Site icon Tech Tamilan

கூடங்குளம் அணுமின் நிலைய கணினி ஹேக் செய்யப்பட்டது உண்மையா?

கூடங்குளம் அணுமின் நிலைய கணினி ஹேக் செய்யப்பட்டது உண்மையா?

கூடங்குளம் அணுமின் நிலைய கணினி ஹேக் செய்யப்பட்டது உண்மையா?

கூடங்குளம் அணுமின் நிலைய கணினி ஹேக் செய்யப்பட்டது உண்மையா?

Cyber Attack is TRUE

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு கணினி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உண்மை தான் என NPCIL தெரிவித்துள்ளது



Click Here! Get Updates On WhatsApp

சில தினங்களாகவே கூடங்குளம் அணுமின்நிலையம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாதனாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனை கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் உடனே மறுத்தார்கள். இந்த சூழலில், இந்திய அணுசக்தி கழகம் [Nuclear Power Corporation of India] ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இருக்கக்கூடிய ஒரு கணினி சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உண்மை தான் என தெரிவித்துள்ளது.

உண்மை இதுதான்

சமூகவலைத்தளத்தில் செய்திகள் பரவியவுடன் கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரியான ராமதாஸ் என்பவர் இவ்வாறு தெரிவித்திருந்தார் “கூடங்குளம் எந்தவித சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை. கூடங்குளம் அணுமின்நிலையம் மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த அணுமின்நிலையமும் இன்டர்நெட் உடன் இணைக்கப்படுவது இல்லை. மேலும் அவை தனித்துவமான இணைப்பினை பயன்படுத்துகின்றன. எனவே ஹேக் செய்வது என்பது முடியாத காரியம்” என்றார். 

 

ஆனால் இந்திய அணுசக்தி கழகம் ஒரு கணினி மட்டும் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது உண்மை தான் என தெரிவித்துள்ளது. அது ஏனெனில் அந்த குறிப்பிட்ட கணினியை இயக்கிய நபர் வேறு அலுவலக பணிகளுக்காக அந்த கணினியை இன்டர்நெட் உடன் இணைத்திருக்கிறார். இதனால் தான் இந்த தாக்குதல் அரங்கேறி இருக்கிறது. மேலும் அந்த குறிப்பிட்ட கணினி அணுமின்நிலைய தொடர்பில் இருந்து தனிமை படுத்தப்பட்டுள்ளதாகவும் DAE சிறப்பு நிபுணர்கள் இதனை ஆராய்வார்கள் என தெரிவித்துள்ளது.

 

நிச்சயமாக இது கவனம் செலுத்திட வேண்டிய பிரச்சனை தான். இந்திய அணுசக்தி கழகம் மற்றும் அதன் திறன்மிக்க அதிகாரிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள். இதை சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதமாக நடத்திட வேண்டிய அவசியம் இல்லை.

https://youtu.be/sF3GDkByTjg?list=PLpITvuAlZQLBu9xa8qbYn4yeQ_Kn0oMxNhttps://youtu.be/lYP1gHnOAws?list=PLpITvuAlZQLBu9xa8qbYn4yeQ_Kn0oMxNhttps://youtu.be/ZkwS0PrrTTc?list=PLpITvuAlZQLBu9xa8qbYn4yeQ_Kn0oMxNhttps://youtu.be/AvNTUkiAEL4?list=PLpITvuAlZQLBu9xa8qbYn4yeQ_Kn0oMxNhttps://youtu.be/ev88W_fx1yM?list=PLpITvuAlZQLBu9xa8qbYn4yeQ_Kn0oMxN

Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version