Site icon Tech Tamilan

டிக்டாக் போனால் என்ன வருகிறது “இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்” | Instagram Reels

டிக்டாக் போனால் என்ன வருகிறது "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்" | Instagram Reels

டிக்டாக் போனால் என்ன வருகிறது "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்" | Instagram Reels

டிக்டாக் போனால் என்ன வருகிறது "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்" | Instagram Reels
இந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்ற காரணத்திற்காக டிக்டாக் உட்பட 59 சீன ஆப்களுக்கு தடை விதித்தது இந்தியா. இதனைத்தொடர்ந்து சிங்காரி உட்பட பல ஆப்களுக்கு பயனாளர்கள் செல்லத்துவங்கினர். தற்போது இன்ஸ்டாகிராம் “ரீல்ஸ்” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் 200 மில்லியன் பயனாளர்களைக்கொண்டிருக்கும் டிக்டாக் ஆப் உட்பட 59 சீன ஆப்கள் இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்றன என்ற காரணத்திற்காக தடை செய்யப்பட்டன. விரிவாக அதுகுறித்து நீங்கள் இங்கே படிக்கலாம். இந்தத்தடையை பிற ஆப்கள் பெரிதளவில் கண்டுகொண்டனவோ இல்லையோ டிக்டாக் இந்ததடையால் பெரிதும் கவலையாகி இருக்கிறது. இதற்கு மிக முக்கியக்காரணம், டிக்டாக் ஆப்பிற்கு இந்தியாவில் இருந்த அதிகப்படியான பயனாளர்களின் எண்ணிக்கைதான்.  

 

டிக்டாக் ஆப்பிற்கு தடை விதிக்கப்பட்டவுடன் அதுபோன்றே இருக்கும் சிங்காரி, மித்ரோன் உட்பட பல ஆப்களை நோக்கி இந்தியப்பயனாளர்கள் படையெடுக்கத் துவங்கி இருக்கிறார்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பெரிய நிறுவனங்களும் கூட தங்களால் ஆன மாற்றங்களை உடனடியாக செய்து டிக்டாக் பயனாளர்களை தங்கள் பக்கம் முயன்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத்தான் இன்ஸ்டாகிராம் தற்போது “இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ்” என்ற வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. 

 
டிக்டாக் போனால் என்ன வருகிறது "இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்" | Instagram Reels

15 நொடிகள் அளவுள்ள வீடியோக்களை பயனாளர்கள் இந்த வசதியைக்கொண்டு பகிரலாம். எப்படி டிக்டாக் ஆப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவுடன் வேறு பாடலோ இசையோ அனிமேஷனோ கலந்து வீடியோவை பகிர முடியுமோ அதைப்போன்றே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பகுதியிலும் பயனாளர்கள் பகிரலாம். 

 

ஏற்கனவே பிரேசில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி தற்போது பிரான்ஸ், ஜெர்மனியிலும் கூட இருக்கிறது. தற்போது இந்தியாவிலும் இந்த வசதி  வந்து இருக்கிறது. 

இதற்கிடையில் டிக்டாக் ஆப் நிர்வாகம் எப்படியேனும் இந்தத்தடையை நீக்க போராடி வருகிறது. டிக்டாக் நிர்வாகத்தின் சார்பாக கூறப்பட்டுள்ள விளக்கத்தில் ‘சீன அரசு இதுவரைக்கும் இந்தியபயனாளர்களின் தகவல் குறித்து எதுவும் கேட்கவில்லை. அப்படி கேட்டாலும் கூட நாங்கள் கொடுக்கப்போவதும் இல்லை. தற்போது இந்தியபயனாளர்களின் தகவல்கள் அனைத்தும் சிங்கப்பூரில் இருக்கும் சர்வரில் தான் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சர்வர்களை அமைக்கும் பணியிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்’ என தெரிவித்து இருக்கிறது.

Read this post also :டிக்டாக் தடை நீங்க வாய்ப்பிருக்கிறதா? என்ன நடக்கிறது?

 

இதுபோன்ற பதிவுகளை பெறுவதற்கு எங்களது பேஸ்புக் பக்கத்தை பின்தொடருங்கள் அல்லது வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்திடுங்கள்



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version