நீங்கள் உங்களுடைய பிசினஸை துவங்கிய உடன் அதனை பதிவு செய்வது மிகவும் அவசியமானது. வங்கியில் லோன் வாங்குவதற்கும் மற்ற பிற விசயங்களுக்கும் நிறுவனத்தை பதிவு செய்து வைத்திருப்பது நல்லது. நிறுவன பதிவு என்பது சற்று நீண்டதொரு விசயம் தான் ஆனால் நீங்கள் செய்துதான் ஆக வேண்டும்.
இந்தப்பதிவில் Small Business ஐ ரிஜிஸ்டர் செய்வது எப்படி என்பது குறித்து படிப்படியாக இங்கே பார்க்கலாம். இது நிச்சயமாக உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும். [How to register a small business in india tamil?]
Type Of Your Company | நிறுவனத்தின் வகை
ஒரு நிறுவனத்தை பதிவு செய்வதற்கு முன்னதாக அந்த நிறுவனம் எப்படிப்பட்ட நிறுவனம் என்பதை முடிவு செய்தாக வேண்டும். அதனைப் பொறுத்து தான் பதிவு செய்திடும் நடைமுறைகளும் மாறும். மூன்று விதமான நிறுவனங்கள் உள்ளன.
1. sole proprietor
இந்த வகையில், முழு நிறுவனத்தையும் தனி நபர் தான் நடத்துகிறார் என பொருள். அதேபோல, நிறுவனத்திற்கு வரும் வருமானம், கடன் என அனைத்திற்கும் அவரே பொறுப்பாவார். இப்படிப்பட்ட நிறுவனத்தை பதிவு செய்வது மிகவும் எளிமையான விசயம்.
2. partnership
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் இதில் வரும். வருகிற வருமானம், கடன், பிரச்சனை என அனைத்திலும் அனைவருக்கும் முழு பங்கு உண்டு.
3. LLC (Limited Liability Company)
அரசின் சட்டவிதிகளை பின்பற்றி இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல, நிறுவனத்திற்கு என்று சில சட்டவிதிகளையும் இயற்ற வேண்டிய அவசியம் உண்டு. இந்த நிறுவனம் நஷ்டம் அடைந்தால் அந்த நிறுவனரின் தனி சொத்துக்களை பாதிக்காது.
Company’s name | நிறுவனத்தின் பெயர்
நிறுவனத்தை பதிவு செய்வதற்கு நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக, மக்களிடத்தில் எளிதில் சென்று சேரும் விதத்தில் நிறுவனத்தின் பெயர் இருப்பதோடு மட்டுமல்லாமல் தனித்துவமாகவும் வேறு எவரும் பதிவு செய்திடாத பெயராகவும் இருப்பது மிகவும் அவசியம்.
Director Identification Number (DIN)
Director Identification Number (DIN) ஒரு தனித்துவமான மற்றும் முக்கியமான எண். ஒரு நிறுவனத்தின் இயக்குனருக்கு இந்த எண்ணானது வழங்கப்படும். நீங்கள் உங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தவுடன் உங்களுடைய முகவரி உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்திய பின்பு இந்த எண் வழங்கப்படும்.
Digital Signature Certificate
e-documents இல் கையெழுத்து இடுவதற்கு வசதியாக நீங்கள் Certifying Authorities (CAs) இடம் இருந்து Digital Signature Certificate என்ற ஒன்றினை விண்ணப்பித்து வாங்க வேண்டும். இது நிறுவனத்தை நடத்துகிறவர்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விசயம்.
Incorporation Certificate
கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தால் [ministry of corporate affairs] இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இது உங்களது உங்களது நிறுவனத்திற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. இந்தச் சான்றிதழைப் பெற, நீங்கள் மெமோராண்டம் ஆஃப் அசோசியேஷன் (MOA) மற்றும் ஆர்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷன் (AOA) ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து அனைத்து இயக்குநர்களின் ஒப்புதல் பெற வேண்டும்.
Company seal and documents
உங்களது நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ முத்திரையை நீங்கள் பெற வேண்டும். நிறுவனத்தின் முத்திரையைப் பெறுவது முக்கியமானது மற்றும் கட்டாயமாகும். ஏனெனில் இது நிறுவனத்தின் சார்பாக பரிவர்த்தனைகள் போன்ற பல்வேறு முக்கியமான செயல்முறைகளுக்குப் இதையே நீங்கள் பயன்படுத்த வேண்டும். ஒரு நிறுவன முத்திரையைப் பெற, முத்திரையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், தனியார் நிறுவனங்களுக்கு இது கட்டாயமில்லை. மேலும் பதிவு செய்யும் செயல்முறைக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் முத்திரையிடப்பட வேண்டும்.
A Permanent Account Number (PAN) & TAN
PAN மற்றும் TAN இவை ஒரு நிறுவனத்திற்கு கட்டாயமாகும். உங்கள் வணிகத்திற்கான PAN ஐப் பெற, நீங்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். ஆனால், சரிபார்ப்புக்கு கண்டிப்பாக தேவையான ஆவணங்களை நீங்கள் நேரடியாக சமர்பித்தே ஆக வேண்டும். உங்களுக்கு பான் கார்டு ஒதுக்கப்பட்டதும், குறிப்பிட்ட முகவரிக்கு அது டெலிவரி செய்யப்படும். மற்றொரு முக்கியமான செயல்முறை வரி கணக்கு எண்ணைப் பெறுவது (TAN), இது வரி நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது.
GST Registration
இதுவும் ஒரு நிறுவனத்திற்கு கட்டாயமான ஒன்றாகும். GST விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை கையாளும் ஒரு நிறுவனத்திற்கு GST பதிவு தேவையில்லை. 20 முதல் 40 லட்சம் ஆண்டு வருமானம் உள்ள எந்தவொரு நிறுவனத்திற்கும் ஜிஎஸ்டி பதிவு கட்டாயமாகும்.
National Employees’ Provident Fund Registration
வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர ஏற்பாடுகள் சட்டம், 1952 இன் விதிகளின் கீழ் வரக்கூடிய நிறுவனங்கள் கண்டிப்பாக பதிவு செய்திட வேண்டியது அவசியம். ஒவ்வொரு முதலாளியும் தனது தொழிலாளர்களைப் பற்றிய தகவலை உள்ளூர் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு (EPFO) வழங்குவது கட்டாயமாகும்.
முடிவு
ஒரு நிறுவனத்தை துவங்கிய பிறகு அதனை பதிவு செய்திட வேண்டியது அவசியம். அது பல்வேறு சூழ்நிலைகளில் உங்களுக்கே பயனுள்ள ஒரு விசயமாக இருக்கும். எப்படி ஒரு நிறுவனத்தை பதிவு செய்வது என்ற விவரங்கள் எதுவும் தெரியாதவர்களுக்கு இந்தப்பதிவு சில விளக்கங்களை கொடுத்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் நேரடியாக நிறுவனத்தை பதிவு செய்திட முயற்சிக்கும் போது இன்னும் சில விவரங்கள் உங்களுக்கு கிடைக்கப்பெறும்.
மீண்டும் ஒரு நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன்.