Cartosat-3 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ

கார்டோசாட் - 3 [Cartosat-3]

Cartosat-3 Sat

வருகிற நவம்பர் 25 ஆம் தேதி, கார்டோசாட் – 3 [Cartosat-3] என்ற செயற்கைக்கோளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ. இதோடு 18 சிறிய அமெரிக்க செயற்கைகோள்களும் அனுப்பப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதிஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து நவம்பர் 25 அன்று காலை 9.28 மணி அளவில் PSLV-XL ராக்கெட் மூலமாக Cartosat-3 செயற்கைகோள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Cartosat-3 மட்டுமல்லாது அமெரிக்காவில் இருந்து தரப்பட்ட வர்த்தக ரீதியிலான 13 நேனோ செயற்கைகோள்களையும் சேர்த்து அனுப்புகிறது இஸ்ரோ. 

கார்டோசாட் - 3 [Cartosat-3]

கார்டோசாட் – 3 செயற்கைக்கோளானது அதிக இமேஜிங் தொழில்நுட்ப திறன் கொண்ட மூன்றாம் தலைமுறை செயற்கைகோளாகும். பூமியில் இருந்து 509 கிலோமீட்டர் தொலைவில்  97.5 டிகிரி கோணத்தில்  நிலைநிறுத்தப்படும். இதன் மூலமாக வானிலை , ராணுவம், நில வரைபடம் போன்ற பல்வேறு துறைகளில் முன்னேற்றங்கள் ஏற்படும்.






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.