Site icon Tech Tamilan

How Apple became the biggest brand in the world?

[easy-notify id=297]


ஆப்பிள் நிறுவனத்தின் Apple Mobile Phone , iPad, Watch என்பதில் ஏதேனும் ஒன்றினை நீங்கள் வைத்திருந்தால் உங்களை பணக்காரர் என்றோ சிறப்பானவர் என்றோ அடுத்தவர்கள் எண்ணிடும் அளவிற்கு “Apple” என்ற பிராண்ட்டுக்கு பொதுமக்களிடத்தில் அதீத வரவேற்பு இருக்கின்றது. அதிக விலை, பயன்பாட்டில் பல கட்டுப்பாடுகள் என எத்தனை இருந்தாலும் “Apple” விரும்பப்படும் அல்லது மதிக்கப்படும் பிராண்டாக மாறியது எப்படி? அவ்வளவு எளிமையாக இந்த இடத்தை “Apple” நிறுவனம் பெற்று விட்டதா? எப்படி இந்த இடத்தை பிடித்தது? இதனை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.


Steve Jobs “Kids Can’t Wait” program

 

Students at California using apple computer ,1982
Students at California using apple computer ,1982

 

1982, ஆப்பிள் நிறுவனம் வளர்ந்து கொண்டிருந்த தருணம். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையாக கருதப்பட்ட 21 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவன கணினிகளை [Apple IIe computer] இலவசமாக கலிபோர்னியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பள்ளிக்கும் கொடுத்தார். அந்த காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கு இவ்வளவு தொகையை இலவசமாக கொடுப்பதற்கான இருப்பு இல்லாவிட்டாலும் நீண்ட கால பயணத்திற்கு உதவும் என கருதி ஆப்பிள் நிறுவன பிதாமகர் ஸ்டீவ் ஜாப்ஸ் அதனை செய்தார். இந்த தொகைக்கு வரிவிலக்கும்  அளிக்கப்பட்டது.
“Kids Can’t Wait” program இன் படி பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் கணினிகள் மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய முதல் கணினியாக அமைந்தது. இந்த திட்டத்தினால் ஆப்பிள் நிறுவன கணினி குறித்த அறிமுகம் இளம் தலைமுறையினருக்கு கிடைத்ததோடு மட்டுமில்லாமல் பல பள்ளிகள், வீடுகளில் ஆப்பிள் நிறுவன கணினிக்கு தேவை ஏற்பட்டது. வியாபாரம் அதிகரித்தது.

Apple product is for all customer’s

 

அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி பொருளாதாரத்தில் மேல்நிலையில் இருப்பவர்களும் கீழ் நிலையில் இருப்பவர்களும் ஒரேவிதமான செல்போன்களையே பயன்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது. ஆச்சர்யப்படும் விதமாக அதிகப்படியான நபர்கள் “Apple” போனையே வைத்திருக்கின்றனர்.

 

 

ஆப்பிள் போன்களை ஏழையும் பயன்படுத்திட முடியும் , பெரும் பணக்காரர் பயன்படுத்திட முடியும் . தகவல் பாதுகாப்பு குறித்து அதிகமாக கவலைப்படுபவர்களும் பயன்படுத்திட முடியும் , கவலைப்படாதவர்களும் பயன்படுத்திட முடியும் . இப்படி அனைவருக்குமே ஏற்றதாக அமைக்கப்பட்டிருப்பதனால் விற்பனை அதிகமாக இருக்கிறது .

 


Apple never concentrate on Price

 

 

ஒரே மாதிரியான வசதிகளை கொண்ட வேறு நிறுவனத்தின் போன்களோடு ஆப்பிள் நிறுவன போன்களையோ ஐபாட்களையோ ஒப்பிட்டால் ஆப்பிள் நிறுவன பொருள்களின் விலை மிக அதிகமாக இருக்கும் . பொதுவாக சந்தையில் இருக்கும் மற்ற நிறுவனங்கள் ஒன்றோடு விலை குறைப்பின் மூலமாக விற்பனையை அதிகரிக்கலாம் என முயலுவார்கள் . ஆனால் அவர்களுடன் போட்டிக்கே செல்லாமல் தனித்து இருக்கின்றது ஆப்பிள் . அதுவே சிறப்பானதாகவும் மாறிப்போகின்றது .

 


Quality Quality Quality

 

ஒரே pixel கொண்ட இரண்டு நிறுவன செல்போன்களில் எடுக்கப்படும் போட்டோக்களை ஒப்பிட்டால் ஆப்பிள் போனில் எடுக்கபட்ட புகைப்படம் பல விதங்களில் துல்லியமானதாவும் சிறப்பானதாகவும் இருக்கின்றது . அதேபோல பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டோமேயானால் ஆப்பிள் எந்தவொரு சமரசத்தையும் மேற்கொள்ளுவதே கிடையாது .


Customer feedback increases Apple Sales

 

People were in big queue at Apple-Store-Kyoto-Shijo

 

விளம்பரங்கள் செய்வதும் விலை குறைப்பு செய்வதும் பொருளின் விற்பனையை அதிகரிக்கும் என்பது பலரது எண்ணமாக இருக்கின்றது . ஆனால் ஆரம்பத்திலிருந்தே தரம் ஒன்றுதான் விற்பனையை அதிகரிக்கும் என நம்பியது ஆப்பிள் நிறுவனம் . தரம் அதிகமாக இருக்கும்போது அதிக விலை பற்றி மக்கள் கவலைப்படாமல் ஆப்பிள் நிறுவன பொருள்களை வாங்கினார்கள் . வங்கியவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருந்தாலும் தரம் குறித்து அடுத்தவர்களிடம் பேச துவங்கியதனால் விற்பனை அதிகரித்தது .

 


Quality is important than high price,தரம் ஒன்றுதான் மக்களிடம் நிரந்தர வெற்றியை பெற்றுத்தரும் என்பதனை ஆப்பிள் ஆரம்பகாலத்தில் இருந்தே நம்பியது . குறைவானவர்களே வாங்குகிறார்கள் என்பதனை “நல்ல பொருள் , அதிக விலையுடைய பொருள் குறைவானவர்களிடமே இருக்கும் ” என நம்ப வைத்தது . இவையே ஆப்பிள் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணங்களாக அமைந்துவிட்டன .


TECH TAMILAN

 

Exit mobile version