பேஸ்புக் வெளியிட்ட கொரோனா அறிகுறி உள்ளவர்களின் மேப் | Facebook launched corona symptoms map

பேஸ்புக் நிறுவனம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் குறித்த மேப் ஒன்றினை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவிற்கு மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மேப் ஆனது யார் யாரெல்லாம் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் உள்ளார்கள் என்ற தகவல்களை கூறாமல் ஒவ்வொரு பகுதியிலும் எத்தனை சதவிகிதம் பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் இருக்கிறார்கள் என்ற ஒப்புமை செய்யக்கூடிய விதத்திலான மேப்பை வெளியிட்டு இருக்கிறது. 1 

 

இந்த தகவல்கள் அனைத்தும் Carnegie Mellon University என்ற பல்கலைக்கழகம் சார்பில் பேஸ்புக் பயனாளர்களிடம் நடத்திய சர்வேயில் கிடைத்த முடிவுகளின்படி வெளியிடப்பட்டுள்ளது. 1 மில்லியன் மக்களிடம் பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இந்த மேப் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் அமெரிக்காவிற்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த மேப் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 


இந்த மேப் எப்படி பயன்படும் ?

இந்த மேப்பானது சுகாதாரத்துறைக்கும் அரசுக்கும் பெரிய உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இது பேஸ்புக் பயனாளர்களால் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உருவான மேப் மட்டுமே. இது 100% சரியானதாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லாவிட்டாலும் கூட அரசு எந்தப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், எந்தப்பகுதிக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்ப வேண்டும், எந்தப்பகுதியில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது என்பது குறித்த முடிவுகளை எடுக்க அரசுக்கு உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

 

இந்த மேப் இன்னும் பயனுள்ளதாக இருக்க பேஸ்புக் பயனாளர்கள் சரியான தகவல்களை கொடுக்க வேண்டும். இந்தியாவில் இந்த வசதியை பேஸ்புக் எப்போது அறிமுகப்படுத்தும் என இன்னும் கூறவில்லை. 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.