப்பை டவுன்லோட் செய்திருக்கிறார்கள்.
ஆனால் ஒரு ஆப்பை “சீன ஆப்” என இந்த ஆப் எப்படி கண்டுபிடிக்கிறது? அதற்க்கான என்ன வழிமுறைகளை இது கையாள்கிறது என்பது பற்றிய தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.அதேபோல அனைத்துவிதமான சீன ஆப்களையும் துல்லியமாக இந்த ஆப் கண்டறிந்துவிடுகிறதா என்பது பற்றிய உறுதியான தகவலும் கிடைக்கவில்லை.
எங்களது மொபைலில் இந்த ஆப்பை சோதனை செய்து பார்க்கும் போது SHAREit ஆப் மற்றும் CamScanner என்ற இரண்டு ஆப்களையும் சீன ஆப் என காட்டியது. உண்மையில் இந்த இரண்டு ஆப்களுமே சீன நிறுவனங்களின் கீழ் தான் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதுவரையில் சில சீன ஆப்களுக்கு மாற்றான வேறு ஆப்கள் இல்லாத சூழல் நிலவுகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையே. ஏற்கனவே இந்தியா சீனா இடையே பிரச்சனை வலுவடைந்துகொண்டிருக்கும் இந்த சூழலில் இதுபோன்ற ஆப்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற செய்திகளை படிக்க எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.