Site icon Tech Tamilan

டிக்டாக் ரேட்டிங் திடீரென குறைய காரணம் என்ன தெரியுமா? | Reason for Tiktok rating down

டிக்டாக் ரேட்டிங் திடீரென குறைய காரணம்

டிக்டாக் ரேட்டிங் திடீரென குறைய காரணம்

டிக்டாக் ரேட்டிங் திடீரென குறைய காரணம்
இதுவரைக்கும் 4.7 ஸ்டார்ஸ் ரேட்டிங்கில் இருந்த டிக்டாக் மொபைல் ஆப்பின் ரேட்டிங் வெறும் இரண்டு நாட்களில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இரண்டு நாட்களில் 1 ஸ்டார் என குறைய இருவரின் மோதல் தான் காரணம் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா?




மிகப்பெரிய வரவேற்பை அனைத்து தரப்பு மக்களிடமும் பெற்ற ஆப்களில் ஒன்று டிக்டாக். இதுவரைக்கும் 4.7 என நல்ல ரேட்டிங்கை கூகுள் பிளே ஸ்டோரில் பெற்றிருந்த இந்த ஆப்பின் ரேட்டிங் திடீரென 1 ஸ்டார் அளவுக்கு குறைந்தது. இதற்கு காரணம் ஒரு டிக்டாக் ஸ்டாருக்கும் யூடியூப் ஸ்டாருக்கும் இடையே நடந்த மோதல் தான் காரணம். இது எப்படி நடந்தது என்பதை பார்க்கலாம். 

 

டிக்டாக் தளத்தில் அதிக பாலோயர்களை கொண்டிருக்கும் அமீர் [Amir Siddiqui] இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிடுகிறார். அதில் டிக்டாக் தளத்தில் இருந்து வீடியோக்கள் [content]  திருடி யூடியூப் தளத்தில் பலர் வீடியோக்கள் போடுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை அடுத்து யூடியூப் தளத்தில் அதிக அளவில் பின்தொடர்கிறவர்களை வைத்திருக்கும் அஜய் நாகர் [Ajey Nagar/CarryMinati] அமீரை விமர்சித்து ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டது. 

திடீரென யூடியூப் தங்களது விதிமுறைகளை இந்த வீடியோ மீறுவதாகக்கூறி அந்த வீடியோவை நீக்கியது. இதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் இதற்கு நீதி கேட்கும் விதமாக ட்விட்டரில் எதிர்ப்புகளை பதிவு செய்திட துவங்கினார்கள்.  திடீரென ட்விட்டரில் இந்த ஹேஸ்டேக்குகள் அதிகமாக பகிரப்பட்டன. #RoastNahiFryKarunga and #BanTikTok on Twitter. #BanTikTokInIndia, #TikTokdown, #TikTokexposed.

 

அதோடு மட்டுமில்லாமல் பலர் இந்த ஆப்பிற்கு கொடுத்துவந்த ரேட்டிங்கை குறைக்க துவங்கினார்கள். லட்சக்கணக்கில் இதனை செய்திட ஆரம்பித்ததனால் டிக்டாக் மொபைல் ஆப்பின் ரேட்டிங் அதிரடியாக குறைய ஆரம்பித்தது. தற்போதைய சூழலில் 2 கோடிக்கும் அதிகமான பேர் 1 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்திருக்கிறார்கள். இவர்களோடு சேர்த்து சீனாவை சேர்த்த டிக்டாக் எதிர்ப்பாளர்களும் சேர்ந்துக்கொண்டனர்.. அவர்கள் டிக்டாக் ஆப்பில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பல்வேறு வீடியோக்கள் இருப்பதாக குற்றம் சாட்டினார். 

 

இந்த ரேட்டிங் குறைப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. டிக்டாக் ஆப் ரேட்டிங் குறைவதனால் பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனம் சந்திக்காது என்றாலும் ஒரு சிறிய பிரச்சனை ஒரு நிறுவனத்திற்கு எதிராக மக்கள் கூட்டத்தை சேர்க்க காரணமாக இருக்கிறது என்பது ஆச்சர்யமே. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version