Site icon Tech Tamilan

Import – Export Business இந்தியாவில் துவங்குவது எப்படி?

How to start an import export business in india tamil

பலர் வெகு சுலபமாக லட்சங்களில் கோடிகளில் சம்பாதிக்கும் தொழில்களில் ஒன்று Import – Export Business. காய்கறிகள் ஏற்றுமதியில் துவங்கி எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் இறக்குமதி என பறந்து விரிந்து கிடக்கிறது இந்தத் தொழில். 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா மிகப்பெரிய நுகர்வோர் நாடு. அதேபோல, இந்தியாவில் பல பொருள்கள் உற்பத்தியும் செய்யப்படுகின்றன. 

ஆகவே, இந்தியா இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் தொழில் செய்வதற்கு உகந்த நாடாக இருக்கிறது. எந்த அளவிற்கு இந்தத் தொழிலில் லாபம் இருக்கிறதோ அந்த அளவிற்கு இந்தத்தொழிலை துவங்குவதிலும் தொடர்ந்து நடத்துவதிலும் இருக்கிறது. ஆனால், சில அடிப்படையான விசயங்களை முறையாக கற்றுக்கொண்டு ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். 

இந்தப்பதிவில், Import – Export Business இந்தியாவில் எப்படி ஆரம்பிப்பது, ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் செய்ய வேண்டியது என பல விசயங்களை பார்க்கலாம்.

Import Export Business என்றால் என்ன?

Import Export Business என்ன என்பதை மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமெனில், வெளிநாடுகளில் விற்கப்படும் பொருள்களை நம் நாட்டில் மக்கள் வாங்க விரும்பினால் அதனை அங்கே வாங்கி நம் நாட்டிற்கு அனுப்பி இங்கே விலை சற்று அதிகமாக வைத்து விற்பது தான் Import பிசினஸ். 

அதேபோல, நம் நாட்டில் கிடைக்கும் பொருள்களில் வெளிநாட்டவர் எதை வாங்க விரும்புகிறார்களோ அதனை இங்கே வாங்கி வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து அங்கே விலை கூடுதலாக விற்பது Export பிசினஸ். 

சொல்வதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் இந்த பிசினஸ் மிகவும் சிக்கலான மற்றும் சவால் நிறைந்த தொழில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Import Export Business ஏன் துவங்கலாம்?

இந்தியா மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடு. அதேபோல, பொருளாதாரத்திலும் நல்ல நிலையில் இருக்கும் நாடு. ஆகவே, இங்கே உள்ள மக்களின் நுகர்வு திறன் என்பது மற்ற நாடுகளைக்காட்டிலும் அதிகமாக இருக்கும். அதனால் தான் பல நாடுகளும் நிறுவனங்களும் அங்கே உற்பத்தியாகும் பொருள்களை நம் நாட்டில் சந்தைப்படுத்த விரும்புகின்றன. 

உலகமயமாக்கல் காலகட்டத்திற்கு பிறகு இந்திய மக்கள் வெளிநாட்டு பொருள்களை நுகரும் தன்மை அதிகரித்து காணப்படுகிறது. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால், அரபு நாடுகளில் உற்பத்தியாகும் பேரிச்சைக்கு இந்தியாவில் நல்ல சந்தை உண்டு. அதேபோல, இந்தியாவில் விளையும் மாம்பழத்திற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உண்டு. இவை இரண்டும் ஓர் உதாரணம் தான்.

1. அதிக நுகர்வு திறன்

இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட மிகப்பெரிய நாடு. ஆகவே, இந்தியா Import மற்றும் export தொழில் செய்வதற்கு உகந்த நாடு.

2. குறைவான உற்பத்தி விலை 

இந்தியாவில் குறைவான செலவில் பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். வெளிநாடுகளில் குறைவான விலைக்கு அந்த பொருள்களை வாங்க நினைப்பவர்கள் உண்டு. ஆகவே, எக்ஸ்போர்ட் செய்திடலாம்.

3. வெளிநாட்டு ஈர்ப்பு அதிகம் 

வெளிநாட்டில் உள்ள வாசனை திரவியம் துவங்கி, மொபைல், கணினி போன்ற எலட்ரானிக்ஸ் கருவிகளுக்கு இந்தியாவில் நல்ல மார்கெட் உள்ளது. ஆகவே, import தொழில் இந்தியாவில் செய்யலாம்.

4. அரசு உதவி

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்வோரை இந்திய அரசு பல விதங்களில் ஊக்குவிக்கிறது. கடன் வழங்குவது, வரி சலுகைகள் வழங்குவது, விதிமுறைகளை தளர்த்துவது என பல விதங்களில் இந்தத்தொழில் செய்வோரை ஊக்குவிக்கிறது.

இந்தியாவில் Import Export Business துவங்குவது எப்படி?

இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து நல்ல வருமானத்தை பெற முடியும் என்றாலும் கூட முறையாக இதனை துவங்குவதில் பல சவால்கள் இருக்கின்றன. சரியான திட்டமிடல் இருந்தால் தான் இந்தத் தொழிலில் வெற்றியடைய முடியும்.

1. பொருள் என்ன?

ஏற்றுமதி அல்லது இறக்குமதி தொழிலில் ஈடுபடப் போகிறோம் எனில் எந்தப்பொருளை நாம் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்போகிறோம் என்பதை முதலில் தேர்வு செய்திட வேண்டியது அவசியம். எந்தப்பொருளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது, அதிக லாபம் தருமா, எவ்வளவு போட்டி இருக்கிறது, எவ்வளவு முதலீடு தேவைப்படும் என்பதை எல்லாம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. IEC எண்ணை பெற வேண்டும்

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபடுகிறவர்கள் IEC (Import Export Code) என்ற எண்ணை பெற வேண்டும். IEC என்ற 10 இலக்க எண்ணை Directorate General of Foreign Trade (DGFT) இல் விண்ணப்பித்து பெற வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம் செய்தும் பெறலாம்.

3. பதிவு செய்வது அவசியம்

முறையாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்திட நீங்கள் பதிவு செய்திட வேண்டியது அவசியம். பதிவு செய்வதன் மூலமாக அரசின் சலுகைகள் பெறலாம், சட்ட பாதுகாப்பை பெற முடியும். உங்களுக்கு PAN Card மற்றும் GST Number இருப்பதும் அவசியம். 

4. விற்பவர் வாங்குபவரை கண்டறியுங்கள்

உங்களது நிறுவனத்தை முறையாக பதிவு செய்துவிட்டால் அடுத்து இருக்கும் மிக முக்கியமான வேலை விற்பவர் வாங்குபவர் யார் என்பதை கண்டறிவது தான். இதனை நீங்கள் கண்டறிய சந்திப்புகள் நடந்தால் அங்கே பங்கேற்கலாம். அவர்களிடம் நல்ல உறவுகளை பேணுவதும் தொடர்ந்து உரையாடுவதும் அவசியம்.

5. பொருள் பரிமாற்றம் செய்திட ஏற்பாடு

ஏற்றுமதி அல்லது இறக்குமதி தொழில் செய்வோருக்கு தேவையான ஒன்று “லாஜிஸ்டிக்ஸ்”. பொருள்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள். அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவில் இறக்குமதிக்கு உகந்த துறைகள் என்ன?

1. எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள்

இந்தியாவில் அதிகமாக விற்பனையாவது எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தான். அவற்றில் பெரும்பான்மையானவை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு எப்போதுமே இந்தியாவில் அதிகமான தேவை இருப்பதனால் இது இறக்குமதி தொழில் செய்வோருக்கு மிகவும் ஏற்றது.

2. மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள்

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்திடலாம். அதிக விலை வைத்து விற்க முடியும் என்பதனால் இதிலே லாபம் அதிகம்.

3. ஆடை மற்றும் அணிகலன்கள்

இந்தியாவில் ஆடை மற்றும் அலங்கார பொருள்களுக்கு எப்போதும் நல்ல மார்க்கெட் உள்ளது. தரம் நன்றாக இருந்தால் அதிக விலைக்கு வாங்க இங்கே மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஆகவே, நல்ல தரம் உள்ள ஆடை மற்றும் அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யக்கூடிய முகவரி கண்டறிந்து நீங்கள் இறக்குமதி செய்து பணம் ஈட்டலாம்.

4. வேதிப்பொருள்கள் மற்றும் தொழிற்சாலை உபகரணங்கள்

தொழிற்சாலைகளுக்கு தேவையான வேதிப்பொருள்கள் மற்றும் உபகரணங்கள் எப்போதுமே தேவைப்படுவை. இவற்றை மொத்தமாக இறக்குமதி செய்து நீங்கள் சில்லறையில் விற்பனை செய்திடலாம்.

5. பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருள்கள்

இந்தியாவில் பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருள்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தப்பொருள்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவு விலைக்கு இறக்குமதி செய்து இங்கே விற்கலாம். 

இந்தியாவில் ஏற்றுமதிக்கு உகந்த துறைகள் என்ன?

1. மசாலா பொருள்கள் 

மசாலா பொருள்கள் அதிகமாக உற்பத்தியாகும் ஒன்றாக இந்தியா உள்ளது. அதேபோல, இந்திய மசாலா பொருள்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. சீரகம், மிளகு, ஏலக்காய் போன்ற மசாலா பொருள்கள் பெரிய அளவில் ஏற்றுமதி ஆகின்றன.

2. பாரம்பரிய கைவினைப்பொருட்கள்

விரிப்புகள், பொம்மைகள் போன்ற இந்திய பாரம்பரிய கைவினைப் பொருள்கள் உலக அளவில் பேசப்படுகின்றன. அதிக தரம், விலை குறைவு என்பதனால் இதற்கு நல்ல மார்க்கெட் வெளிநாடுகளில் உண்டு. 

3. தோல் பொருட்கள்

தோல் சார்ந்த தொழில் பெரிய அளவில் இந்தியாவில் நடைபெறுகிறது. உதாரணத்திற்கு, காலணிகள்,பெல்ட், செருப்புகள் போன்றவை பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. இங்கே, சிறப்பாக தோல் பொருள்களை உற்பத்தி செய்யக்கூடிய கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இது நல்லதொரு ஏற்றுமதி சார்ந்த துறை.

4. விவசாய பொருட்கள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்கு அரிசி, கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற பல பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறார்கள். குறைந்த விலையில் இங்குள்ள விவசாயிகளிடம் பொருள்களை வாங்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக நன்றாக சம்பாதிக்கலாம்.

5. ஆயுர்வேத மற்றும் மூலிகை பொருட்கள்

இந்தியாவில் தயாராகும் ஆயுர்வேத மற்றும் மூலிகை தயாரிப்புகள் சர்வதேச சந்தைகளில் பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவிற்கு ஆயுர்வேதம் மற்றும் மூலிகை மருத்துவத்தில் நீண்ட பாரம்பரியம் உள்ளது. இவற்றை  ஏற்றுமதி செய்வதன் மூலம் தொழில்முனைவோர் இந்த சந்தையில் நுழையலாம். இருப்பினும், இந்த வணிகத்தில் வெற்றிபெற இலக்கு நாட்டின் ஒழுங்குமுறை தரநிலைகளுக்கு இணங்க வேண்டியது அவசியம்.


FAQs

1. Import-Export Business இல் அதிக லாபம் கிடைக்குமா?

நீங்கள் சரியாக இந்தத்தொழிலை செய்தால் இதில் இருந்து அதிக லாபத்தை பெற முடியும். நீங்கள் என்ன பொருளை தேர்வு செய்துள்ளீர்கள் துவங்கி பல விசயங்கள் மிக முக்கியமானவை.

2. இந்தியாவில் import-export business செய்திட எவ்வளவு முதலீடு தேவைப்படும்?

குறைந்தபட்சமாக 5 லட்சம் முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் சிறிய அளவில் import-export business செய்திட போதுமானது.


Exit mobile version