Site icon Tech Tamilan

PUBG க்கு தடை, Garena Free Fire தடை செய்யப்படுமா?

Including PUBG Mobile Game, 118 Chinese apps banned in india


PUBG விளையாட்டு உட்பட 118 சீன ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது. இதில் VPN for TikTok, பல்வேறு App Lock மற்றும் Wechat உள்ளிட்டவையும் அடக்கம். Garena Free Fire என்ற மொபைல் கேமும் தடை செய்யப்பட வேண்டும்.

தனி நபராகவோ அல்லது குழுவாகவோ இணைந்து விளையாடக்கூடிய ஆன்லைன் கேம் PUBG Mobile Game. PlayerUnknown’s Battlegrounds என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த விளையாட்டை கணினி, டேப்லெட், மொபைல் போன் என எந்த கருவியிலும் விளையாட முடியும். பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தான்  PUBG விளையாட்டை அதிகமாக விளையாடுகிறார்கள். நல்ல அனிமேஷன் மற்றும் நண்பர்களோடு குழுவாக விளையாடுதல் போன்றவற்றின் காரணமாக இளைஞர்களை இந்த கேம் ஈர்த்து வருகிறது. ஒருநாளில் 10 முதல் 15 மணி நேரம் இந்த கேமை விளையாடுகிற நபர்கள் இருக்கிறார்கள் என்கிறது ஆய்வு.

தற்போது இந்திய அரசாங்கம் இந்த PUBG விளையாட்டு உட்பட 118 சீன ஆப்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்திய இறையாண்மை, ஒருமைப்பாடு உள்ளிட்டவைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்பதை காரணம் காட்டி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் 118 சீன ஆப்களுக்கு தடை விதித்து இருக்கிறது.

PUBG தடையை நீங்கள் வரவேற்கிறீர்களா? கமெண்டில் தெரிவியுங்கள்

PUBG Banned : நாம் நினைத்தது நடந்தது | வரவேற்கிறோம்

தொழில்நுட்பம் அனைவருக்கும் அவசியமானது தான் ஆனால் அதில் அடிமையாகிப்போவது என்பது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக இளைஞர்கள் அதில் மூழ்கிப்போவது மிகவும் ஆபத்தானது. இதற்கு முன்பு பல மொபைல் கேம்கள் வந்தாலும் கூட இளைஞர்கள் முழு வீச்சில் அடிமையாகிப்போனது இந்த PUBG விளையாட்டில் தான்.

கடந்த முறை 59 சீன ஆப்கள் தடை செய்யப்பட்ட போதே PUBG ஏன்  இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மிக முக்கியக்காரணம் PUBG கேம் சீன நிறுவனத்தை சேர்ந்தது என்ற தகவல் பெரும்பான்மையானவர்களுக்கு தெரிந்திருந்தபடியால் தான். நம்மில் பெரும்பாலானவர்கள் PUBG விளையாட்டை சீன நிறுவனத்தின் ஆப் என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் PUBG கேமை உருவாக்கியது தென் கொரியாவை சேர்ந்த கேம் ஸ்டூடியோ – புளுகோல் [Game Studio – Bluehole]. PUBG கேம் பிரபலமாக தொடங்கியதை அடுத்து சீன நிறுவனமான டென்சென்ட் [Tencent] சீனாவில் இந்த கேமை வெளியிட அனுமதி வாங்கியது. தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் வெளியிடும் உரிமையை பெற்றது. இந்தியாவிலும் கூட PUBG விளையாட்டை சீன நிறுவனமான டென்சென்ட் [Tencent] தான் வெளியிட்டுள்ளது.

தற்போதாவது PUBG விளையாட்டு தடை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

PUBG க்கு இருக்கும் மாற்று கேம்களும் தடை செய்யப்பட வேண்டும்

Google பிளேஸ்டோரில் மட்டும் 65 மில்லியன் பேர் PUBG கேமை டவுன்லோட் செய்துள்ளார்கள். தினந்தோறும் 13 மில்லியன் பேராவது PUBG விளையாட்டை விளையாடுகிறார்கள். இன்னொரு மொபைல் கேம் Garena Free Fire மொபைல் கேமை 61 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளார்கள். தற்போது இளைஞர்கள் அதிக நேரம் இந்த விளையாட்டிலும் செலவழிக்கவே செய்கிறார்கள்.

இளைஞர்களும் மாணவர்களும் அதிக நேரம் செலவிடும் எந்தவிதமான மொபைல் கேம்களும் அவர்களின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் எதிரானது என்பதை அரசாங்கம் உணர்ந்து தடை செய்திட வேண்டும். படங்களை சென்சார் செய்திட ஒரு அமைப்பு இருப்பது போல மொபைல் கேம்களுக்கும் ஒரு சென்சார் அமைப்பை கொண்டுவந்து அனைத்து ஆன்லைன் கேம்களையும் ஆராய்ந்து நீக்கிட நடவெடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது Garena Free Fire மொபைல் கேம் தடை செய்யப்பட வாய்ப்பில்லை. இதற்கு முக்கியக்காரணம் இந்த கேம் சிங்கப்பூர் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது என்பது தான்



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version