Site icon Tech Tamilan

இரண்டு நாட்கள் நெட்பிளிக்ஸ் FREE | Netflix free subscription for 2 days

Netfix Free

புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இரண்டு நாட்கள் இலவசமாக நெட்பிளிக்ஸ் ஐ பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பினை அந்நிறுவனம் இந்தியப்பயனாளர்களுக்கு வழங்குகிறது. இதற்கு கார்டு தகவல்களைக்கூட அளிக்க வேண்டிய தேவை இல்லை.

இந்த ஆண்டின் துவக்கத்தில் 30 நாள் இலவச ட்ரையல் வசதியை இந்தியாவிலும் அதனைத் தொடர்ந்து உலகம் முழுமைக்கும் நிறுத்தியது நெட்பிளிக்ஸ் நிறுவனம். ஏற்கனவே மார்க்கெட்டில் அமேசான் பிரைம், வூட், ஜீ5, ஹாட்ஸ்டார் போன்ற OTT தளங்கள் போட்டியாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தான் நெட்பிளிக்ஸ் நிறுவனம் Streamfest என்ற ஆபரை இந்திய பயனாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது. அதன்படி டிசம்பர் 5 முதல் டிசம்பர் 6 இரவு வரைக்கும் 48 மணி நேரத்திற்கு நெட்பிளிக்ஸ் ஐ பணம் கட்டாமல் இலவசமாக பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் இருப்பவர்கள்  நெட்பிளிக்ஸ் ஆப்பை இன்ஸ்டால் செய்து கணக்கை துவங்கி இரண்டு நாட்களுக்கு இலசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். முன்னர் 30 நாள் இலவச ட்ரையல் வசதியை பயன்படுத்திட கார்டு தகவல்களை கொடுப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. தற்போது கார்டு தகவல்களை கொடுக்கவேண்டிய தேவை இல்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு நாட்களும் பணம் கட்டி பார்பவர்களைப்போலவே அனைத்து சீரிஸ், படங்கள் என அனைத்தையும் 48 மணி நேரத்திற்குகண்டுகளிக்க முடியும். விரும்புகிறவர்கள் தங்களது டிவியிலும் கூட லாகின் தகவலை உள்ளீடு செய்து பார்க்கலாம்.

தங்களிடம் இருக்கக்கூடிய சிறந்த படங்கள் மற்றும் சீரிஸ் உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு செல்வதற்கு Streamfest ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்புவதாகவும் இதன் மூலமாக நிறைய பேர் பணம் கட்டி subscribe செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் Netflix COO கிரெக் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

மாதம் ரூ199 உள்ளிட்ட பல்வேறு பிளான்களை இந்தியப்பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது Netflix. இந்த நிறுவனத்தின் புதிய முயற்சி வெற்றியைத்தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version