US – America
எப்படி ஈரான் ஏவுகணைகள் வருவதை அமெரிக்கா அறிந்துகொண்டது? அமெரிக்கா எப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறது? இதனைத்தான் இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதல் மூலமாக கொல்லபட்டப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஈரான். ஈரான் தரப்பில் இந்த தாக்குதலில் 80 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெற்றதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தாக்குதல் நடைபெற்றதற்கு பின்னால் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது உண்மை தான் எனவும் ஆனால் அதில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார். இன்னும் குறிப்பாக தங்களது “ஏவுகணை தாக்குதலை கண்டறிந்து அலெர்ட் செய்திடும் கருவி மிகச்சிறப்பாக செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்”.
எப்படி ஈரான் ஏவுகணைகள் வருவதை அமெரிக்கா அறிந்துகொண்டது? அமெரிக்கா எப்படிப்பட்ட தொழில்நுட்பங்களை வைத்திருக்கிறது? இதனைத்தான் இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ஈரான் – அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை?
ரேடார் மற்றும் செயற்கைகோள்
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சோவியத் யூனியனுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே கோல்டு வார் நிலவியது. அப்போது அணு ஆயுத ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்ச உணர்வு அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதுதான் ஏவுகணை தாக்குதலை அறிந்துகொள்ளும் தொழில்நுட்பம் உருவாவதற்கான காலகட்டமாக அறியப்படுகிறது. 1960 களின் முற்பகுதியில் ஆர்டிக் பகுதிகளில் ரேடார்களை நிறுவியது அமெரிக்கா அதுமட்டுமல்லாமல் ரஷ்யா பகுதிகளில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டால் அதனை கண்டறியும் திறன் கொண்ட செயற்கைகோள்களை ஏவியது அமெரிக்கா.
ரேடார் கீழ்வானத்தை நோக்கி தொடர்ச்சியாக அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். ஏவுகணை ஏவப்பட்டால் ஏவுகணையில் பட்டு எதிரொலிக்கும் ரேடியோ அலைகள் மீண்டும் ரேடார் நினையத்தை அடையும். இப்படித்தான் ஏவுகணைகள் கண்டறியப்படும். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. உயரமான மலைகள் மற்றும் கட்டிடங்கள் இருந்தால் அவற்றிற்கு மேலே ஏவுகணைகள் போகும் போது மட்டுமே கண்டறிய முடியும். தற்போது இருக்கும் செயற்கைகோள்கள் ஏவுகணைகளில் இருந்து வரும் வெப்பத்தை வைத்து அறிந்து உடனடியாக நிலையத்திற்கு தகவலை அனுப்பும்.
நிலையத்தில் இருப்பவர்கள் உடனடியாக அந்தப்பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஏவுகணைகளை கண்டறியும் தொழில்நுட்பங்கள் இருந்துவந்தாலும் கூட தற்போது அதில் பெரிய முன்னேற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன என கூறப்படுகிறது . தற்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் மூலமாக பூமியில் எங்கு ஏவுகணைகள் ஏவப்பட்டாலும் கூட அமெரிக்காவால் கண்டறிந்துவிட முடியும். இதற்காக ஏவுகணைகளை கண்காணிக்கும் அகச்சிவப்பு திறன் கொண்ட 4 செயற்கைகோள்கள் அமெரிக்காவால் நிர்வகிக்கப்படுகின்றன. இவை பூமியை மிகத்தீவிரமாக கண்காணிக்கின்றன. இவற்றைக்கொண்டு தான் ஈரான் அனுப்பியா ஏவுகணைகள் தங்களது படைத்தளத்தை நோக்கி வருவதனை அமெரிக்கா அறிந்திருக்கும்.
பொதுவாக ஏவுகணை ஏவப்பட்டவுடன் அது குறித்த எச்சரிக்கை ஏவுகணை எச்சரிக்கை மையத்திற்கு [Missile Warning Center] அனுப்பப்படும். உடனே அங்கிருக்கும் நிபுணர்கள் ஏவுகணையின் வேகம் மற்றும் திசையை கண்காணிப்பார்கள். அதை வைத்து ஏவுகணை எங்கு தாக்கலாம் என்பதனையும் கணித்து அலெர்ட் செய்வார்கள். தற்போது ஈரான் அனுப்பிய பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை கண்காணிப்பதில் அமெரிக்கா தொழில்நுட்பம் வல்லமை உடையது. ஏனெனில் இவை பாதி வழியில் திசையை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவை அல்ல. ஏவுகணை தாக்கப்போகிறது என்பதை சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான் சொல்ல முடியும் என்றாலும் கூட அதுவே மிகப்பெரிய இழப்புகளை தவிர்க்க போதுமானதாக இருக்கும். இடையிலேயே வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகள் இருந்தாலும் கூட அமெரிக்கா ஈரான் ஏவுகணைகளை அழிக்க பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக படைகளை பாதுகாப்பாக இருக்க சொல்லி அறிவுறுத்தியது அமெரிக்கா.
2018 ஆம் ஆண்டு தனது ரேடார் தொழில்நுட்பத்தை மேம்படுத்த Northrop Grumman எனும் நிறுவனத்திற்கு $866 மில்லியன் கொடுத்தது. அதேபோல 2025 க்குள் அதிநவீன ஏவுகணைகளை கண்டறியும் செயற்கைகோள்களை ஏவுவதற்கு $160 மில்லியனை ஒதுக்கிட ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை கொண்டிருப்பதனால் தான் ஈரான் அனுப்பிய ஏவுகணை தாக்குதலில் இருந்து அமெரிக்க படைகள் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் பாதுகாக்கப்பட்டிருக்கலாம்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.