Site icon Tech Tamilan

கண் குறைபாடுள்ளவர்கள் படிக்க ஹானரின் PocketVision App

ஹானரின் PocketVision App

ஹானரின் PocketVision App

ஹானரின் PocketVision App

PocketVision App

Honor 20 Pro மொபைலின் AI மற்றும் கேமரா வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காகவும் அதன் மூலமாக கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவிடும் விதமாகவும் இந்த ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது



Click Here! Get Updates On WhatsApp

பெர்லின் இல் நடைபெற்ற IFA அரங்கில் ஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர்  PocketVision App 

 எனும் ஆப் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. கண்பார்வை குறைபாடுகள் இருக்கிறவர்கள் மொபைல் கேமரா உதவியுடன் புத்தகம் உள்ளிட்ட கேமராவிற்கு எதிரில் உள்ளவை அனைத்தையும் படிப்பதற்கு ஏதுவாக தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் உதவியுடன் செயல்படும் இந்த ஆப்பானது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 

 

தரவுகளின்படி கிட்டத்தட்ட 20%அமெரிக்க மக்களுக்கு கண்பார்வை குறைபாடு இருப்பதாகவும் 10% மக்களுக்கு இதன் தாக்கம் அதிக அளவில் இருப்பதும் தெரியவருகிறது. இன்னும் உலக நாடுகளை எடுத்துக்கொண்டாலும் இதே அளவிற்க்கான பாதிப்புகள் இருக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. இந்த PocketVision App ஆனது மூன்று படிநிலைகளில் செயல்படுகிறது. கேமரா மூலமாக எழுத்துக்களை படம் பிடிப்பது, optical character recognition (OCR) தொழில்நுட்பம் மூலமாக டிஜிட்டல் வடிவத்தில் இருந்து எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டு பின்னர் எழுத்தானது சத்தமாக ஸ்பீக்கர் வாயிலாக வெளியே அனுப்பப்படுகிறது. 

இந்த ஆப்பில் இருக்கும் நெகடிவ் மோட் மூலமாக கேமராவின் பின்புறத்தை மாற்றிக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு நீங்கள் இரவில் படிக்க வேண்டும் என்றால் கறுப்பு நிறத்திற்கு கூட மாற்றிக்கொள்ளலாம் அல்லது வேறு நிறத்திற்கும் மாற்றிக்கொள்ளலாம்.

 

மேலும் இதில் இருக்கக்கூடிய Zoom ஆப்சன் மூலமாக தெளிவாக படிக்க முடியும். இந்த ஆப்பானது ஹானரின் 20 புரோ மொபைலில் இருக்கிறது. ஹானரின் பிற மொபைகளிலும் இதனை பயன்படுத்தலாம் என்றாலும் Honor 20 Pro மொபைலில் சிறப்பாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது வரைக்கும் ஆங்கிலம், ஸ்பானிஷ் , போர்துக்கீஸ் ஜெர்மன் ,இத்தாலியன், சீனம் உள்ளிட்ட மொழிகளுக்கு செயல்படுகிறது. 

 

கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் பிற நிறுவனங்கள் கூட இதே மாதிரியான ஆப்களை இதற்க்கு முன்னர் வெளியிட்டு இருக்கின்றன. Honor 20 Pro மொபைலின் AI மற்றும் கேமரா வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்காகவும் அதன் மூலமாக கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு உதவிடும் விதமாகவும் இந்த ஆப் கொண்டுவரப்பட்டுள்ளது. 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version