Site icon Tech Tamilan

IIT ஆசிரியை உருவாக்கிய சோலார் லைட் கொண்ட பேக், கிராமப்புற குழந்தைகளுக்கு உதவுகிறது

School Bag with Solar Light

ஒரு கண்டுபிடிப்பின் மகிமையை அதற்கான தேவையும் அதன் பயன்பாடும் தான் தீர்மானிக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் மின்வெட்டு, குளிர் நாட்களில் நாட்களில் மாணவர்களின் படிப்பிற்கு உதவி வருகிறது ஐஐடி ஆசிரியை உருவாக்கிய சோலார் லைட் கொண்ட பள்ளிக்கு கொண்டு செல்லும் பேக் [பை]

கௌகாத்தியில் இருக்கக்கூடிய ஐஐடி யில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார் சாரு மோங்கா [Charu Monga]. மாணவர்களிடத்தில் அறிவியலை புகுத்தும் நோக்கில் செயலாற்றிவரும் இவர் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கிட மாணவர்களிடத்தில் உரையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அப்படி ஒருநாள் ஒரு மாணவரிடம் பேசும் போது ‘இங்கே சூரியன் விரைவாக மறைந்துவிடுகிறது. மின்வெட்டும் அடிக்கடி நடக்கிறது. இதனால் தங்களது படிப்பு தடைபடுகிறது, விளையாடும் நேரத்தில் நாங்கள் படிக்க வேண்டி இருக்கிறது என தனது பிரச்சனைகளை கூறினார்’

இதுதான் Jugnu எனும் மாணவர்கள் பள்ளிக்கு கொண்டு செல்லும் பையை உருவாக்கிட உத்வேகமாக இருந்தது என்கிறார் பேராசிரியர். சாரு, ஒரு சோலார் விளக்கை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு பையுடனும் ஒருங்கிணைத்தார். இது மழைநீரில் நனையாது. சூரிய ஒளியால் எரியும் விளக்கை தனியாக தூக்கிச்செல்லவேண்டும் என்கிற கட்டுப்பாடும் இல்லை. அது பைக்குள்ளேயே இணைக்கப்பட்டிருக்கும். மாணவர்கள் இந்த பேக்கை பள்ளிக்கு கொண்டு செல்லும் போது வழியில் கிடைக்கும் சூரிய ஒளியில் ரீசார்ஜ் ஆகிவிடும். மாணவர்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் கூட இந்த வெளிச்சத்தில் படிக்க முடியும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த பையை உருவாக்கிய சாரு இதுவரைக்கும் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அறிவியல் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருக்கிறார். தான் உருவாக்கிய Jugnu பையை 7 மாவட்டங்களில் இருக்கும் 200 மாணவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version