Site icon Tech Tamilan

How to make LAVA lamp in your home?

 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வுகளை பெற்றோரின் துணையின்றி சிறுவர்கள் செய்துபார்க்க கூடாது

 

Experiment Name : Make LAVA lamp in Home

 

ஒளிரும் விளக்குகள் என்றாலே சிறுவர்களுக்கு கொள்ளைப்பிரியம்தான் . மின்சாரமின்றி ஒளிரக்கூடிய லாவா விளக்கினை வீட்டில் எளிமையாக எவ்வாறு செய்வது என்பதனைதான் பார்க்க இருக்கின்றோம் .

 

LAVA lamp

 

தேவையான பொருள்கள்

 

 

 

 

 

 

 

 

 

Alka-seltzer tablets மாத்திரை (சாதாரணமாக மெடிக்களில் வாங்கலாம் )

 

செயல்முறை

 

காலியான வாட்டர் பாட்டிலில் பாதிக்கும் அதிகமாக சமையல் எண்ணெய்யை நிரப்பிக்கொள்ளுங்கள் (வீணாக போகிறது என எண்ண வேண்டாம் , உங்கள் குழந்தை கற்க போகிறது )

 

இப்போது தண்ணீரை நிரப்புங்கள்

 

Child making lava light in home

 

நன்றாக கவனித்தால் மேலாக ஊற்றிய தண்ணீர் எண்ணெய்க்கு அடியில் சென்று இருக்கும்

 

இதற்கு காரணம் நீரின் density அதாவது அடர்த்தி அதிகமாக இருப்பதனால் எண்ணெய்க்கு அடியில் நீர் சென்றுவிடுகிறது .

 

பிறகு சிறிதளவு food colouring சிறிதளவு கலந்திடுங்கள் .

 

அது தண்ணீரோடு மட்டுமே கலந்திடும் , எண்ணெயோடு கலக்காது .

 

இப்போதுதான் இறுதிக்கட்டம் , உங்களது குழந்தையின் கைகளில் மாத்திரையை சிறு துண்டுகளாக உடைத்து கொடுத்து பாட்டிலுக்குள்ளே போட சொல்லுங்கள் .

 

இப்போது மாத்திரை நீருடன் வினை புரிந்து சிறு சிறு காற்றுக்குமிழிகளை உண்டாக்கும் .

 

அதன்காரணமாக காற்றுக்குமிழ்கள் வெளியேறும் பாதையில் வண்ண தண்ணீரும் மேல்நோக்கி குமிழ்களாக வெளியேறும்போது அழகாக காட்சி தரும் .

 

பாட்டிலுக்கு பின்னால் மின்சார விளக்கினை வைத்தால் காற்றுக்குமிழிகள்   வெளியேறும்போது அழகாக காட்சியளிக்கும் .

 

கேள்விகள்

 

தண்ணீருக்கு மேலே எண்ணெய் சென்றது எதனால் ?

 

பதில் : அடர்த்தி (density) . எண்ணெயின் அடர்த்தியைவிட நீரின் அடர்த்தி அதிகம் . அதனால் தான் அடர்த்தி அதிகமுள்ள நீர் அடியிலும் அடர்த்தி குறைவான எண்ணை மேலேயும் இருக்கின்றன.

 

Water Density : 997 kg/m3

 

Oil Density : 870 – 920 kg/m3

 

Explanation :

 

சாதாரணமாக பார்க்கும்போது தண்ணீரை விட எண்ணெய்யை பார்க்கும்போது எண்ணெய் தான் அதிக அடர்த்தியுள்ளதை போன்று தோன்றும் . ஆனால் அடர்த்தி என்பது ஒவ்வொரு அணுக்களுக்கும் இடையிலான நெருக்கம் .

 

எண்ணெய் அதிக மூலக்கூறுகளை கொண்டிருப்பதனால் அவற்றிற்கு இடையில் பிணைப்பு குறைவானதாகவும் நீருக்கு மூலக்கூறுகள் குறைவானதாக இருப்பதனால் அவற்றால் அதிகமாக நெருங்கி இருக்க முடியும் .

TECH TAMILAN
Exit mobile version