வாட்ஸ்ஆப்பை உடனே நீக்குங்கள் – டெலிகிராம் நிறுவனர்

டெலிகிராம் நிறுவனர் பரேல் துரோவ் (Parel Durov) மொபைல் போன்களில் இருந்து வாட்ஸ்ஆப்பை நீக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறார்.


நீங்கள் கண்காணிக்கப்படாமல் இருக்கவேண்டும் என விரும்பினாலும் உங்களுடைய மொபைலில் இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்கள் பொதுவெளியில் பகிரப்படாமல் இருக்கவேண்டும் என விரும்பினாலும் உடனடியாக வாட்ஸ்ஆப்பை டெலீட் செய்யுங்கள் என தனது டெலிகிராம் கணக்கில் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளவதனால் இப்படி குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மாதம் தான், இஸ்ரேலிய தயாரிப்பான பெஸாகஸ் ஸ்பைவேர் மூலமாக உலகம் முழுமைக்கும் 1400 க்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸ்ஆப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் வெளியானது. இதனை அடுத்துதான் ஆப்பை அப்டேட் செய்ய சொல்லி சரிசெய்தது வாட்ஸ்ஆப் நிறுவனம்.


வாட்ஸ்ஆப் இதுபோன்ற ஹேக்கிங்கினால் பாதிக்கப்படுவது முதல் முறை இல்லை. பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்ஸ்ஆப் மிக 160 கோடி பயனாளர்களை கொண்டிருக்கிற ஆப். இதனால் தான் தொடர்ச்சியாக ஹேக்கர்களால் ஹேக் செய்ய முயற்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. மறுபக்கம் டெலிகிராம் வெறும் 200 மில்லியன் பயனாளர்களை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே தான் பெரும்பாலும் இதனை ஹேக்கர்கள் கண்டுகொள்வதில்லை எனவும் சொல்லப்படுகிறது.


இணையம் பாதுகாப்பற்றது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். மனிதர்கள் உருவாக்குவதை மனிதர்களால் ஹேக் செய்யவும் முடியும் என்பதனை இது நமக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது. இணைய பாதுகாப்பில் அரசாங்கம் அக்கறை செலுத்திட வேண்டும்.


TECH TAMILAN