Site icon Tech Tamilan

பூமியில் உயிரினம் தோன்றியது எப்படி? விண்கல்லில் தரை இறங்கிய நாசாவின் விண்கலம் | NASA’s OSIRIS-REx spacecraft

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக நாசாவின் OSIRIS-REx விண்கலம் வேகமாக சென்றுகொண்டிருக்கும் விண்கல் [asteroid ] ஒன்றில் தரையிறங்கிய நிகழ்வு பார்க்கப்படுகிறது. நாசாவின் விண்கலம் விண்கல்லில் இருந்து சிறிதளவு மாதிரிகளையும் கொண்டுவர இருக்கிறது. வரலாற்று சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

NASA – OSIRIS

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக நாசாவின் OSIRIS-REx விண்கலம் வேகமாக சென்றுகொண்டிருக்கும் விண்கல் [asteroid ] ஒன்றில் தரையிறங்கிய நிகழ்வு பார்க்கப்படுகிறது. நாசாவின் விண்கலம் விண்கல்லில் இருந்து சிறிதளவு மாதிரிகளையும் கொண்டுவர இருக்கிறது. வரலாற்று சாதனையாக இது பார்க்கப்படுகிறது.


நேற்று செவ்வாய்க்கிழமை 6.10 PM EST நேரப்படி நாசாவின் OSIRIS-REx விண்கலமானது விண்கல்லில் இறங்கிவிட்டதாக சிக்னலை நாசாவின் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பியது. வெறும் சில நொடிகளுக்கு மட்டும் விண்கல்லின் மேற்பரப்பை தொட்டுக்கொண்டிருக்கும் விண்கலமானது காற்றை உறிஞ்சும் அமைப்பு போல செயல்பட்டு விண்கல்லின் மேற்பரப்பில் இருக்கும் மாதிரிகளை சேகரித்துக்கொண்டது. அந்த விண்கல்லின் பெயர் பென்னு [Bennu]. பெண்னுவில் பெறப்பட்ட மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட்டு ஆராய்ச்சி செய்யப்படும். 

 “This is history. It’s amazing.” என தெரிவித்து இருக்கிறார் இந்த திட்டத்தை தலைமையேற்று நடத்திய டான்டே லாரெட்டா. 

மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் மிகப்பெரிய சாதனை

பூமியில் இருந்து 334 மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் தான் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவின் வரலாற்றில் பூமிக்கு வெளியே ஒரு விண்கல்லில் இருந்து மாதிரிகளை சேகரிப்பது இதுவே முதல்முறை. மேலே குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 18 நிமிடங்களுக்கு முன்னாலேயே இந்த நிகழ்வுகள் நடைபெற்று இருக்கும். விண்கலம் பூமிக்கு அனுப்பிய தகவல் வந்து சேர 18 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

தற்போது பெறப்பட்ட மாதிரிகளின் அளவை இங்கிருந்தபடியே நாசாவின் ஆராய்ச்சியாளர்கள் அளவிடுவார்கள். அது போதுமானதாக இருக்கின்றபட்சத்தில் பூமிக்கு விண்கலத்தை கொண்டு வரும் பணியை ஆரம்பிப்பார்கள். ஒருவேளை எடுக்கப்பட்ட மாதிரிகள் போதவில்லை என்றால் மீண்டும் ஒருமுறை விண்கல்லை நெருங்கி மாதிரியை எடுக்கும் பணியை மேற்கொள்ளுவார்கள். 

 

‘விண்கல்லை முத்தமிட்ட நாசாவின் விண்கலம்’ 

 

OSIRIS-REx 2016 இல் தான் பென்னுவை நோக்கி அனுப்பப்பட்டது. தற்போது மாதிரிகளை பெற்றுவிட்ட விண்கலம் மீண்டும் பூமிக்கு வருவதற்கு தயார்படுத்தப்பட்டால் 2023 இல் பூமியை வந்தடையும் என சொல்லப்படுகிறது. 

 

The back-away burn is complete 🛑✅ I'm now moving to a safe distance away from Bennu. pic.twitter.com/bXk2ufSneS

— NASA's OSIRIS-REx (@OSIRISREx) October 20, 2020

அறிவியலாளர்கள் கருதுகோளின்படி இது போன்ற விண்கற்கள் மூலமாகத்தான் பூமிக்கும் பிற கிரகங்களுக்கும் உயிரினங்கள் பரப்பப்படுகின்றன என சொல்லப்படுகிறது. பூமியில் உயிரினம் தோன்றியதற்கு பல்வேறு கருத்தாக்கங்கள் சொல்லப்பட்டாலும் கூட, பென்னு என்ற விண்கல்லில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை ஆராயும் போது புதுவிதமான முடிவுகள் கிடைக்கப்பெற வாய்ப்புகள் அதிகம் உண்டு. 

 

ஜப்பான் இதேபோன்றதொரு முயற்சியை செய்துவருகிறது. Hayabusa2 எனும் விண்வெளி திட்டத்தை நடத்திவருகிறது. 4.5 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் Ryugu எனும் விண்கல்லில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளோடு பூமிக்கு வந்துகொண்டு இருக்கிறது. வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா பாலைவனப்பகுதியை அது அடையும் போது விண்கல்லில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளோடு பூமியை வந்தடைந்த முதல் திட்டம் எனும் பெருமையை அது பெறும். 

 

பூமிக்கு வெளியே மில்லியன், பில்லியன் தொலைவுக்கு அப்பால் விண்கலங்களை அனுப்பி சோதித்து வருகிறது மனித இனம். எவ்வளவு ஆச்சர்யமான விசயம் தெரியுமா இது, நம் நாடும் பிள்ளைகளும் இதுபோன்ற மாபெரும் திட்டங்களை நடத்திட வேண்டுமென்ற ஆவல் அதிகம் இருக்கிறது. தேடல் இருந்தால் வெற்றி நிச்சயம். 

 






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version