தமிழில் எளிதாக டைப் செய்வது எப்படி? Type In Tamil

தமிழ் மொழியில் எளிதாக டைப் செய்திட உங்களுக்கு இந்தப்பதிவில் இருக்கும் தகவல்கள் பெரிதும் உதவியாக இருக்கும். தமிழ் மொழியில் ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றாலோ அல்லது ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றாலோ தமிழ் மொழியில் டைப் செய்திட தெரிந்திருக்க வேண்டியது அவசியம். நீங்கள் இதற்காக வேறு யாரிடமும் உதவி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களிடம் ஒரு கணினி அல்லது மொபைல் இருந்தாலே தமிழ் மொழியில் எளிதாக டைப் செய்திட முடியும். நீங்கள் வாசித்துக்கொண்டு இருக்கும் இந்தக்கட்டுரையையும் நான் கூறப்போகும் எளிய வழியை பயன்படுத்தித்தான் டைப் செய்தேன். 

நீங்கள் இந்தப்பதிவில் தமிழில் டைப் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். கணினி இருந்தால் தமிழில் டைப் செய்வது எப்படி? [Type in tamil in Computer] கணினி இல்லாமல் போனால் மொபைலில் தமிழில் டைப் செய்வது எப்படி? [How to type in tamil in Mobile?] ஆங்கிலத்தில் டைப் செய்து தமிழில் மொழி பெயர்ப்பது எப்படி? [English to tamil typing] தங்லிஷில் தமிழில் டைப் செய்வது எப்படி? [thanglish to tamil typing] என பல்வேறு விசயங்களை பார்க்கலாம்.

எளிதாக தமிழில் டைப் செய்வது எப்படி? [How to type in tamil easy method?]

என்னுடைய அனுபவத்தில் நான் பல நூறு கட்டுரைகள், கவிதைகள், பதிவுகள் தமிழில் எழுதி இருக்கிறேன். அவை அனைத்தையும் நான் ஒரே ஒரு தமிழ் டைப்பிங் டூல் மூலமாகவே தான் செய்தேன். ஆகவே, என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து தான் பின்வரும் வழிமுறையை உங்களுக்கு கூற இருக்கிறேன். நீங்களும் இந்த வழிமுறையை இலவசமாக பயன்படுத்தி மிகவும் எளிதாக தமிழ் மொழியில் டைப் செய்திடலாம். 

தமிழ் மொழியில் டைப் செய்திட ஏராளமான வழிகள் இருந்தாலும் எளிமையாகவும், வேகமாகவும் டைப் செய்வதற்கு கூகுள் நிறுவனத்தின் “Google Input Tools” என்கிற டூலை நீங்கள் பயன்படுத்தலாம். நான் இதைத்தான் பயன்படுத்துகிறேன். 

Step 1 : கூகுளில் “google input tools” என சர்ச் செய்திடுங்கள். அப்படி செய்தால் முதலாவதாக பின்வரும் இணைய லிங்க் வரும். அதிலே “Try it out” என இருக்கும். அதை கிளிக் செய்திடுங்கள். இல்லையேல் நீங்கள் நேரடியாக அங்கே செல்ல இந்த லிங்கை கிளிக் செய்திடுங்கள் https://www.google.com/intl/sa/inputtools/try/

Step 2 : நீங்கள் எந்த மொழியில் டைப் செய்திட வேண்டுமோ அந்த மொழியை இப்போது தேர்வு செய்திட வேண்டும். படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் இருக்கும் கீழ்நோக்கிய குறியை அழுத்துங்கள். பிறகு தமிழ் என்பதை தேர்வு செய்திடுங்கள். 

Step 3 : நீங்கள் தமிழ் மொழியை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இப்படியாக இருக்கும். இப்போது நீங்கள் தமிழில் டைப் செய்திட ஆரம்பிக்கலாம். 

Step 4 : நீங்கள் தங்லிஷில் மிகவும் எளிமையாக டைப் செய்திட முடியும். உதாரணத்திற்கு, அன்பே என நீங்கள் டைப் செய்திட anbe என ஆங்கிலத்தில் டைப் செய்துவிட்டு பிறகு space ஐ அழுத்தினால் போதும் தானாகவே அன்பே என டைப் ஆகிவிடும். 

Step 5 : நீங்கள் தவறாக டைப் செய்தால் உங்களுக்கு ஆப்சன்கள் கீழே காட்டும். அந்த வார்த்தைகளை தேர்வு செய்திட குறிப்பிட்ட அந்த வார்த்தை தேர்வாகி விடும்.

மொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்வது எப்படி?

நாம் பெரும்பாலும் மொபைல் போன்களை பயன்படுத்தி தமிழில் டைப் செய்திடுவோம். உங்களுக்கு மொபைல் போனில் தமிழில் டைப் செய்திட வேண்டும் எனில் நீங்கள் பின்பரும் வழிமுறையை பயன்படுத்தி செய்யலாம். 

Step 1 : உங்களது மொபைலில் நீங்கள் Tamil Keyboard ஐ முதலில் இணைக்க வேண்டும். இதனை மிகவும் எளிமையாக நீங்கள் செய்திடலாம். பின்வரும் வீடியோவில் அதற்கான வழிமுறைகள் தெளிவாக இருக்கும். 

Step 2 : தமிழ் Keyboard ஐ இணைத்துவிட்டால் உங்களுக்கு இரண்டுவிதமான ஆப்சன்கள் இருக்கும். முதலாவது, நேரடியாக தமிழ் எழுத்துக்களை அழுத்தி டைப் செய்வது, இரண்டாவது thanglish முறையில் டைப் செய்வது. பெரும்பாலானவர்களுக்கு thanglish முறையில் டைப் செய்வது தான் எளிதாக இருக்கும்.

ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்வது எப்படி?

பெரும்பான்மையானவர்கள் மொழிபெயர்ப்புக்கு தற்போது பயன்படுத்துவது “Google Translate” டூல் தான். இந்த டூலை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு பெரிய ஆங்கில கட்டுரையையும் தமிழில் மொழி பெயர்ப்பு செய்துகொள்ள முடியும். 

இந்த லிங்கை [https://translate.google.co.in/] கிளிக் செய்து நீங்கள் Google Translate டூளுக்கு செல்ல முடியும். பிறகு, இடது புறத்தில் நீங்கள் எந்த மொழியில் இருந்து மொழி பெயர்க்க வேண்டுமோ அதை தேர்வு செய்திடுங்கள். உதாரணத்திற்கு, நீங்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்க வேண்டும் எனில் படத்தில் காட்டியுள்ளவாறு செலெக்ட் செய்துகொள்ளுங்கள். இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் கொடுப்பது அனைத்தும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து உங்களுக்கு தரப்படும். 

மொழிபெயர்ப்பை அப்படியே பயன்படுத்தாமல் நீங்கள் உங்களது மொழி நடைக்கு ஏற்றவாறு சில மாறுதல்களை செய்து பிறகு பயன்படுத்துங்கள். அப்போது தான் படிப்பதற்கு சரியாக இருக்கும்.

TECH TAMILAN