Site icon Tech Tamilan

பொய்களை தோலுரிக்கும் ட்விட்டர் : சபாஷ் | Manipulated Media

Manipulated Media

Manipulated Media

பொய்யான வீடியோக்கள் அல்லது புகைப்படங்கள் அல்லது கருத்துக்கள் வெளியிடப்பட்டால் அது பொய் என கண்டறிந்து வெளிப்படுத்தும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது ட்விட்டர் நிர்வாகம்.


சமூகவலைத்தளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை கட்டுப்படுத்துவது தான் அந்நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தலைவலி. இதில் ட்விட்டர் நிர்வாகம் சில நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி எவரேனும் ஏதேனும் உண்மையை மறைத்தோ அல்லது திரித்தோ செய்திகளை வெளியிட்டால் உடனடியாக ட்விட்டர் நிர்வாகம் அதனை கண்டறிந்து பொய்யான செய்தி [Manipulated Media] என வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

 

அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலானது. டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் பாதுகாப்பு படை வீரர் விவசாயி ஒருவரை தாக்கும் புகைப்படம் வெளியானது. காங்கிரஸ் முன்னனித்தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் அந்த போட்டோவை பகிர வைரலானது. 

Rahul Gandhi must be the most discredited opposition leader India has seen in a long long time. https://t.co/9wQeNE5xAP pic.twitter.com/b4HjXTHPSx

— Amit Malviya (@amitmalviya) November 28, 2020

பாஜகவின் ஐடி பிரிவை சேர்ந்த அமித் மால்வியா, கட் செய்யப்படாத வீடீயோவை பார்த்ததில் அந்த விவசாயி மீது அடி படவே இல்லை எனவும் திரித்து புகைப்படம் வெளியிடப்பட்டது எனவும் தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டு இருந்தார். 

 

அது பொய் என கூறியுள்ளது ட்விட்டர். உண்மையை ஆராய்ந்ததில் அந்த விவசாயி மீது அடி பட்டுள்ளது என்பது உண்மை என தெரிய வந்துள்ளது. ஆகவே தான் Manipulated Media என ட்விட்டர் குறிப்பிட்டுள்ளது. அந்த பட்டனை அழுத்திடும் போது BoomLive மற்றும் AltNews ஆகிய நிறுவனங்கள் உறுதிப்படுத்திய செய்திக்கு செல்கிறது.






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version