Site icon Tech Tamilan

Paid Surveys மூலமாக வீட்டிலிருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி?

தற்போது பெரும்பாலானோர் பணம் சம்பாதிப்பதில் அக்கறை கொண்டிருக்கிறாரக்ள். குறிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என பலரும் தேடி வருகிறார்கள். ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பதன் ஒரு வழி தான் Paid Surveys மூலமாக பணம் சம்பாதிப்பது என்பது

Paid Surveys

தற்போது பெரும்பாலானோர் பணம் சம்பாதிப்பதில் அக்கறை கொண்டிருக்கிறாரக்ள். குறிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி என பலரும் தேடி வருகிறார்கள். ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிப்பதன் ஒரு வழி தான் Paid Surveys மூலமாக பணம் சம்பாதிப்பது என்பது

ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் ஆர்வம் தற்போது மக்களிடத்தில் அதிகரித்து இருக்கிறது. அதற்கு மிக முக்கியக்காரணம், அதனை எளிமையான முறையாக அவர்கள் நினைக்கிறாரார்கள். இன்டர்நெட்டில் ஏராளமாகக் கிடைக்கும் விசயங்கள் அவர்களை அப்படி நினைக்க வைக்கிறது. ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாமா என நீங்கள் கேட்டால், 100% சம்பாதிக்கலாம் என்பதே சரியான பதிலாக இருக்க முடியும். இந்தப்பதிவில் குறிப்பாக ஆன்லைன் சர்வே மூலமாக பணம் எப்படி ஈட்டலாம், எந்த இணையதளத்தில் நீங்கள் சேரலாம் என்பது போன்ற விசயங்களை தெரிந்துகொள்ள முடியும்.

யார் சொல்வதையும் முற்றிலுமாக நம்பாமல் நீங்களும் சில தேடல்களை மேற்கொண்ட பிறகு எதில் சேரலாம் என முடிவெடுங்கள்.

ஆன்லைன் மூலமாக சம்பாதிப்பது எளிதானதா?

ஆன்லைன் மூலமாக சம்பாதிப்பது எப்படி என்ற கேள்விக்கு மிகவும் விரிவாக ஒரு வீடியோவை ஏற்கனவே பதிவிட்டு இருக்கிறேன். நீங்கள் விரும்பினால் பார்க்கலாம்.

நீங்கள் ஒரு எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். பணம் ஈட்டுவது என்பது எப்போதும் எளிதானது கிடையாது. சிலர் ஒரு மணி நேரத்தில் $50 டாலர்கள், ஒரு நாளில் $100 டாலர்கள் சம்பாதிக்கலாம் என அள்ளிவிடுவார்கள். இப்படி சம்பாதிக்க முடியும் என்றால் யாருமே வேலைக்கே போக வேண்டாமே. இது ஒரு சாதாரணமான கேள்வி. இப்படி அதிக தொகையை சம்பாதிக்கலாம் என சொல்லுகிறவர்களின் தளத்திற்குள் நீங்கள் சென்றால் 10 பேரை சேர செய்ய வேண்டும், இத்தனை சர்வே முடிக்க வேண்டும் என ஏமாற்றவும் வாய்ப்பு உண்டு. ஆன்லைன் மூலமாக நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் முதலில் நம்பகத்தன்மையான தளத்தை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

Blogging மூலமாக சம்பாதிப்பது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அது பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து படியுங்கள்

Paid Surveys எப்படி வேலை செய்கிறது?


Paid Surveys இணையதளத்தில் நீங்கள் சேரும்போது உங்களைப்பற்றிய தகவல்களை பதிவு செய்ய சொல்வார்கள். நீங்கள் பதிவு செய்த தகவல்களை அடிப்படையாகக்கொண்டு ஏதேனும் ஒரு நிறுவனத்தின் சர்வே இருந்தால் அதனை உங்களது டேஸ்போர்டில் காட்டுவார்கள். உதாரணத்திற்கு, உங்கள் வீட்டில் குழந்தைகள் இருப்பதாக நீங்கள் தகவலை பதிவு செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று பெற்றோர்கள் எந்தவிதமான பொம்மைகளை பிள்ளைகளுக்கு வாங்கிக்கொடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள சர்வே எடுக்க விரும்புகிறார்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் இருவரையும் Paid Surveys தளம் இணைக்கும். ஏதோ ஓரிரண்டு கேள்விகளோடு இந்த சர்வே முடிவடையாது. அதற்கெல்லாம் $1 – $5 தர மாட்டார்கள். 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் கூட ஒரு சர்வேயை முடிக்க நேரம் ஆகலாம் என சொல்கிறார்கள்.

மற்ற ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் விசயங்களை விடவும் இது எளிமையான வழிமுறை. அதேபோல இதில் பெரிதாக ஏமாற்றவும் செய்திட மாட்டார்கள். நீங்கள் இதிலே முதலீடு செய்திடவும் தேவை இருக்காது.

Paid Surveys மூலமாக சம்பாதிக்க எந்த தளம் சிறந்தது?

Paid Surveys அல்லது விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக சம்பாதிப்பது என்ற விசயத்திற்குள் நீங்கள் நுழைந்திட விருப்பப்பட்டால் பின்வரும் விசயங்களை கவனித்து அதன் பிறகு சேருங்கள்.

> இந்தியாவில் இருந்துகொண்டு சேர முடியுமா?

> நீங்கள் ஈட்டும் பணத்தை அவர்கள் பணமாக தருவார்களா அல்லது கூப்பன் மூலமாக தருவார்களா?

> ஒருமுறை பணத்தை அனுப்ப வேண்டுமெனில் நீங்கள் எவ்வளவு பணத்தை ஈட்ட வேண்டும்? அதற்கு இன்னும் என்ன விதிமுறைகள் உள்ளன?

> குறிப்பிட்ட தளத்தில் நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் சேர்ந்து இருக்கிறார்களா?

> இணையத்தில் குறிப்பிட்ட தளம் பற்றி என்ன சொல்கிறார்கள்?

என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்களை நீங்கள் அறிந்த பிறகு சேருவது தான் சிறந்தது.

இந்தியாவை பொறுத்தவரைக்கும் சில இணையதளங்களை Paid Surveys க்கு சிறந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவை பொறுத்தவரைக்கும் சில இணையதளங்களை Paid Surveys க்கு சிறந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

Awwro – இந்தியாவில் இருக்கும் ஒருவரால் இதில் சேர முடியும். இதில் நீங்கள் சேர்ந்தவுடன் 100 க்கும் மேற்பட்ட தகவல்களை உங்களிடம் கேட்பார்கள். அதில் நீங்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில், உங்களுக்கு தகுதியான சர்வே வந்தால் அதை ஒதுக்குவார்கள். அதனை நீங்கள் பூர்த்தி செய்தால் உங்களுக்கு அதற்கான தொகை கிடைக்கும்.

Valued Opinions – 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேர முடியும். இதில் நீங்கள் ஒரு சர்வே முடித்தால் $1 முதல் $3 வரை சம்பாதிக்கலாம்.

Opinion World : இதுவும் சிறந்த Paid Surveys தளமென சொல்கிறார்கள்.

இதுதவிர இன்னும் ஏராளமான Paid Surveys தளங்கள் இங்கே உள்ளன. போதிய தேடலுக்கு பிறகு உங்களுக்கு சரியானதை தேர்வு செய்து சம்பாதிக்க ஆரம்பியுங்கள். இப்போதும் சொல்கிறேன், பணம் ஈட்டுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நீங்கள் ஓரளவேனும் அதற்காக உழைத்துதான் ஆக வேண்டும்.



Get updates via whatsapp

https://youtu.be/oSv0viQZtwchttps://youtu.be/bMWohgNoUkA

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version