Site icon Tech Tamilan

PiP Feature in WhatsApp | PiP எனும் புதிய வசதி வாட்ஸ் ஆப்பில் அறிமுகம்

 


உலகின் முன்னனி சாட் ஆப் ஆன வாட்ஸ் ஆப் PiP எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. PiP என்பதன் விரிவாக்கம் Picture-in-Picture. ஏற்கனவே பீட்டா வெர்சனில் சோதனை செய்யப்பட்டு வந்த இந்த வசதி தற்போது அனைத்து ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

வாட்ஸ் ஆப்பில் ஸ்டிக்கர்ஸ் ஆப்சனை பெறுவது எப்படி?


What does it mean PiP (Picture-in-Picture)? 

 

 

இந்த அப்டேட் வருவதற்கு முன்னதாக உங்களுக்கு யாரேனும் Youtube வீடியோ லிங்க் அல்லது facebook வீடியோ லிங்க் அனுப்புகிறார்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த லிங்கை கிளிக் செய்திடும் போது அந்த லிங்க் எந்த ஆப்பில் இருந்து அனுப்பப்படுகிறதோ, உதாரணத்திற்கு youtube லிங்க் எனில் youtube ஆப்பை ஓபன் செய்து அந்த வீடியோ youtube ஆப்பில் play செய்யப்படும்.

அப்படி செய்யும் போது உங்களது சாட் விண்டோ மூடப்பட்டு குறிப்பிட்ட அந்த ஆப் ஓபன் செய்யப்படும். அதனால் உங்களது சாட் தடைபடும் அல்லவா. இதனை சரி செய்வதற்க்காக, குறிப்பிட்ட அந்த வீடியோ WhatsApp லியே ஓடுமாறு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியைத்தான் PiP (Picture-in-Picture) என்கிறார்கள்.

வீடியோ ஓடும்போது அதனை எங்குவேண்டுமானாலும் ட்ராக் (drag) செய்துவிட்டு Chat ஐ தொடரலாம்.

 

This feature works with third-party video apps like Facebook, Instagram, YouTube, Tumblr and Twitter

 

தற்போது இந்த வசதி Facebook, Instagram, YouTube, Tumblr and Twitter போன்றவைகளுக்கு சப்போர்ட் செய்கிறது. மேலும் பல ஆப்களுக்கும் சப்போர்ட் செய்யவும் வாய்ப்பிருக்கிறது

 


TECH TAMILAN

Exit mobile version