Site icon Tech Tamilan

இந்தியாவின் நேவிகேஷன் navIC க்கு அனுமதி | இனி GPS ஐ நம்பியிருக்க வேண்டாம் | India’s own navigation system

இந்தியாவின் நேவிகேஷன் navIC

இந்தியாவின் நேவிகேஷன் navIC

இந்தியாவின் நேவிகேஷன் navIC

India’s navIC

இந்தியாவின் நேவிகேஷன் தொழில்நுட்பமான navIC [Navigation with Indian Constellation] க்கு அனுமதி கிடைத்துவிட்டது. இனி அமெரிக்காவின் GPS தொழில்நுட்பத்தை நாம் நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை.



Click Here! Get Updates On WhatsApp

தற்போது நாம் பயன்படுத்தி வருகின்ற நேவிகேஷன் தொழில்நுட்பமான GPS ஆனது அமெரிக்காவினுடையது. தற்போது இந்த தொழில்நுட்பத்தை நாம் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும் ஒவ்வொரு தருணத்திலும் அடுத்த நாட்டைச் சார்ந்து இருக்கவேண்டிய நிலையே இருந்துவந்தது. தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ navIC [Navigation with Indian Constellation] [நேவிக்] எனும் நேவிகேஷன் தொழில்நுட்பத்தை வடிவமைத்திருக்கிறது. தற்போது இதற்க்கு உலக அளவில் மொபைல் கருவிகளுக்கான புரோட்டோகால்களை வடிவமைக்கும் 3GPP ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனால் விரைவில் நாம் நம் நாட்டினுடைய நேவிகேஷன் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

https://youtu.be/Aq-6i9UFMOc

ஜிபிஎஸ் (GPS) என்றால் என்ன?

GPS தொழில்நுட்பம் அமெரிக்காவால் கண்டுபிடிக்கப்பட்டது . ராணுவ தாக்குதல்களை துல்லியமாக மேற்கொள்ளவும்  ராணுவ தளவாடங்கள் எங்கிருக்கின்றன என்பதனை அறிந்துகொள்ளவும் GPS போன்றதொரு தொழில்நுட்பம் தேவைப்பட்டது , உருவாக்கவும் பட்டது . அமெரிக்காவிற்கும்  ரஷ்யாவிற்கும் இடையே பனிப்போர் நிலவியிருந்த நேரம் , நியூயார்க்கிலிருந்து சியோல் நோக்கி 250 பயணிகளோடு பயணித்த விமானமொன்று தவறுதலாக ரஷ்யாவின் எல்லைக்குள் புகுந்தது , அதனால் சுட்டும் வீழ்த்தப்பட்டது 

இந்த நிகழ்விற்கு பிறகு மீண்டும் இதுபோன்றதொரு நிகழ்வு நடைபெறாமல் இருக்க GPS தொழில்நுட்பத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அனுமதித்தது அமெரிக்கா . நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற Google Map , OLA , UBER , Security Devices, Driverless car ஆகியவை அனைத்துமே ஜிபிஎஸ்(GPS) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே செயல்படுகிறது. 

 

மேலும் GPS குறித்து இங்கே படியுங்கள் : https://techtamilan.in/all-about-gps-explained-in-tamil/

GPS இருக்கும் போது இந்தியாவிற்கு navIC எதற்கு?

1999 ஆம் ஆண்டு கார்கில் பகுதியில் பாகிஸ்தான் துருப்புகள் ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிற்கு அந்த பகுதிகளின் GPS தகவல்கள் தேவைப்பட்டன. GPS தொழில்நுட்பம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது இந்தியாவிற்கு கேட்ட தகவல்களை கொடுக்க அமெரிக்க மறுத்துவிட்டது. ஏற்கனவே இந்தியாவிற்கென தனியாக நேவிகேஷன் தொழில்நுட்பம் வேண்டும் என நினைத்திருந்த இந்திய ஆட்சியாளர்களுக்கு இந்த அனுபவம் இன்னுமொரு அழுத்தத்தை கொடுத்தது.

இந்தியாவின் navIC எப்படி செயல்படும்?

இந்தியாவின் navIC நேவிகேஷன் சேவையானது உலகம் முழுமைக்குமானது அல்ல. இந்தியாவிற்கும் இந்தியாவிற்கு வெளியே குறிப்பிட்ட அளவிலான தூரத்திற்குமான நேவிகேஷன் வழங்கக்கூடிய அளவிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் சார்பில் 7 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு செயல்பாட்டில் இருக்கின்றன. அமெரிக்காவின் GPS 24 செயற்கைகோள்களைக்கொண்டுள்ளது. 

 

GPS உடன் ஒப்பிடும் போது பலவகையில் navIC செயல்திறன் மிக்கது என விஞ்ஞானிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. GPS இன் துல்லியத்தன்மையானது 20 – 30 மீட்டர் இருக்கும்போது நமது navIC துல்லியத்தன்மை 5 மீட்டர் அளவில் இருக்கிறது. 

 

மிகப்பெரிய வல்லரசு நாடுகள் என அறியப்பட்ட அமெரிக்கா GPS வைத்திருக்கிறது, ரஷ்யா GLONASS ஐ வைத்திருக்கிறது,  ஐரோப்பிய யூனியன் Galileo ஐ வைத்திருக்கிறது. அந்தவகையில் சொந்த நேவிகேஷன் வைத்திருக்கும் நாடுகளின் வரிசையில் நாமும் இணைந்திருக்கிறோம். 

 

தற்போது இதற்க்கு உலக அளவில் மொபைல் கருவிகளுக்கான புரோட்டோகால்களை வடிவமைக்கும் 3GPP ஒப்புதல் அளித்துள்ளபடியால் இனி மொபைல் வடிவமைக்கும் நிறுவனங்கள், நேவிகேஷன் கருவிகளை வடிவமைக்கும் நிறுவனங்கள் நமது navIC தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்திடும் விதத்தில் வடிவமைக்கப்படும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version