Site icon Tech Tamilan

ஆன்லைனில் ரூ 25000 திருட்டு, மீட்ட சென்னை காவல்துறை | Online Scam

Online Scam

சென்னையில் ரூ 25,000 ஆன்லைனில் திருடப்பட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட சென்னை காவல்துறை உடனடியாக அந்த பணத்தை மீட்டது.

இன்டர்நெட் மற்றும் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துகிற அனைவருக்கும் அதை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்துவது என்பது குறித்த அடிப்படை புரிதல் இருப்பதில்லை. அவர்களை குறிவைத்து ஆன்லைன் திருட்டு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

சென்னை முகலிவாக்கத்தில் இருக்கக்கூடிய ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் யாரென்றே தெரியாத ஒரு நபர் அனுப்பிய லிங்கை கிளிக் செய்து சாப்பாடு ஆர்டர் செய்திடும் ஆப் ஒன்றினை கிளிக் செய்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு தெரியாமலே ரூ 25000 அவருடைய வங்கி சேமிப்புக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த நபர் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் எல்லைக்கு உட்பட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் இந்த வழக்கினை விசாரித்து புகார் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பணத்தை மீட்டு உரிய நபரின் வங்கிக்கணக்கில் செலுத்தினர்.

இந்த திருட்டு எப்படி நடைபெற்றது என விளக்கிய போலீசார், ‘அனுப்பப்பட்ட லிங்கில் உள்ள அப்ளிகேஷனில் புரோகிராம் ஒன்று எழுதப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட புரோகிராம் வங்கியிலிருந்து வரும் எண்ணை இன்னொரு மொபைல் எண்ணுக்கு ரகசியமாக பார்வேர்டு செய்துவிடுகிறது என்பதை கண்டறிந்தனர்.

எப்படி தப்பித்துக்கொள்வது?

வங்கிகள் அறிவுறுத்தும் ஒரே விசயம், உங்களுக்கு அனுப்பப்படும் எண்ணை பிறரிடம் பகிராதீர்கள் என்பது தான். ஆனால் அதனையும் தாண்டி திருடர்கள் இப்படி பிஷ்ஷிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தெரியாமலேயே  நம் பணத்தை திருடி விடுகின்றனர்.

இக்காலத்தில் பெரும்வான்மையான பிள்ளைகள் தங்களது  பெற்றோர்களுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுக்கிறார்கள். அவர்களிடம் இதுபோன்ற பிரச்சனைகளை பிள்ளைகள் விளக்கி கூறிட வேண்டும்.

படிக்காதவர்கள் மட்டுமே இதுபோன்ற பிரச்சனைகளில் ஏமாறுவதில்லை. படித்தவர்களும் ஏமாறுகிறார்கள்.

அப்ளிகேஷன்களை பிளேஸ்டோர் அல்லாத இடங்களில் டவுன்லோட் செய்வதை தவிருங்கள். பிறர் அனுப்பக்கூடிய லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்.

பிறருக்கும் இந்தப்பதிவை பகிருங்கள்.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version