ஒருபக்கம் ஆதார் அட்டையை அனைத்து திட்டத்திலும் இணைக்க சொல்லுகிறது மத்திய அரசு . மறுபக்கம் ஆதார் தகவல்கள் மற்றவர்களால் திருடப்படுவதால் மக்களுக்கு அதன் மீது ஆதாரை இணைக்க தயக்கம் காட்டுகின்றனர் .
நமக்கு தெரியாமலே நமது ஆதாரை எவராவது பயன்படுத்தி விடுவார்களோ என்கிற அச்சமும் இருகின்றது . ஆகவே மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்கிற்கு ஆதரவை தேடிக்கொள்ளவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது .
அதன்படி இனி எந்தெந்த திட்டத்தில் உங்கள் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எந்த நேரத்திலும் இனி இலவசமாக தெரிந்துகொள்ள முடியும் .
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் ,
https://resident.uidai.gov.in/notification-aadhaar
Enter UID இல் உங்கள் ஆதார் எண்ணை பதிவிடுங்கள்.
Enter Security Code இல் அருகில் இருக்கும் எண்ணை பதிவிடுங்கள்
Click : Generate OTP
அடுத்து இந்த பக்கத்திற்கு வரும் ,
இதில் Authentication Type இல் All என வையுங்கள்.
Select Date Range இல் எந்த தேதியிலிருந்து வேண்டுமோ அதனை குறிப்பிடுங்கள் .
Number of Records இல் எத்தனை விவரங்கள் வேண்டுமோ அதனை குறிப்பிடுங்கள் . அதிகபட்சமாக 50 வரை இருக்கலாம் .
OTP இல் உங்கள் எண்ணிற்கு வந்த OTP யை குறிப்பிடுங்கள் .
Click Submit
உங்கள் ஆதார் எந்தெந்த திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதோ அத்தனை தகவல்களும் காட்டப்படும் .
உங்களுக்கு தெரியாமல் ஏதேனும் திட்டத்துடனோ , மொபைல் எண்களுடனோ , வங்கி கணக்குடனோ இணைக்கப்பட்டு இருந்தால் உடனடியாக புகார் தெரிவியுங்கள் .
TECH TAMILAN