பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வேலைக்கு செல்வதற்காக சில சிறப்பு கம்ப்யூட்டர் கோர்ஸ்களை [C,C++,.Net,JAVA] படிப்பார்கள். பள்ளிகளில் கூட சில அடிப்படையான விசயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால் இப்போது படித்துக்கொண்டு இருக்கிற மாணவர்கள் படித்து முடித்துவிட்டு வெளியே வரும்போது அவர்கள் படித்துக்கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் பெரிதும் பயனளிக்கப்போவது இல்லை. ஆச்சர்யமோ அதிர்ச்சியோ அடைய வேண்டாம் நண்பர்களே. காலம் அவ்வளவு வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
சரி, சராசரி கம்ப்யூட்டர் புரோகிராம்களை படித்தால் பயனில்லை என சொல்கிறீர்களே பிறகு எதனை படிப்பது? நல்ல கேள்வி, டேட்டா சயின்ஸ் அதாவது டேட்டாவை சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, அதனை ஆராய்வது, அதிலிருந்து முடிவுகளை பெறுவது.
அம்பானி சொன்னதைப்போல உலகின் பெட்ரோல் டேட்டா தான். இந்தியாவில் பெட்ரோல் கிணறுகள் இல்லை. ஆனால் மனிதர்களும் அவர்கள் உருவாக்குகிற தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றை ஆராய்வதற்கு மிகப்பெரிய வல்லுனர்களும் நிறுவனங்களும் தேவைப்படுகின்றன. நம்மிடம் தொழில்நுட்பம் இல்லையென்றால் வழக்கம் போல வெளியில் உள்ளவர்கள் நம் சந்தையை ஆக்கிரமித்து விடுவார்கள்.
குறிப்பாக கணினி துறையில் சாதிக்கவேண்டும் பெரும் நபராக வர வேண்டும் என நினைப்பவர்கள் டேட்டா சயின்ஸ் படிப்பில் அதிக கவனம் செலுத்திட வேண்டும். அதேபோல அரசாங்கம், தற்போதைய தொழில்நுட்ப மாற்றத்தை கணக்கில் கொண்டு டேட்டா சயின்ஸ், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் , ரோபோடிக்ஸ் , ஆட்டோமேஷன் போன்ற துறைகளை கல்வி நிலையங்களில் உருவாக்கிட வேண்டும். முறையான பயிற்சி கொடுத்தால் இந்தியா தொழில்நுட்ப உலகை ஆளும்.
டெக் தமிழன்