இந்த UV பாக்ஸ் ஆனது 99 சதவிகித பாக்டீரியாக்களை 10 நிமிடங்களில் அழித்துவிடுவதாகவும் வெறும் மொபைல் போனோடு நில்லாமல் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கை கடிகாரம், கண்ணாடி, ஹெட்செட் உட்பட எதை வேண்டுமானாலும் அந்த பாக்ஸ்க்குள் வைத்து சுத்தப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே இதுபோன்ற முடக்க காலங்களில் நமது மொபைல் போன்கள் உட்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருள்கள் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரிக்களினால் பாதிக்கப்பட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களது கண்ணாடி, ஹெட்செட், மொபைல் என எந்த பொருளில் இருந்து நீங்கள் ஜெர்ம்ஸ்களை அழிக்கவும் சாம்சங் நிறுவனம் UV பாக்ஸ் ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.
ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் வெளியிடப்பட்டுள்ள இந்த UV பாக்ஸ் தற்போது உலகம் முழுமைக்கும் வெளியிடப்பட இருக்கிறது. மேலும் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விலையில் மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த UV பாக்ஸ்க்குள் பாதிக்கப்பட்ட மொபைல் போனை வைக்கும் போது அதில் இருக்கும் பூஞ்சைகளும் பாக்டீரியாக்களும் அழிவதோடு மட்டுமில்லாமல் மொபைல் போனை சார்ஜ் செய்துகொள்ளவும் முடியும். இந்த UV பாக்ஸ் ஆனது 99 சதவிகித பாக்டீரியாக்களை 10 நிமிடங்களில் அழித்துவிடுவதாகவும் வெறும் மொபைல் போனோடு நில்லாமல் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கை கடிகாரம், கண்ணாடி, ஹெட்செட் உட்பட எதை வேண்டுமானாலும் அந்த பாக்ஸ்க்குள் வைத்து சுத்தப்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்சி S20 அல்ட்ரா 5ஜி அளவுள்ள போன்களைக்கூட இந்த பாக்சில் வைக்க முடியும். ஆன்/ஆப் அறிந்துகொள்வதற்கு LED விளக்கு இருக்கிறது. மேலும் நீங்கள் அந்த பாக்ஸை திறக்கும் போது தானாக ஆப் ஆகிவிடும் வசதியும் இருக்கிறது.
இதுபோன்ற பதிவுகளை பெறுவதற்கு எங்களது பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.