Features of Android Q OS
2030 க்குள் 6 கோடி எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்கும் அதன் மூலமாக மிகப்பெரிய அளவில் எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்கும் இந்திய அரசு முயன்று வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது
Click Here! Get Updates On WhatsApp
உலகின் முன்னனி நாடுகள் அனைத்தும் இணைந்து பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்களில் அக்கறை செலுத்திக்கொண்டு இருக்கும் சூழலில் புவி வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக இருக்கக்கூடிய கரியமில வாயுவை வெளியிடும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை கட்டுப்படுத்திவிட்டு அதற்க்கு பதிலாக எலெட்ரிக் வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் வேலைகள் துவங்கி விட்டன. சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே எலெட்ரிக் கார் விற்பனை அதிகரிக்க துவங்கி விட்டாலும் இந்தியாவில் மந்தமாகவே எலெட்ரிக் கார் விற்பனை இருக்கிறது.
இந்த சூழலில் தான், இந்தியாவும் எலெட்ரிக் கார் விற்பனையை அதிகரிக்க அக்கறை செலுத்திட துவங்கி இருக்கிறது. மக்களிடம் அதனை வெற்றிகரமாக கொண்டு சேர்ப்பதற்காக வரி குறைப்பு, பெட்ரோல் விலை உயர்வு ஆகிய நடவெடிக்கைகளையும் துவங்கி இருக்கிறது.
பட்ஜெட் 2019
திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எலெட்ரிக் வாகனங்கள் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாக எலெட்ரிக் கார்களுக்கு 12% ஆக இருந்த GST வரி 5% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல எடுக்கும் லோனில் 1.5 லட்சம் வரி விலக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல எலெட்ரிக் கார்களை வாங்குவததற்கு மானியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. FAME 2 நடவெடிக்கையின் மூலமாக எலெட்ரிக் கார் விற்பனையை ஊக்கப்படுத்தி 2030 க்குள் 6 கோடி எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வதற்கும் அதன் மூலமாக மிகப்பெரிய அளவில் எரிபொருள் இறக்குமதியை குறைப்பதற்கும் இந்திய அரசு முயன்று வருவதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாற்று எலெட்ரிக் வாகனம் தான்
இந்தியாவில் தற்போது தான் எலெட்ரிக் கார் விற்பனை என்பது சற்று அதிகரிக்க துவங்கி இருக்கிறது. மேலும் அரசு மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை வழங்குமாயின் இன்னும் இது அதிகரிக்கலாம். தற்போது இந்தியா 84% சதவிகித எரிபொருளுக்கு இறக்குமதியை தான் சார்ந்து இருக்கிறது. 2030 க்குள் 40 சதவிகித பேருந்துகள் , 70% சதவிகித கார்கள் என மாற்றம் வருமாயின் மிகப்பெரிய அளவில் எரிபொருள் இறக்குமதியை குறைக்கலாம் என நிதி ஆயோக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்தையும் தாண்டி நாம் “புவி வெப்பமயமாதல்” பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறோம். இதனை தவிர்க்க ஒரேவழி நாம் மாற்றத்தை ஏற்றுக்கொள்வது தான். அதனை இந்தியா தற்போதுதான் ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கிறது. இதில் இன்னும் வேகம் தேவை.
எலெட்ரிக் காரில் இருக்கும் சவால்கள்
எலெட்ரிக் கார்களை மக்கள் விரும்பாததற்கு காரணம் அதிக விலை என்பது மட்டுமில்லை. சார்ஜ் போடும் விசயம் தான் மக்களை யோசிக்க வைக்கிறது. ஒருமுறை சார்ஜ் போட்டால் குறிப்பிட்ட தூரம் தான் செல்ல முடியும், அதற்கும் அதிகமாக போக வேண்டுமெனில் சில மணி நேரமாவது சார்ஜ் போட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேபோல அனைத்து இடங்களிலும் சார்ஜ் போடுவதற்கான வாய்ப்பும் இன்னும் செய்துதரப்படவில்லை.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டறிய பல்வேறு நிறுவனங்கள் பேட்டரி கண்டுபிடிப்பு விசயத்தில் அக்கறை காட்டி வருகின்றன. விரைவில் ஒரு தீர்வினை அவர்கள் கொண்டு வருவார்கள் என நம்புவோம். ரீ சார்ஜ் மையங்களை அரசே துவங்க வழிவகை செய்திட வேண்டும்.
சரிய துவங்கும் ஆட்டோமொபைல் தொழில்
கார் விற்பனை கணிசமாக குறைந்திருப்பதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்க்கு காரணமாக BS6 விதிமுறைகளை 2020 க்குள் கண்டிப்பாக அமல்படுத்தவேண்டும் என்பதாக இருக்கலாம், வாடகை கார்களின் வரவாக இருக்கலாம், பொருளாதாரத்தில் பெரிய வளர்ச்சி இல்லாமையால் கூட இருக்கலாம். ஆனால் மிக முக்கியக்காரணம், இந்திய அரசு எலெட்ரிக் கார்களை ஊக்கப்படுத்த துவங்கி இருப்பதனால் தான்.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் எலெட்ரிக் கார் தயாரிப்பு பக்கம் திரும்பி விட்டாலும் தற்போதைய சூழல் காரணமாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கும் நிலைக்கு அந்த நிறுவனங்கள் வந்திருக்கின்றன என்பதே உண்மை. இந்திய நிறுவனங்கள் எலெட்ரிக் கார் தயாரிப்பில் வெகு விரைவாக தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தால் மிகப்பெரிய வளர்ச்சியை பெறலாம். இல்லையேல் பிற வெளிநாட்டு நிறுவனங்கள் அந்த இடத்தை பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.