நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான். புதிதாக Brand-new laptops வாங்குவதற்கும் refurbished laptops வாங்குவதற்கும் விலையில் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கவே செய்யும்.
Refurbished laptops ஐ பார்ப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் புதிய லேப்டாப்பை போன்றே இருக்கும். ஆனால், இப்படி புத்தாக்கம் செய்யப்பட்ட லேப்டாப்பை வாங்கலாமா என்ற சந்தேகமும் பலருக்கு நிச்சயமாக இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகம் உங்களுக்கு இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கானது. முடிவில், Refurbished laptops என்றால் என்ன, Refurbished laptops ஐ வாங்கும் போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வீர்கள்.
கணினி குறித்து பல்வேறு விசயங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள்
Refurbished Laptop என்றால் என்ன?
Refurbished Laptop என்பவை பயன்படுத்தப்பட்ட அல்லது பெட்டியில் இருந்து சீல் உடைக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற லேப்டாப்பை சோதித்து, குறைகள் இருந்தால் சரி செய்து மீண்டும் விற்பனைக்கும் கொண்டுவரப்படும் லேப்டாப் தான்.
மிகப்பெரிய லேப்டாப் நிறுவனங்கள் இதற்காகவே தொழிற்சாலைகளை வைத்துள்ளன. அதேபோல, சில தனியார் நிறுவனங்களும் கூட வெளியில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்பை வாங்கி அதனை சரி செய்து மீண்டும் விற்பனை செய்கிறார்கள். ஆகவே தான், அவர்களால் மிக மிக அதிகமான தள்ளுபடியை வழங்க முடிகிறது.
இப்படி விலை குறைவாக விற்பனை செய்திடும் போது நமக்கு வாங்க ஆசை இருந்தாலும், இன்னொரு பக்கம் நமக்கு எழக்கூடிய மிக முக்கியமான கேள்வி இது நன்றாக இருக்குமா? என்கிற சந்தேகம் தான். இதற்கு சரியாகவும் வெளிப்படையாகவும் சொல்லவேண்டும் என்றால் “மிகச்சரியாக சொல்லிவிட முடியாது என்பது தான்”. ஆனால், நீங்கள் சில வழிமுறைகளை வாங்கும் போது பின்பற்றினால் நிச்சயமாக ஏமாறாமல் இருப்பீர்கள்.
Checkout Few Refurbished Laptops Price Here
Top 5 Things to Consider When Buying a Refurbished Laptop
அனைவராலும் லட்சங்களில் பணம் போட்டு புதிதாக லேப்டாப்பை வாங்க முடியாது. ஆகவே, அவர்களுக்கு இருக்கும் சிறந்ததொரு வாய்ப்பு Refurbished Laptop தான். இதனைத்தான் வாங்க முடிவெடுத்துவிட்டீர்கள் எனில் பின்வரும் விசயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம். அதிக தள்ளுபடி தருகிறார்கள் என்பதற்காக வாங்கிவிட்டு பின்னாளில் புலம்பும் பலரை நான் கண்டிருக்கிறேன். நீங்களும் அந்தப்பட்டியலில் இணையாமல் இருக்க இவை உதவும்.
- பயன்படுத்தப்பட்ட லேப்டாப் அல்லது புதிய லேப்டாப்
இரண்டுவிதமான Refurbished Laptop சந்தையில் கிடைக்கின்றன. முதல் ரகம், பெட்டியின் சீல் திறக்கப்பட்டு பின்னர் அது திரும்ப கம்பெனிக்கு அனுப்பப்படும். பல சூழல்களில் இந்த லேப்டாப்பை நிறுவனம் மீண்டும் சீல் போட்டு விற்கமாட்டார்கள். இந்த லேப்டாப்கள் Refurbished Laptop என சந்தைக்கு விற்பனைக்கு வரும். இவை குறிப்பிட்ட அளவு மட்டுமே விலை குறைவானதாக இருக்கும்.
இன்னொரு ரகம், பயன்படுத்தப்பட்ட லேப்டாப். இதனை வாங்கி, அதில் இருக்கும் சில பிரச்சனைகளை சரி செய்து புதிய தோற்றம் அளித்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். இதற்கு மிகப்பெரிய அளவில் ஆபர் கொடுப்பார்கள்.
இதில் உங்களுடைய லேப்டாப் எந்தவகை என தெரிந்துகொள்ளுங்கள்.
2. எங்கே வாங்கப்போகிறீர்கள்?
பல லேப்டாப் நிறுவனங்கள், அவர்களிடமே Refurbished Laptop களை உருவாக்கும் தொழிற்சாலைகளை வைத்திருப்பார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய லேப்டாப்களை வாங்கி , புதிய தோற்றம்,பிரச்சனைகளை சரிசெய்தல், மென்பொருள் மாற்றம் போன்றவற்றை செய்து விற்பனைக்கு கொண்டுவருவார்கள். இப்படி, குறிப்பிட்ட நிறுவனத்திடம் இருந்து நீங்கள் Refurbished Laptop ஐ வாங்கினால் மிகவும் நல்லது.
இப்போது சந்தையில் பல சிறிய சிறிய நிறுவனங்கள் Refurbished Laptop ஐ விற்கின்றன. இவையும் அதே வேலையை செய்து தான் விற்கின்றன என்றாலும் நம்பிக்கை என்ற அடிப்படையில் பார்க்கும் போது இங்கே வாங்குவதை நீங்கள் முடிந்தவரையில் தவிர்ப்பது நல்லது. ஆனால், இவர்கள் மிகவும் அதிகமாக ஆபர் வழங்குவார்கள்.
3. Warranty என்ன தருகிறார்கள்?
பொதுவாக புதிய லேப்டாப் நீங்கள் வாங்கினால் ஒரு வருடம் வாரன்டி தருவார்கள். Refurbished Laptop ஐ நீங்கள் வாங்கும் போதும் கூட சில நிறுவனங்கள் வாரன்டி தர வாய்ப்பு உண்டு. அப்படி தந்தால் நீங்கள் நம்பிக்கையோடு வாங்கலாம். ஒருவேளை, சில மாதங்களோ அல்லது வாரண்டி இல்லாமலோ விலை குறைவாக தருகிறார்கள் என்றால் நீங்கள் நன்றாக லேப்டாப்பை சோதித்த பிறகு வாங்குவது சிறந்தது. ஆனால், இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட லேப்டாப் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
5. லேப்டாப் தரம் எப்படி இருக்கிறது?
என்னதான் புத்தாக்கம் செய்தாலும் refurbished laptop இல் சில ஸ்கிராச் அல்லது நெளிவுகள் இருப்பதை மறைக்க முடியாது. நீங்கள் வாங்கும் போது அப்படி எதுவும் இருக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கீழே விழுந்து இருக்கலாம் அல்லது எங்கேயேனும் இடித்து இருக்கலாம்.
refurbished laptop நீங்கள் வாங்கும் போது சில விற்பனையாளர்கள் என்ன பிரச்சனை என்றாலும் கொண்டு வாருங்கள் நாங்கள் பார்த்து தருகிறோம் என்பார்கள், அவர்களிடம் வாங்குங்கள். ஆனால் சிலரோ வாங்கிக்கொண்டு சென்றுவிட்டால் அவ்வளவுதான் எங்களிடம் வரக்கூடாது, நாங்கள் பொறுப்பல்ல என்பார்கள். அப்படி சொல்பவர்களிடம் வாங்காமல் தவிர்ப்பது நல்லது.
5. எவ்வளவு பழைய லேப்டாப்?
குறிப்பிட்ட மாடல் எப்போது வெளியானது என்பதனை எளிதாக அறிந்துகொள்ள முடியும். ஒருவேளை அண்மையில் வெளியான லேப்டாப் உங்களுக்கு கிடைக்கிறது எனில் நீங்கள் பயப்படாமல் வாங்கலாம். ஏனெனில் அதனை குறைவான காலம் தான் பயன்படுத்தி இருப்பார்கள்.
சில refurbished laptop விற்பனையாளர்கள் அவர்களே குறிப்பிட்ட லேப்டாப் எவ்வளவு பழையது என்பது கூறிவிடுவார்கள். சிலர் மறைக்கவும் வாய்ப்பு உண்டு. மிகவும் பழைய லேப்டாப்பை நீங்கள் வாங்கிவிட்டால் சில சாப்ட்வேர்கள் சரியாக வேலை செய்யாமல் போகலாம். ஆகவே பார்த்து வாங்குங்கள்.
Refurbished Laptop யாருக்கு பொருத்தமாக இருக்கும்?
Refurbished Laptop விலை குறைவாக இருப்பதனால் ஒரு சிறந்த Spec கொண்ட லேப்டாப்பை கூட வாங்கலாம். இது பலருக்கும் நல்ல சாய்ஸ் ஆக இருக்கவே செய்யும். குறிப்பாக Refurbished Laptop பின்வரும் நபர்களுக்கு ஏற்ற ஒன்றாக நிச்சயம் இருக்கும்.
Students: இவர்களால் பெரிய விலையில் லேப்டாப் வாங்க முடியாது. ஆகையால் இவர்களுக்கு Refurbished Laptop தகுந்த ஒன்றாக இருக்கும்.
Part Time Workers : கூடுதல் வருவமானம் வேண்டும் என்பதற்காக வேலை செய்திடும் நபர்களுக்கு Refurbished Laptop சிறந்த வரம். விலை குறைவாக வாங்கி அதன் மூலமாக வருமானம் பெறலாம்.
Gamers: புதிய லேப்டாப்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்காது. அவர்கள் விலை குறைவான Refurbished Laptop ஐ வாங்கி அடி அடி என அடிக்கலாம்.
இறுதி குறிப்பு
நீங்கள் விலை குறைவாக லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் உங்களுக்கு Refurbished Laptop தகுந்த ஒன்றாக இருக்கும். ஆனால், யாரிடம் இருந்து நீங்கள் Refurbished Laptop ஐ வாங்கப்போகிறீர்கள் என்பது இதில் முக்கியம். இப்போது பல தனியார் நிறுவனங்கள் Refurbished Laptop ஐ அதிகமாக விற்கின்றன. அதேபோல, லேப்டாப் நிறுவனங்களும் கூட Refurbished Laptop ஐ விற்கின்றன. அவர்களிடம் கொஞ்சம் அதிக விலை இருந்தாலும் நம்பிக்கையோடு வாங்கலாம்.
அதேபோல, வாரண்டி கேட்டுப்பாருங்கள். குறைந்த அளவில் பணம் செலுத்தி நீங்கள் வாங்கிக்கொள்ளுங்கள் என்றால் நிச்சயமாக வாங்கிவிடுங்கள். அதிலே சமரசம் செய்து கொள்ளாதீர்கள். எவ்வளவு பழைய லேப்டாப்பை நீங்கள் வாங்கப்போகிறீர்கள் என தெரிந்துகொள்வதும் மிக அவசியம். இல்லையேல் உங்களுக்கு தேவைப்படும் மென்பொருள் அதிலே இயங்காமல் போகவும் வாய்ப்பு உண்டு.
Checkout Few Refurbished Laptops Price Here
Refurbished Laptop நீங்கள் வாங்கி இருந்தால் எப்போது எந்த விலைக்கு வாங்கினீர்கள் என்ற தகவலை கமெண்டில் பதிவிடுங்கள்.
கணினி குறித்து பல்வேறு விசயங்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள்