Site icon Tech Tamilan

New Time Limit for PUBG MOBILE game | பப்ஜி கேமிற்கு நேரக்கட்டுப்பாடு

time limit for pubg

time limit for pubg

time limit for pubg

TIME LIMIT FOR PUBG

தடைகளை தவிர்க்க, நாளொன்றுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட முடியும் என்கிற கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது பப்ஜி

PUBG BAN


பப்ஜி விளையாட்டு இளைஞர்களை அடிமைப்படுத்துவதாக கூறி குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வந்தது. இது போன்ற தடைகளை தவிர்க்க, நாளொன்றுக்கு குறிப்பிட்ட நேரம் மட்டுமே விளையாட முடியும் [Time limit for PUBG Mobile] என்கிற கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளது பப்ஜி.

 பப்ஜி எனும் விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. பல இளைஞர்கள் தொடர்ந்து பல மணிநேரம் இந்த விளையாட்டையே விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற புகார் எழுந்தது. தெலுங்கானா மாநிலத்தை சேந்த சாகர் என்னும் இளைஞர் தொடர்ச்சியாக பப்ஜி விளையாடியதால் கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதனை போல பல சம்பவங்கள் தினம் நடந்து வருகிறது. ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் பொது இடங்களில் பப்ஜி விளையாடக்கூடாது என விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மீறிய இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிற மாநில அரசுகளும் பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்க பரிசீலனை செய்து வருகின்றன. இதற்க்கு அனைவரின் மத்தியில் இருந்தும் வரவேற்பு வந்துகொண்டு இருக்கிறது.

 பப்ஜி கேமிற்கு குஜராத்தில் தடை ஏன்?

TIME LIMIT FOR PUBG MOBILE


இதே நிலை தொடர்ந்தால் நாடு முழுமைக்கும் தடை விதிக்கப்படலாம் என்பதனை உணர்ந்ததாலோ என்னவோ தற்போது “இந்தியாவில் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் மட்டுமே விளையாட முடியும்” என்கிற கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஒரு நாளானது காலை 5.30AM க்கு துவங்கும், நீங்கள் 6 மணி நேரத்திற்கும் அதிகமாக விளையாடினால் உங்களுக்கு ஒரு நோட்டிபிகேஷன் வரும் “You have played the game for 6th today. Please come back at next day 5:30:00” இந்த விவரங்கள் புதிய அப்டேட் இல் குறிப்பிடப்படவில்லை  இந்த கட்டுப்பாட்டை வரவேற்கும் பலர், 6 மணிநேரம் என்பது அதிகம் என குறிப்பிடுகின்றனர். தற்போதைய நிலையில் மொபைலில் விளையாடுவோருக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடு வந்திருக்கிறது. கணினி,கன்சோல் உள்ளிட்டவற்றில் இந்த நேர கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஒருவர் பல அக்கவுண்டுகளில் விளையாண்டால் கண்டறிந்து தடுக்க முடியாது என்பது போன்ற குறைபாடுகள் இதில் இருக்கின்றன.  6 மணி நேர கட்டுப்பாடு சரியானதா? இல்லை இந்த நேரமும் குறைக்கப்பட வேண்டுமா?  நீங்கள் அல்லது உங்களது நண்பர்கள் தினம் எவ்வளவு நேரம் விளையாடுவார்கள்?  உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள் 

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version