Site icon Tech Tamilan

சீனாவின் CCTV கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியா

சீனாவின் CCTV கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியா


சீனாவில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் Hikvision மற்றும் Dahua என்ற இரண்டு சீன நிறுவனங்களின் CCTV கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் பயன்படுத்தும் வெளிநாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்கிறது ஒரு ஆய்வு.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்தாக இருப்பதாகக்கூறி சில நூற்றுக்கணக்கான ஆப்களை தடை செய்தது இந்திய அரசு. ஆனால் அதே இந்தியாவில் தான், சீனாவில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தக்கூடிய இரண்டு நிறுவனங்களின் CCTV கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் 6 ஆம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்கிறது அண்மையில் ஒரு தனியார் நிறுவனம் Top10VPN நடத்திய ஆய்வு. சீனாவில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் குற்றசாட்டுகளை சந்தித்து வருகின்றன CCTV கேமராக்களை தயாரித்து வரும் Hikvision, Dahua ஆகிய இரண்டு நிறுவனங்கள்.  இதற்கு மிக முக்கியக்காரணம் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருக்கிற தொடர்புகள் தான். ஆகவே தான் இந்த இரண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு வியாபாரம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்தது Top10VPN இதில் தான் இந்த முடிவுகள் தெரிய வந்திருக்கின்றன.

 

இந்த இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் CCTV கேமராக்கள் சீனாவில் இருப்பதை விடவும் உலகின் பல்வேறு நாடுகளில் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சீனாவுடன் பெரிய அளவில் வர்த்தகப்போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவில் தான் அதிகப்படியான CCTV கேமரா கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப்பட்டியலில் 6 ஆம் இடத்தில் இருக்கிறது இந்தியா. ஒட்டுமொத்தமாக 73,684 சிசிடிவி நெட்ஒர்க்குகளுடன் இந்தியா 6 ஆம் இடம் பிடித்துள்ளது. 

அமெரிக்க மக்களின் தகவல்கள் கசியவிடப்படலாம் என்ற அச்சுறுத்தலில் இந்த இரண்டு நிறுவனங்களையும் 2018 ஆம் ஆண்டு முதல் தடை செய்திருக்கிறது அமெரிக்கா. ஆனாலும் கூட இன்றளவில் வரையிலும் அமெரிக்காவில் தான் இந்த இரண்டு நிறுவனங்களின் CCTV கேமராக்கள் இருக்கின்றன. 

 

இந்த இரண்டு நிறுவனங்களும் அதன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து இருக்கின்றன. தங்கள் நிறுவனங்கள் வெளிநாட்டு விதிமுறைகளை மதிப்பதாக விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் ஆப்களையே தடை செய்த இந்தியா எப்படி அந்த நாட்டிலேயே எதிர்ப்பை சந்தித்திருக்கும் சிசிடிவி கேமரா உபகரணங்களை அனுமதித்து இருக்கிறதோ தெரியவில்லை. ஒருவேளை யாரும் சொல்லவில்லையோ

 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version