Site icon Tech Tamilan

Ethical Hacker ஆக வேண்டுமா? நீங்கள் செய்திட வேண்டியது இதுதான்

Ethical Hacker இப்போது இளைஞர்கள் பலரும் விரும்பி போக நினைக்கும் ஒரு வேலையாக இருக்கிறது. கணினி மற்றும் இன்டர்நெட்டில் பெரும் ஈடுபாடு கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பாக Ethical Hacker இருக்கும். Ethical Hacker ஆக பணி புரிவோருக்கு நல்ல சம்பளமும் இப்போது வழங்கப்பட்டு வருகிறது. எளிமையாக சொன்னால், Ethical Hacker என்பது நிறுவனங்கள் தங்களது தகவல் பாதுகாப்பை மேம்படுத்த உதவி செய்வது தான். நீங்கள் Ethical Hacker ஆக வேண்டும் என விருப்பம் கொண்டிருந்து Ethical Hacker ஆவதற்கு என்ன செய்திட வேண்டும் என தெரியாமல் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

Ethical Hacker பணி என்றால் என்ன? 

ஹேக்கர் என்றாலே பலரும் ஆன்லைன் தகவல் திருட்டு, ஆன்லைன் பணம் திருட்டு செய்கிறவர்கள் என்றே நினைத்துக்கொள்கிறோம். ஆனால், எத்திக்கல் ஹேக்கர் என்பவர்கள் முற்றிலும் மாறானவர்கள். Ethical Hacker பணியில் இருப்பவர்கள் தங்களது கணினி அறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் உள்ள அறிவை பயன்படுத்தி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தங்களது தகவல் தொழில்நுட்பத்தை மேற்படுத்த உதவுகிறார்கள். சைபர் குற்றவாளிகள் எப்படியெல்லாம் தகவல் திருட்டில் ஈடுபடுவார்களோ அதனை Ethical Hacker களே செய்வார்கள். பின்னர் அந்தக் குறைபாட்டை நிறுவனத்திடம் சொல்லி அவர்களது செக்கியூரிட்டி அமைப்பை வலுப்படுத்த சொல்வார்கள். இதற்காக, நிறுவனங்கள் இவர்களுக்கு சம்பளம் வழங்கும். 

இந்த இணைய உலகில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இணையதளம், தகவல் சேமிப்பு அமைப்பு உள்ளிட்டவை இருப்பது அவசியம். அவற்றை எந்த சைபர் குற்றவாளியும் தாக்கி தகவல்களை பெற்றுவிடக்கூடாது என்பதில் ஒவ்வொரு நிறுவனமும் உறுதியாக இருக்கும். ஆகவே, அவை சொந்தமாக சம்பளம் கொடுத்து Ethical Hacker ஐ வேலைக்கு அமர்த்திக்கொள்ளும்.

Ethical Hacker ஆவது எப்படி?

ஒருவேளை உங்களுக்கு Ethical Hacker பணியில் ஆர்வம் இருந்தால் நீங்கள் Ethical Hacker ஆவதற்கு பின்வரும் வழிகளை பின்பற்றலாம்.

ஒரு டிகிரி வாங்குங்கள் 

பள்ளி படிக்கும் வயதிலேயே பல Ethical Hacker இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதீத ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள். ஆகவே, அவர்களால் அப்படி ஆக முடியும். ஆனால், சாதாரண ஒருவருக்கு அது சாத்தியம் இல்லை. ஆகவே, இந்தத்துறையில் நீங்கள் பணிக்கு சேர முதலில் ஒரு பட்டப்படிப்பில் சேருங்கள். Ethical Hacker பணியில் அதிகமாக இருப்பவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பில் தான் சேருகிறார்கள். ஒரு நல்ல எத்திக்கல் ஹேக்கர் ஆக வேண்டுமெனில் உங்களுக்கு கணினியின் ஒவ்வொரு பாகமும் எப்படி வேலை செய்கிறது என்பது முற்றிலுமாக தெரிந்திருக்க வேண்டும். அதேபோல, மென்பொருள் துறையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும். ஆகவே, பட்டப்படிப்பு படித்துக்கொண்டு இருக்கும்போதே நீங்கள் இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு உங்களது திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.

 

பயிற்சி வகுப்புகளில் சேருங்கள் 

கல்லூரியில் சேர்ந்து படிக்கும் படிப்பு மட்டுமே Ethical Hacker ஆவதற்கு போதுமானதாக இருக்காது. ஆகவே, நீங்கள் அதனையும் தாண்டி பயிற்சி பெறுதல் அவசியம். அதற்கான சிறப்பு வகுப்புகள் பல இடங்களில் பயிற்சி பெற வேண்டும். வெறும் பயிற்சியோடு நின்றுவிடாமல் கற்றதை செயல்படுத்தியும் பார்க்க வேண்டும். பயிற்சி செய்திடும் போது பிற நிறுவனங்களில் பாதுகாப்பு அமைப்புகளை தாக்குவது சட்டப்படி குற்றம். ஆகவே, முறையான அனுமதியை பெற்றுத்தான் இவற்றை செய்திட வேண்டும். 

Ethical Hacker க்கு என்னென்ன தனித்துவமான திறன்கள் அவசியம்?

Computer skills : இது மிகவும் முக்கியமானது. கணினியை தாக்கி அதிலுள்ள பாதுகாப்பை உடைத்து தான் தகவல்களை திருட முடிகிறதா என பார்க்க வேண்டும். ஆகவே, கணினி, இன்டர்நெட் மற்றும் அது சார்ந்த கருவிகள் எப்படி செயல்படுகின்றன என்பதிலே தீவிரமான அறிவினை பெற்றிருப்பது அவசியம். 

Programming skills : கணினியின் பாதுகாப்பு [security programs] அனைத்துமே ஏதோ ஒரு புரோகிராம் பயன்படுத்தி தான் எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் அந்த புரோகிராம் கோடை அறிந்து வைத்திருந்தால் தான் அதிலே இருக்கும் குறைபாடுகளை கண்டறிந்து சரிசெய்திட முடியும். ஆகவே, பின்வரும் programming language களை படியுங்கள். 

Python

SQL

C++

JavaScript

PHO

Ruby

Perl

Reverse engineering : மீண்டும் அதே போன்றதொரு அமைப்பை உருவாக்க தெரிந்து இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு திறமையான ஹேக்கர் எப்படி உள்ளே நுழைய முயற்சி செய்வார் என்பது தெரியும். அந்த வழியிலேயே முயற்சி செய்து ஹேக் செய்திட முடிகிறதா என்பதை சோதனை செய்திட வேண்டும். அப்படி செய்திட முடிந்தால் அதனை சரி செய்திடவும் தெரிய வேண்டும். 

Cryptography skills : பொதுவாகவே ஹேக்கர்கள் யாரும் தெரிந்துகொள்ள முடியாதபடியே கம்ப்யூட்டர் வைரஸ் உள்ளிட்டவற்றை அனுப்புவார்கள். அப்படி அவர்கள் அனுப்பிடும் விசயங்களை கண்டறியும் அளவிற்கு Cryptography திறனை வளர்த்துக்கொள்ளுதல் மிகவும் அவசியம். 

Problem-solving skills : பிரச்சனையை கண்டறிவதோடு Ethical Hacker பணி முடிந்துவிடுவது இல்லை. மாறாக, அதனை சரி செய்திட வேண்டியதும் கூட அவர்களது பணி தான். ஆகவே, Problem-solving skills என்பது இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Ethical Hacker க்கு சம்பளம் எவ்வளவு இருக்கும்?

Ethical Hacker க்கு குறைந்தபட்சம் ஆண்டு சம்பளமாக ரூ 5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ 11 லட்சம் வரைக்கும் வேலைக்கு சேரும் முதலாம் ஆண்டிலேயே சம்பாதிக்கலாம். உங்களது திறமை, நீங்கள் பணி செய்திடும் நிறுவனம், இடம் ஆகியவற்றை பொறுத்து உங்களது சம்பளம் உயரலாம். அதிக திறமை வாய்ந்த Ethical Hacker பலர் கூகுள், பேஸ்புக் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிவதன் மூலமாக கோடிகளில் பரிசுகளையும் பெறுகிறார்கள். 

LIC Agent ஆவது இவ்வளவு ஈஸியா? LIC Agent ஆவது எப்படி?

அமெரிக்காவை அதிரவைத்த “சோலார் விண்ட் ஹேக்கிங்” | Solar Wind Hack

உலகின் பிரமாண்டமான ஹேக்கிங் பற்றி தெரியுமா? | Stuxnet Virus Attack

Exit mobile version