கிட்டத்தட்ட 1.5 பில்லியன் பயனாளர்களை கொண்டிருக்கிற WhatsApp ஆப்பினை இந்திய அரசியல் கட்சிகள் “அரசியல் பிரச்சாரங்களை மேற்கொள்ள” தவறாக பயன்படுத்துகின்றன. அதனை முடிந்த அளவு தடுக்க முயன்று வருவதாகவும் இதனை தவிர்த்துக்கொள்ளுமாறு அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அதன் Executive தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் நடக்கின்ற தேர்தலில் சமூக வலைத்தளங்கள் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அரசியல் கட்சிகள் அந்த மாற்றத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தவறான செயலாக கருதப்படுகிறது. தங்களுக்கு சாதகமான செய்திகளை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்வது, எதிர்கட்சிகளை குறித்த தவறான செய்திகளை பரப்புவது, அப்ளிகேஷன்களை பயன்படுத்தி அதிகப்படியான நபர்களுக்கு அனுப்புவது போன்றவை சில உதாரணங்கள்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
ஏற்கனவே WhatsApp , facebook போன்றவற்றில் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். இந்த சூழலில் தான் WhatsApp நிறுவனம் இப்படியொரு விசயம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துள்ளது. இருந்தாலும் எந்த கட்சி இப்படிப்பட்ட நிகழ்வுகளில் அதிகமாக ஈடுபடுகின்றன என்பது குறித்து எந்த தகவலையும் கூறவில்லை.
WhatsApp இன் இந்த குற்றச்சாட்டை பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டுமே மறுத்துள்ளன.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
இதுபோன்ற தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தொடர்ந்து படிக்க subscribe செய்திடுங்கள்.
TECH TAMILAN
இதையும் படிங்க,