Site icon Tech Tamilan

Google Map New Update | ரெஸ்டாரெண்ட் ஆபர்களை இனி கூகுள் மேப்பில் பெறலாம்

Restrarunts offers in google map

Restrarunts offers in google map

Restrarunts offers in google map

Offers on Google Maps

இனி ரெஸ்ட்ராரென்ட் ஆபர்கள் குறித்த தகவல்கள் கூகுளின் மேப் இல் வரும் . இதனால் எளிமையாக Reviews , Ratings உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்ளலாம்.

தற்போது ஆன்லைன் மூலமாக உணவினை கொண்டு சேர்க்கும் Online Food Delivery யில் உபர் ஈட்ஸ் , ஜுமாட்டோ , ஸ்விகி போன்ற நிறுவனங்கள் முன்னனி வகித்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் போட்டிபோட்டுக்கொண்டு ஆபர்களை அள்ளிவீசிக்கொண்டு வருவதனால் Online Food Delivery மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தற்போது இவர்களுக்கு போட்டியாக கூகுள் தன்னுடைய கூகுள் மேப் இல் “Offers” எனும் புதிய வசதியினை கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே இருக்கின்ற நிறுவனங்களுக்கு சரியான சவாலாக இருக்கப்போகிறது.

Offers Tab in Google Maps

ஜூலை 11 அன்று டெக் உலகின் ஜாம்பவான் என அறியப்படும் கூகுள் தன்னுடைய கூகுள் மேப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி இந்தியாவில் இருக்கக்கூடிய பயனாளர்கள் சிறந்த உணவகங்களை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான ஆலோசனையை கூகுள் மேப்பில் இருந்து பெறலாம். அதோடு மட்டுமில்லாமல் தற்போது “Offers” எனும் புதிய வசதியினை அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள்.

 

இதற்காக கூகுள், EazyDiner எனும் நிறுவனத்தோடு இணைந்திருக்கிறது. தற்போது வரைக்கும் மும்பை, கொல்கத்தா , சென்னை ,டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இருக்கின்ற உணவகங்களில் வழங்கப்படுகிற ஆபர்ஸ் குறித்த தகவல்கள் தான் இதில் கிடைக்கும். வரும் காலங்களில் இதன் அளவு நிச்சயமாக கூடும். கூடுதலாக, ஜூலை 15 முதல் அடுத்த 15 நாட்களுக்கு EazyDiner  இன் 25% ஆபரை பெற்று மகிழலாம் என கூகுள் அறிவித்து இருக்கிறது.

தற்போது செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற Uber Eats , Zoomato , Swiggy போன்ற நிறுவனங்களுக்கு Google  மற்றும் EazyDiner இன் வருகை பின்னடைவை கொடுக்கும் என கூறப்படுகிறது. போட்டிகள் அதிகரித்தால் ஆபர்கள் அதிகரிக்கலாம் என்ற பார்வையில் நீங்கள் சந்தோசமாக இருக்கலாம்





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version