Site icon Tech Tamilan

MobiKwik ஐ எச்சரித்த ரிசர்வ் வங்கி, ஏன் தெரியுமா?

Indian Hacker Shivam Vasist

Indian Hacker Shivam Vasist

MobiKwik என்பது இந்தியாவில் மிகப்பெரிய பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வசதியை வழங்கும் நிறுவனம். 120 மில்லியன் பயனாளர்களுடன் கூகுள் மற்றும் Paytm உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக இருந்துவருகிறது. கடந்த ஒரு வாரமாகவே இந்த நிறுவனத்தில் இருந்து பயனாளர்களின் கிரெடிட் கார்டு, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்கள் கசிந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதனை MobiKwik நிறுவனம் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது. 

 

மேலும் தங்கள் நிறுவனத்தின் தகவல்கள் திருடு போனதாக குற்றம் சுமத்துகிறவர்களின் மீது வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்து இருந்தது. தங்கள் MobiKwik தளத்தை பயன்படுத்துவது போலவே பயனாளர்கள் வேறு தளங்களையும் பயன்படுத்துகிறார்கள். அங்கிருந்து கூட தகவல் கசிந்து இருக்கலாமே என்று எதிர்க்கேள்வியை முன்வைத்தது. இது இணையவாசிகளிடையே பெரும் பேசுபொருள் ஆனது. இப்படியா பொறுப்பற்று பதில் கொடுப்பது என பலரும் அந்த நிறுவனத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் RBI களத்தில் இறங்கியுள்ளது. MobiKwik நிறுவனம் இதுபோன்று பொறுப்பற்று பதில் அளிப்பதையும் குற்றம் சுமத்துகிறவர்களை மிரட்டும் தொனியில் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். அதோடு தனியார் தணிக்கையாளர் ஒருவரை நியமித்து தகவல் உண்மையாலுமே கசிந்துள்ளதா இல்லையா என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவேளை தகவல் கசிவு நடைபெற்று இருந்தால் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் அபராதம் விதிக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. 

 

தகவல் கசிவு என்பது இந்தியாவில் பரவலாக நடைபெற்றுவரும் குற்றச்சாட்டாக மாறி வருகிறது. இந்திய அரசு சட்டங்களை கடுமையாக்கினால் தான் இதனை ஓரளவேனும் கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் இணைய ஆர்வலர்கள். 






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version