Site icon Tech Tamilan

22 ஆண்டுகளாக உயராத ஜெப் பெசோஸ் அடிப்படை சம்பளம் | Jeff Bezos base salary

Jeff Bezos basis salary ஜெப் பெசோஸ் அடிப்படை சம்பளம்

Jeff Bezos basis salary ஜெப் பெசோஸ் அடிப்படை சம்பளம்



Jeff Bezos basis salary ஜெப் பெசோஸ் அடிப்படை சம்பளம்

Jeff Bezos

சம்பள உயர்வு என்பது ஒவ்வொரு ஊழியர்களின் “பெரிய எதிர்பார்ப்பு”. கடந்த 22 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய பணக்காரரும் அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் அவர்களின் அடிப்படை சம்பளம் உயரவே இல்லை. ஆச்சர்யமாக இருக்கிறதா! உண்மை அதுதான்.

தற்போதைய சூழலில் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவரும் அதன் தலைமை அதிகாரியுமான ஜெப் பெசோஸ் [Jeff Bezos ] தான். கிட்டத்தட்ட 113 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இருக்கிறார்.இப்படி முதலிடம் வகிப்பவரின் அடிப்படை சம்பளம் கடந்த 22 ஆண்டுகளாக மாறாமலேயே இருக்கிறது. 

 

பங்குசந்தையில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு நிறுவனமும் ப்ராக்ஸி அறிக்கையை தாக்கல் செய்திடும். ப்ராக்ஸி அறிக்கை என்பது பங்குதாரர்களின் வாக்குகளை கோரும்போது ஒரு நிறுவனத்திற்கு தேவைப்படும் அறிக்கை. இந்த அறிக்கை வருடாந்திர கூட்டத்திற்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்படுகிறது. இதில் இடம்பெறும் பல்வேறு தகவல்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். அப்படித்தான் அண்மையில் அமேசான் நிறுவனத்தின் ப்ராக்ஸி அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தான் அமேசான் நிறுவனத்தை உருவாக்கியவருக்கே 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட அடிப்படை சம்பளம் வெறும்  $81,840 டாலர்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இது ஒரு சராசரி அமெரிக்கர் அமேசான் நிறுவனத்தில் பெரும் அடிப்படை சம்பளத்தை விட வெறும் 2.2 மடங்கு மட்டுமே அதிகம். 

 

உலகின் மிகப்பெரிய பணக்காரருக்கு அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றாலும் கூட மற்ற முன்னனி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களது அடிப்படை சம்பளத்தோடு ஒப்பிடும் போது இது மிக மிகக்குறைவு. உதாரணத்திற்கு, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருக்கும் டிம் குக் இன் அடிப்படை சம்பளம் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளாவின் அடிப்படை சம்பளம் 2.33 மில்லியன். 

 


இதன்படி அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அவர்களின் அடிப்படை சம்பளம் கடந்த 22 ஆண்டுகளில் உயரவே இல்லை. 1997 ஆம் ஆண்டு முதல் வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்க துவங்கிய அமேசான் நிறுவனம் 1998 ஆம்  ஆண்டு தெரிவித்த தகவல் அடிப்படையில் அப்போதைய அடிப்படை சம்பளமாக  $81,840 ஐ தான் ஜெப் பெசோஸ்க்கு கொடுத்திருக்கிறது. அதேசமயம், அடிப்படை சம்பளம் மாறாத பட்சத்திலும் கூட 2019 ஆம் ஆண்டில் $1,681,840 அமெரிக்க டாலர்கள் அவருக்கு compensation தொகையாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவரது பாதுகாப்பிற்காக மட்டும் செலவிடப்பட்டுள்ளது. 

அடிப்படை சம்பளம் 22 ஆண்டுகளாக மாறவில்லை என்றால் எங்கிருந்து தான் அவருக்கு வருமானம் வருகிறது? அவர் எப்படி உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆனார்? இது நல்ல கேள்வியாக இருக்கிறதே. ஏப்ரல் 03 ஆம் தேதி வரைக்கும் அமேசான் நிறுவனத்தின் 55,495,676 பங்குகளை  ஜெப் பெசோஸ் தான் வைத்திருக்கிறார். இந்த 11.15% பங்குகளின் தற்போதைய மதிப்பு $133 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

தொடர்ச்சியாக உலக பணக்கர்களின் வரிசையில் முதலிடம் பிடிப்பவருக்கு அடிப்படை சம்பளம் பற்றியெல்லாமா கவலை இருக்கப்போகிறது என நீங்கள் எண்ணுவதை பார்க்க முடிகிறது.

நீங்கள் பார்த்து வியப்படைந்த தொழிலதிபர் யார்? கமெண்டில் பதிவிடுங்கள்

மிகப்பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பற்றி நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து பல சிறந்த கட்டுரைகளை படிக்கலாம். உங்களது வாட்ஸ்ஆப்பில் இதுபோன்ற கட்டுரைகளை பெற விரும்பினால் இந்த பட்டனை கிளிக் செய்து இணைந்திடுங்கள்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version