இன்று மிக முக்கிய தகவல்கள் அனைத்தும் ஈமெயில் மூலமாகத்தான் பகிரப்படுகின்றன, ஈமெயிலில் தான் பல தகவல்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. நமது ஈமெயில், சமூகவலைத்தள கணக்குகள் என தொடங்கி அனைத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கு “Password” ஐ பயன்படுத்துகிறோம். ஆனால் அவை பல சமயங்களில் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுவிடுகிறது. மில்லியன் கணக்கான கணக்குகளின் password கள் கசிந்துள்ள தகவல்கள் அனைவருக்குமே ஒருவித அச்சத்தை உருவாக்குகின்றன. நம்மை இந்த பிரச்சனையில் இருந்து காப்பாற்றிடவே Google நிறுவனம், Chrome பிரவுசரில் இயங்கக்கூடிய “Password Checkup” என்ற Add – On ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
Password Checkup எப்படி இயங்கும்
இன்டர்நெட் பயன்படுத்துகிறவர்கள் அவர்களது Chrome பிரவுசரில் “Password Checkup” என்ற Add – On ஐ டவுன்லோடு செய்துகொள்ள வேண்டும். பின்னர் நீங்கள் உங்களது Username மற்றும் password இவற்றை கொடுத்து login செய்யும் போது அந்த தகவல்கள் மிக கடுமையான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு சர்வருக்கு அனுப்பப்படும். Server இல் ஏற்கனவே ஹேக்கர்களால் திருடப்பட்ட username மற்றும் password தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும். உங்களுடைய password அந்த லிஸ்டில் வந்தால் உடனடியாக உங்களுக்கு Change Your Password என நோட்டிபிகேஷன் காட்டப்படும்.
அதேபோல உங்களது password எளிமையாக இருந்தால் உங்களது password ஐ மாற்றச்சொல்லியும் அறிவுரை வழங்கும் .
நம்முடைய username மற்றும் password ஐ கூகுள் படிப்பது அல்லது சேமித்து வைப்பது கிடையாது . அதேபோல என்கிரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக அனுப்பப்படுவதனால் இடைமறித்து எவராலும் உங்களுடைய விவரங்களை அறிந்துகொள்ள முடியாது .
password தான் தற்போது மிகவும் பாதுகாப்பனதாக வைத்துக்கொள்ளவேண்டியது . நம்முடைய password திருடப்பட்டாலும் கூட நமக்கு அது தெரிவது இல்லை . ஆனால் இந்த வசதியின் மூலமாக நமக்கு அந்த கவலை இல்லை .
பயன்படுத்தி பாருங்கள் , உங்களது அனுபவத்தை இங்கே பதிவிடுங்கள்.
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
TECH TAMILAN
இதையும் படிங்க,