[easy-notify id=823]
Highlights :
> இனி பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள தொலைக்காட்சி சேனல்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்
> ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே மாதந்தோரும் பணம் கட்டி பார்த்துக்கொள்ளவேண்டும் என்பது டிராய் இன் புதிய விதி
> டிராய் இன் புதிய விதி டிசம்பர் 29 க்கு பிறகு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சென்னை கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் வழக்கு காரணமாக ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
டிராய் (TRAI) புதியவிதி கொண்டுவந்தது ஏன்?
முன்னர் தாங்கள் பார்க்காத சேனல்களுக்கும் பணம் செலுத்துவதாக எழுந்த புகார் புதிய விதிக்கான காரணம்
இந்தியாவை பொறுத்தவரையில் TRAI எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தான் கேபிள் டிவி , மொபைல் சேவை உள்ளிட்ட தொலைத்தொடர்பு சம்பந்தமான விசயங்களை கண்காணித்து மாற்றங்களை செய்துவருகின்றது .
அந்தவகையில் கேபிள் டிவி கட்டண முறையிலும் டிராய் மாற்றத்தைக்கொண்டுவந்துள்ளது . ஏற்கனவே இருக்கின்ற விதிப்படி அனலாக் (analog) முறையில் செயல்பட்டுவந்த டிவி இணைப்புகள் அனைத்தையும் டிஜிட்டல் (digital) முறைப்படியே வழங்கவேண்டும் . அதற்கான செட்ஆப் பாக்ஸ்களை நிறுவிட வேண்டுமென்பது கட்டாயம் .
பெரும்பாலான வீடுகளில் செட்ஆப் பாக்ஸ் பொறுத்தப்பட்டுவிட்ட சூழலில் இப்போது “ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தனியே பணம் செலுத்தி பார்க்கக்கூடிய புதிய வசதியினை கொண்டுவந்துள்ளது . இப்புதிய விதியின்படி இனி தேவைப்படும் ஒவ்வொரு சேனலையும் பயனாளர்கள் தேர்ந்தெடுத்து பார்த்துக்கொள்ளலாம் “.
டிராய் விதிப்படி புதிய கட்டணவிகிதம் எவ்வளவு ?
உங்களது வீட்டில் கேபிள் இணைப்பு இருக்கின்றது எனில் நீங்கள் கட்டாய கட்டணமாக ரூபாய் 130 மற்றும் வரி சேர்த்து 150+ ரூபாய் கட்டணமாக செலுத்திடவேண்டும் . இதில் வழக்கம்போல சில சேனல்களை இலவசமாக பார்க்கலாம் .
அதுபோக நீங்கள் பார்க்க விரும்பும் சேனல்களுக்கு தனித்தனியே பணம் கட்டி பார்க்க வேண்டும் .
DTH, ஆப்ரேட்டர்களுக்கான விதி
> ஒவ்வொரு சேனலும் கட்டணமுறைப்படியே வழங்கப்பட வேண்டும்
> இலவச சேனல்களை நீக்க கூடாது
> அனைத்து DTH மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களும் சேனல்களை ஒரே விலையிலேயே விற்க வேண்டும்
> இலவச சேனல்களில் 100 சேனல்கள் இருக்கும்
> இந்த 100 சேனலில் தூர்தர்சனின் 26 சேனல்கள் கட்டாயமாக இடம்பெற வேண்டும்
> இலவச சேனல்களில் திரைப்படம் ,குழந்தைகள் பொழுதுபோக்கு , விளையாட்டு , இசை , பக்தி , அறிவியல் போன்ற தளங்களில் குறைந்தபட்சம் 5 தளங்களிலாவது இருக்க வேண்டும்.
தமிழில் வரக்கூடிய இலவச சேனல்கள் எவை ?
இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளதன்படி இலவச சேனல்களாக இருப்பவை பொதிகை , கலைஞர் டிவி , புதியதலைமுறை உள்ளிட்ட சில தமிழ் சேனல்களுடன் சேர்ந்து பிற பிராந்திய சேனல்களும் அடங்கியிருக்கும் . ஆனால் மற்ற பிராந்திய சேனல்களை பெரும்பாலானவர்கள் பார்ப்பதில்லை . (இலவச சேனல்கள் மாற்றப்படவும் வாய்ப்பிருக்கிறது)
தற்போது தமிழக மக்கள் விரும்பி பார்க்கக்கூடிய சன் டிவி, ஜீ டிவி , விஜய் டிவி உள்ளிட்டவைகளுக்கு கட்டணம் செலுத்தியே பார்க்கவேண்டிய சூழல் தற்போது நிலவுகின்றது .
புதிய கேபிள் TV கட்டணம் வரமா சாபமா?
முன்பு அதிக மாதாந்திர கட்டணம் கட்டி பயன்படுத்தும்போது பார்க்காத பல சேனல்களும் வருகின்றன .அதற்கும் தேவையில்லாமல் பணம் செலுத்துகிறோம் என புலம்பியவர்களுக்கு இப்போது கட்டணம் சிறிது குறையலாம் .
ஆனால் கேபிள் இணைப்போ அல்லது குறைந்தபட்ச கட்டணத்திலோ தொலைக்காட்சியினை கண்டு ரசித்தவர்களுக்கு இப்புதிய கட்டண முறையானது செலவினை அதிகரிக்கவே செய்யும் .
குறைந்தபட்சம் 200 ரூபாயாவது செலுத்த வேண்டி இருக்கும்
ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலும் விளம்பரத்தின் மூலமாகவே சம்பாதிக்கிறார்கள் . அவர்களின் அடிப்படையே (TRP Rating) முற்றிலுமாக பார்ப்பவர்களின் எண்ணிக்கையை சார்ந்தே இருக்கின்றது . ஆகவே கட்டணத்தை எவ்வளவு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு குறைப்பார்கள் என டிராய் கூறுகிறது .
எப்படி ஜியோ வருகைக்கு பிறகு போட்டிபோட்டுக்கொண்டு கட்டண குறைப்பு நடந்ததோ அதனைப்போலவே இதிலும் நடக்கலாம் என எதிர்பார்ப்போம் . அதிக கட்டணம் உள்ள சேனல்களை ஆரம்பத்தில் தவிர்ப்பதே கட்டண குறைப்புக்கு வித்திடும்.
இப்போதே கமல்ஹாசன் ஒரு விளம்பரத்தில் தோன்றி 100 ரூபாய்க்கு மதிப்புள்ள ஸ்டார் குழும சேனல்களை 25 ரூபாய்க்கு வழங்குவதாக சொல்ல ஆரம்பித்துவிட்டார், மற்ற நிறுவனங்களும் இதனை செய்கின்ற பட்சத்தில் குறைந்த விலையில் கண்டு ரசிக்க இயலும்.
புதிய விதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என்பதனை டிராய் சில மாதங்களுக்கு பிறகு அறிந்து மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
TECH TAMILAN