மிகப்பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தகவல்களை ஆன்லைனில கசியவிட்ட ரேன்சம்வேர் வைரஸ் குரூப்

அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனமான ExecuPharm இன் சர்வர்கள் மார்ச் 13 ஆம் தேதியே ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் பண பரிமாற்ற தகவல்கள் , ஓட்டுநர் உரிமங்கள் , பாஸ்போர்ட் எண்கள் இன்னும் பல முக்கியதகவல்களையும் அவர்கள் கைப்பற்றிவிட்டதாக சொல்லியிருந்தது அந்நிறுவனம் .

இந்த சூழ்நிலையில் தான் சர்வரில் இருந்து திருடப்பட்ட தகவல்களை அந்த ரேன்சம்வேர் வைரஸ் குரூப் ஆன்லைனில் வெளியிட்டுவிட்டதாக தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது அந்நிறுவனம்.

.

ரேன்சம்வேர் வைரஸ் என்ற வார்த்தை கடந்த ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட வார்த்தை. ஹேக்கர்கள் ஒருவித ரேன்சம் வைரஸை மிகப்பெரிய நிறுவனங்களின் சர்வருக்குள் புகுத்தி விடுவார்கள். அந்த வைரஸானது சர்வரில் இருக்கும் அனைத்து தகவல்களையும் என்கிரிப்ட் செய்துவிடும்.

யாராலும் அதை திறக்கவே முடியாது. பிறகு அந்த நிறுவனத்தை தொடர்பு கொள்ளும் ஹேக்கர்கள் குறிப்பிட்ட தொகையை கிரிப்டோகரன்சியாக கேட்பார்கள். அதனை கொடுத்துவிட்டால் தகவல்களை மீண்டும் கொடுத்துவிடுவார்கள். இல்லையேல் தகவல்களை பொதுவெளியில் பகிர்ந்துவிடுவோம் என மிரட்டுவார்கள்.

தற்போது அதுதான் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பின்னால் என்ற CLOP ரேன்சம்வேர் வைரஸ் குரூப் செயல்பட்டிருப்பதாக ExecuPharm தெரிவித்துள்ளது. 

.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருக்கும்போது ரேன்சம் வைரஸ் தாக்குதலை நடத்தப்போவதில்லை என பல்வேறு ஹேக்கர் குரூப் சொல்லியிருந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இதனை செய்த ஹேக்கர் குரூப் கூட மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றை தாக்குவதில்லை என சொல்லியிருக்கிறது. ஆனால் ஏன் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தை தாக்க வேண்டும் என்ற கேள்விக்கு ‘பணத்திற்காக மருந்து தயாரிக்கும் இந்நிறுவனமும் அதிகமாக லாபமடைகிறது இந்த ஆபத்தான சூழலில்’ என காரணம் கூறியிருக்கிறார்கள்.

இதற்கு முன்னால் டச் யூனிவர்சிட்டி ஒன்று தங்களது நூற்றுக்கணக்கான சர்வர்களில் இருந்து தகவல்களை மீட்பதற்காக 2 லட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரிப்டோகரன்சியாக கொடுப்பதனால் யார் அந்த பணத்தை பெறுகிறார்கள் என்பது தெரியாது. அமெரிக்க காவல்துறை உள்ளிட்ட பாதுகாப்பு நிபுணர்கள் இதுபோன்று பணம் கொடுக்காதீர்கள் என அறிவுறுத்தினாலும் வேறு வழி இல்லாமல் கொடுத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

Tech Tamilan