உங்க ஐபோன் ஹேக் செய்யப்பட்டிருக்கா, இந்த ஆப் சொல்லிரும் | iVerify App


பொதுவாக ஆப்பிள் நிறுவனத்தின் பிளே ஸ்டோரில் ஆன்டிவைரஸ் ஆப்களே இருப்பதில்லை. அப்படிப்பட்ட ஆப்களை ஆப்பிள் நிறுவனம் அனுமதிப்பதில்லை. இதற்கு மிக முக்கியக்காரணம், ஒரு ஆப் மற்றொரு ஆப்பினுடைய தகவல்களை ஆராயக்கூடாது மற்றும் ஆப்பிள் இயங்குதளத்தின் பைகளையும் ஆராயக்கூடாது.


ஆண்ட்ராய்டு போன்களை காட்டிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு ஐபோன் குறைந்த அளவே இருப்பதனால் வாடிக்கையாளர்களும் ஆன்டிவைரஸ் ஐ எதிர்பார்ப்பது இல்லை. ஆனால் மிகவும் பாதுகாப்பான போன் என அறியப்படுகின்ற ஐபோனும் சில சமயங்களில் ஹேக் செய்யப்படுவதுண்டு.


Trail of Bits எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள iVerify எனும் ஆப்பானது உங்களது ஐபோன் ஹேக் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டாலோ உடனடியாக உங்களுக்கு தகவலை தெரிவிக்கும். அதோடு குறிப்பிட்ட அந்த பிரச்சனையில் இருந்து நீங்கள் எப்படி மீள்வது என்பது பற்றியும் கூறும்.


மற்ற ஆப்களை அனுமதிக்காத ஐபோன் இந்த ஆப்பினை மட்டும் அனுமதித்தது எப்படி? இவர்களுக்கு சலுகை காட்டியிருக்கிறதா ஆப்பிள் என்ற கேள்வியும் வல்லுநர்களால் எழுப்பப்படுகிறது. அதற்கு வாய்ப்பு இல்லை எனவும் இந்த ஆப் மற்ற ஆப்களுடைய தரவுகளை ஆராய முடியாது எனவும் அப்படி ஆராயாமல் முழு ஆன்டிவைரஸ் ஆப்பாக செயல்பட முடியாது எனவும் வல்லுநர்கள் சிலர் கூறுகிறார்கள்.


Tech Tamilan