Site icon Tech Tamilan

OnePlus 7 OnePlus 7 Pro Launch event Specials,features in Tamil

OnePlus 7 OnePlus 7 Pro Launch event Specials in Tamil

OnePlus 7 OnePlus 7 Pro Launch event Specials in Tamil

OnePlus 7 OnePlus 7 Pro Launch event Specials in Tamil

One Plus Launch Event Specials

கடந்த 2018 மற்றும் இந்த ஆண்டின் முதல் காலாண்டு என அனைத்திலும் முன்னனி வகிக்கின்ற ஸ்மார்ட் போன் உலகின் தற்போதைய ஜாம்பவான் OnePlus, தனது OnePlus 7 OnePlus 7 Pro குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018 மற்றும் இந்த ஆண்டின் முதல் காலாண்டு என அனைத்திலும் முன்னனி வகிக்கின்ற ஸ்மார்ட் போன்  உலகின் தற்போதைய ஜாம்பவான் OnePlus, தனது OnePlus 7 OnePlus 7 Pro குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனர் கார்ல் பேய் (Carl Pei) பல தகவல்களை தொகுத்து வழங்கினார். இதுதவிர இந்த நிகழ்வு நேரடியாக நியூயார்க் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் ஒளிபரப்பப்பட்டது.

 

OnePlus 7 OnePlus 7 Pro ஆகிய இரண்டு போன்களிலும் புதிய Qualcomm snapdragon 855 புராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. OnePlus 7 Pro பல சிறப்பம்சங்களுடன் களமிறங்குகிறது. முழு அளவுள்ள டிஸ்பிலே, மேற்புறமாக எழும்பி புகைப்படம் எடுக்கும் கேமரா தொழில்நுட்பம், பின்பக்க மூன்று ரியர் கேமராக்கள் என கலக்குகிறது.

நாம் ஏற்கனவே நமது இணையதளத்தில் ” OnePlus 7 Pro got A+ Rating | தரமான டிஸ்பிளே க்கான ரேட்டிங்” எனும் தலைப்பில் கட்டுரை ஒன்றினை பதிவிட்டு இருந்தோம் அல்லவா, அதனை உறுதிப்படுத்திடும் விதமாக சந்தையில் இருக்கும் போன்களிலேயே மிக வேகமாக இயங்கக்கூடிய ஸ்கிரீன் OnePlus 7 Pro வில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறுகிறது (6.7 இன்ச் Fluid AMOLED டிஸ்பிளே 90 Hz Refresh rate). அதேபோல இதுவரை வெளிவந்த OnePlus போன்களில், OnePlus 7 Pro வில் தான் அதிகபட்சமாக 12GB RAM கொண்ட மொபைல் வெளியிடப்பட இருக்கிறது.

 

OnePlus 7 Pro தான் முதலில் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை ரூ 48999.

OnePlus 7 வருகிற ஜூன் மாதம் தான் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை ரூ 32999.

 

OnePlus 7 :

 

6GB + 128GB >> Rs 32999

8GB + 256GB >> Rs 37999

 

OnePlus 7 Pro :

 

6GB + 128GB >> Rs 48999

8GB + 256GB >> Rs 52999

12GB + 256GB >> Rs 57999

 

நீங்கள் இந்த போன்களை அமேசான் இணையதளத்திலும், Oneplus ஷோரூம்களிலும் வாங்கிக்கொள்ளலாம்.


OnePlus 7 Pro Camera

ஒன்பிளஸ் 7 புரோ போனை பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருக்க முக்கிய காரணங்களில் ஒன்று அதன் கேமரா. முதலாவதாக செல்பி கேமரா, நீங்கள் செல்பி கேமராவை ஆன் செய்தவுடன் உட்புறத்தில்இருந்து கேமரா வெளியில் வரும். பிறகு நீங்கள் புகைப்படம் எடுக்கலாம். பலருக்கு இது புதுமையானதாக இருந்தாலும் மெக்கானிக்கல் முறைப்படி இயங்குகிற இதில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின்பக்க கேமரா பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. மூன்று ரியர் கேமராக்களை கொண்ட பின்பக்க 48 MP கேமராவில் இருக்கக்கூடிய சென்சார் சிறப்பான புகைப்படங்களை எடுக்க போதுமானதாக இருக்கிறது. மேலும் வார இதழ்களுக்கு அட்டைப்படங்கள் போடும் அளவிற்கான துல்லியத்தன்மையுடன் புகைப்படம் எடுக்க முடியுமாம். அதேபோல வெளிச்சம் குறைவான இடங்களிலும் புகைப்படம் எடுக்கிற விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

 


OnePlus 7 & OnePlus 7 Pro Difference

இரண்டு போன்களிலும் புதிய Qualcomm snapdragon 855 புராசஸர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனாலும் மிக முக்கிய வேறுபாடு வடிவமைப்பு (Design) தான். OnePlus 7 பார்ப்பதற்கு OnePlus 6T போன்றுதான் இருக்கும், ஆனால் OnePlus 7 Pro புதிய வடிவத்தில் இருக்கும், மேற்பக்க கேமரா என புதுமையோடு இருக்கும்.

 

கேமரா : OnePlus 7 இல் டூயல் லென்ஸ் கேமரா தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. OnePlus 7 Pro வில் ட்ரிபிள் லென்ஸ் கேமரா பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆகவே கேமரா விசயத்தில் OnePlus 7 Pro  தான் டாப்.

 

டிஸ்பிளே :

 

OnePlus 7 Pro: 6.67-inch QHD+ (3120×1440 pixels) resolution Fluid AMOLED display with 18.5:9 aspect ratio, HDR10 support and a pixel density of 516ppi.

 

OnePlus 7: 6.41 inches FHD+ Optic AMOLED display with water drop notch and 19.5:9 aspect ratio ..

 

பேட்டரி :

 

OnePlus 7 Pro: 4,000mAh with Warp Charge 30 (5V 6A) support

OnePlus 7: 3,700mAh with Fast Charge (5V 4A), similar to the OnePlus 6T)

 

உங்களது கருத்துக்களை கமெண்ட் இல் பதிவிடுங்கள்


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version