Site icon Tech Tamilan

ராணுவ தளவாட ஏற்றுமதியில் சாதிக்கப்போகும் இந்தியா – Defence Expo வில் மோடி

ராணுவ தளவாட ஏற்றுமதியில் சாதிக்கப்போகும் இந்தியா - Defence Expo வில் மோடி

ராணுவ தளவாட ஏற்றுமதியில் சாதிக்கப்போகும் இந்தியா - Defence Expo வில் மோடி

ராணுவ தளவாட ஏற்றுமதியில் சாதிக்கப்போகும் இந்தியா - Defence Expo வில் மோடி

Defence Expo

2014 இல் 2000 கோடி அளவிற்கு ராணுவ தளவாடங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 17000 கோடியாக அது உயர்ந்திருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 35000 கோடிக்கு [5 பில்லியன்] ஏற்றுமதி செய்வதே இலக்கு – பிரதமர் மோடி


இந்தியாவிற்கு உலகிற்கு தேவையானவற்றை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம் இதுதான் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசின் Make In India திட்டத்தின் நோக்கம். அதன்படி ராணுவ தளவாட உற்பத்தியில் இந்தியா பங்குபெற துவங்கி இருக்கிறது. உலக நாடுகளை இந்தியாவில் உற்பத்தி செய்யவைக்கும் முயற்சியாக “Defence Expo 2020” என்ற நிகழ்வை பாரத பிரதமர் மோடி அவர்கள் உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் பிப்ரவரி 05,2020 அன்று துவங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 38 நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் ராணுவ தலைவர் பங்குபெறுகின்றனர். 11 வது முறை நடக்கும் இந்த கண்காட்சியில் 172 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 1028 நிறுவனங்கள் பங்குபெறுகின்றன.

ராணுவ தளவாட ஏற்றுமதியில் கால்பதிக்கும் இந்தியா

இந்த நிகழ்வை துவங்கி வைத்த பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் 35000 கோடி அளவிற்கு ராணுவ தளவாட ஏற்றுமதியில் ஈடுபட இந்தியா உறுதிபூண்டுள்ளது எனவும் அதற்கு உறுதுணையாக உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதன் மூலமாக ஆசியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவாகும். இந்தியாவினுடைய இந்த முயற்சி பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவோ அல்லது எந்த நாட்டுக்கும் எதிரானதாகவோ இருக்காது எனவும் தெரிவித்தார் .

இந்த நிகழ்வில் 50,000 கோடி அளவிலான முதலீடுகள் வரக்கூடிய 23 ஒப்பந்தங்களில் உத்திரபிரதேச அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என கூறப்படுகிறது. இதன்மூலமாக இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் என உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உபகரணங்களை [defence hardware] இறக்குமதி செய்திடும் இரண்டாவது பெரிய நாடாக சவுதி அரேபியாவிற்கு அடுத்ததாக இந்தியா இருந்தது. நாட்டின் பெரும்பான்மையான முதலீடு பாதுகாப்புத்துறைக்கு கொடுக்கப்படவேண்டிய சூழலும் இருந்தது. இந்த சூழலில் தான் இந்தியாவிலேயே பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கவும், அடுத்தகட்டமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே இந்தியாவில் ராணுவத்திற்கு தேவையான பீரங்கித் துப்பாக்கிகள், விமானம் தாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் போர் ஹெலிகாப்டர்கள் உருவாக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் திறமையாளர்கள், தொழில்நுட்பம், புதுமை, கட்டுமானங்கள் என அனைத்துமே இருக்கிறது. அதேபோல சட்ட வழிமுறைகளும் எளிமையாக்கப்பட்டு முதலீடு செய்பவர்களின் முதலீட்டுக்கு பாதுகாப்பு, பயன் என அனைத்தையும் கொடுக்கும் விதமாக இந்தியா செயல்படும் என பிரதமர் குறிப்பிட்டார்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version