Site icon Tech Tamilan

இஸ்ரோவில் செயற்கைக்கோளை உருவாக்கப்போகும் இந்திய மாணவர்கள் | ISRO launches ‘Young Scientist Programme’ for school children

ISRO launches ‘Young Scientist Programme’ for school children

ISRO launches ‘Young Scientist Programme’ for school children


இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பள்ளி மாணவர்களுக்கு “செயற்கைகோள் தயாரிப்பு” குறித்த பயிற்சி வகுப்பினை வருகிற கோடைகால விடுமுறை தினங்களில் நடத்திட திட்டமிட்டு இருக்கிறது. Yuva Vigyani Karyakram or Young Scientist Programme எனப்படும் இந்த பயிற்சி திட்டத்தில் நாடு முழுமைக்கும் இருந்து 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். அவர்களால் உருவாக்கப்படும் செயற்கைகோள் எதிர்பார்த்தபடி இருப்பின் விண்வெளிக்கும் அனுப்பப்படும்.

மத்திய அரசு கோரிக்கை 

 

இந்தியாவில் இருக்கக்கூடிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி இஸ்ரோ Young Scientist Programme எனப்படும் பயிற்சி திட்டத்தை துவங்கி இருக்கிறது.

திட்டத்தின் முக்கிய குறிப்புகள் 

 

ISRO_launches_young_scientist_programme

 

  • இரண்டு வாரங்கள் நடக்கப்போகும் இந்த பயிற்சி வகுப்புகள் வருகிற ஏப்ரல் மாதம் துவங்கும்
  • மாணவர்கள் இஸ்ரோ வளாகத்திலேயே தங்கவைக்கப்பட்டு பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தில் இருந்தும் CBSE , ICSE , மாநில பாடத்திட்டம் ஆகியவற்றில் படித்த மாணவர்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 8 ஆம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் இதற்க்கு தகுதியானவர்கள்.
  • இஸ்ரோ ஒவ்வொரு மாநில தலைமை செயலாளருக்கும் மார்ச் இறுதிக்குள் 3 மாணவர்களை தேர்ந்தெடுக்க ஏற்கனவே கடிதம் அனுப்பி இருக்கிறது. மாணவர்களின் கடந்த கால கல்வி செயல்பாடு , மற்ற திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என கூறியுள்ளது

பயனுள்ள திட்டம் 

 

வெளிநாட்டு மாணவர்கள் அறிவியலில் முன்னேறி நிற்பதற்கு காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிதான். தற்போது இஸ்ரோ, நமது மாணவர்களுக்கு நேரடியாக பயிற்சி அளிக்கபோவதன் மூலமாக மிகப்பெரிய அனுபவத்தை நமது மாணவர்கள் பெறப்போகிறார்கள். இந்த பயிற்சி மாணவர்களிடத்தில் அறிவியலுக்கான ஆர்வத்தை தூண்டுவதோடு மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவதற்கு ஊன்றுகோலாகவும் இது அமையும். இஸ்ரோவை போலவே மற்ற அறிவியல் நிறுவனங்களும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்திட முன்வரவேண்டும்.

 
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.

உங்களுடைய கருத்துக்களை தவறாமல் பதிவிடுங்கள், அவையே எங்களுக்கு ஊக்கம் தரும்
 
TECH TAMILAN
 


இதையும் படிங்க,
[easy-notify id=1639]

உலகம் புதுப்புது தொழில்நுட்பங்களை கண்டுகொண்டு இருக்கிறது. அப்படி, அதிகமாக பேசப்படும் ஒரு தொழில்நுட்பம் தான் AI அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், செயற்கை நுண்ணறிவு என தமிழில் மொழி ...
அறிவியல் துறையில் தற்போது முன்னனி கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இருப்பது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தான் (Artificial Intelligence) . ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் [Artificial Intelligence] குறித்து நீங்கள் அறிந்து ...
இந்தியாவில் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அவர்களால் இயன்ற அளவில் தங்கத்தை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். தற்போது 190,000 டன் அளவிலான ...
இந்தியாவில் ஸ்டார்ட்அப் மிகவும் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வெற்றிபெற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வரிசையில் SolarSquare என்கிற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் வெற்றி குறித்து பார்க்க இருக்கிறோம். உள்ளூரில் ...
நமக்கான வேலைகளை செய்துகொள்வதற்கு சில நேரங்களில் கூடுதலாக லேப்டாப் தேவைப்படும்போது, refurbished laptops ஐ வாங்கலாமே என எண்ணுவோம். இதற்கு மிக முக்கியக்காரணம், அதன் விலை தான் ...
நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது ...
உங்களுக்கான ஒரு பிசினஸ் ஐ துவங்க நீங்கள் ஆர்வமாக இருக்கிறீர்கள் என தெரிகிறது. உங்களைப்போலவே பலருக்கும் இந்த ஆர்வம் நிச்சயமாக இருக்கும். ஆனால், சிலருக்கு முதலீடுகள் செய்வதற்கான ...
இந்தியாவில் இப்போது பேஷன் மற்றும் அழகியல் துறை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இளைஞர்களும் தற்போது பேஷன் மற்றும் அழகியல் துறையில் வேலை செய்திட ஆர்வத்தோடு ...
நமது இந்தியாவில் வெளிநாட்டு உணவுகள் மற்றும் கடைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அதன் வெளிப்பாட்டை கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமாக காண முடிகிறது. இதனால் தான் ...
ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ ...
Exit mobile version