Site icon Tech Tamilan

மொபைலுக்கு கீபோர்டு தேடுகிறீர்களா? |  Keyboard For Mobile Phone

Keyboard For Mobile Phone in tamil

Keyboard For Mobile Phone in tamil

இந்த வேகமான உலகில் நாம் வேலைகளை மிகவும் வேகமாக செய்திட வேண்டி இருக்கிறது. வெறும் கணினியில் வேலை செய்தால் மட்டும் வேலைகளை வேகமாக நாம் செய்திட முடியாது. வேகமாக பணிகளை செய்திட விரும்பும் பலர் கம்ப்யூட்டர், டேப்லெட், மொபைல் போன் என பல்வேறு கருவிகளை பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு, மூன்று கருவிகளிலும் செயல்படும் கீபோர்டு [Multi Device Keyboard] நிச்சயமாக தேவைப்படும். 

நீங்களும் அப்படிப்பட்ட கீபோர்டு ஒன்றினை தேடுகிறவராக இருந்தால் நிச்சயமாக இந்தப்பதிவு பயன்படும். Keyboard For Mobile Phone என தேடுகிறவர்களுக்கு இந்தப்பதிவு உதவும்.

Best Keyboard For Mobile Phone

உங்களது மொபைல் போனில் டைப் செய்வது மிகவும் கடினமான செயல். குறிப்பாக, ஒரு கட்டுரை போன்றவற்றை டைப் செய்திட நினைக்கும்போது உங்களுக்கு கடினமாக இருக்கும். நீங்கள் மிகவும் எளிதாக மொபைல் போனில் டைப் செய்வதற்கு இங்கே சில கீபோர்டுகளை பரிந்துரை செய்துள்ளேன்.

குறிப்பு : இந்த கீபோர்டுகளை நீங்கள் வாங்குவதற்கு முன்னதாக ரிவ்யூக்களை பாருங்கள்.

Portronics Bubble Multimedia Wireless Keyboard

லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் பயன்படுத்த தகுந்த கீபோர்டு. Bluetooth மற்றும் Wireless என இரண்டு விதங்களிலும் இதனை இணைக்க முடியும். அமேசானில் இதற்கு 3.9 ரேட்டிங் தரப்பட்டுள்ளது. இந்த கீபோர்டுக்கு நல்ல ரிவியூ பலரால் வழங்கப்பட்டுள்ளது. இருப்பதிலேயே குறைவான விலையில் கிடைக்கும் கீபோர்டு இதுதான். 

விலை : ₹969

Click Here To Buy

Logitech K480 Wireless Multi-Device Keyboard

பல்வேறு இயங்குதளங்களில், பல்வேறு கருவிகளில் பயன்படுத்த ஏதுவான கீபோர்டு. Bluetooth, USB மற்றும் Wireless என மூன்று விதங்களிலும் இதனை இணைக்க முடியும். ஒரே நேரத்தில் மூன்று கருவிகளில் இதனை இணைக்க முடியும். 

இதன் விலை :  ₹2,495

Click Here To Buy

Amazon Basics Wireless Bluetooth Multi-Device Keyboard

நீங்கள் நீண்ட காலத்திற்கு பல்வேறு கருவிகளில் பயன்படுத்த ஏதுவான கீபோர்டு ஒன்றினை தேடினால் இது உங்களுக்கு சரியானதாக இருக்கும். உங்களது டேப்லேட் மற்றும் மொபைல் போனை முன்னே வைத்துக்கொண்டு டைப் செய்திட ஏதுவாக ஒரு வசதியும் இதில் உள்ளது. 

இதன் விலை :  ₹1,399

Click Here To Buy

ZEBRONICS Wireless Bluetooth Keyboard

அமேசானில் இதற்கு ரேட்டிங் 3.1 தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சிலர் கொடுத்துள்ள ரிவியூ படி இந்த கீபோர்டு சிறப்பாக செயல்படுகிறது. இந்த கீபோர்டு மூலமாக ஒரே நேரத்தில் மூன்று கருவிகளில் இணைந்து பணியாற்றிட முடியும். வேலை செய்பவர்களுக்கு ஏற்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. 

இதன் விலை :  ₹1,199

Click Here To Buy

முடிவுரை :

பல்வேறு கருவிகளில் செயல்படும் கீபோர்டு ஒன்றினை நீங்கள் வாங்கிட நினைத்திருந்தால் இங்கே பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் கீபோர்டுகள் உங்களுக்கு உதவலாம். இதுதவிர, ப்ளிப்கார்ட் தளத்திலும் கூட இதே மாதிரியான கீபோர்டுகள் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அமேசான் தளத்தில் சிறந்த கீபோர்டுகள் பல இருக்கின்றன.

Exit mobile version