12 ஆம் வகுப்பில் Commerce பாடப்பிரிவை எடுத்து படித்த மாணவர்களுக்கு இருக்கக்கூடிய மேற்படிப்பு வாய்ப்புகள் பலவற்றை இங்கே காணலாம். இதில் இருந்து உங்களுக்கு விருப்பமான மேற்படிப்பை தேர்வு செய்து உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கலாம்.
12 ஆம் வகுப்பில் காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு சிறந்த பல மேற்படிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவை பற்றிய அறிமுகம் பலருக்கு இல்லாத காரணத்தால் B.Com என்ற ஒரு இளங்கலை படிப்பிலேயே சேர்கிறார்கள். காமர்ஸ் எடுத்து படிக்கும் மாணவர்களால் Accounting, Finance, Taxation, Business Management மற்றும் பல பிரிவுகளில் வேலைக்கு செல்ல முடியும்.
முறையான பாடப்பிரிவை தேர்வு செய்து, முறையாக படித்தால் பொறியியல் பட்டதாரிகள் போலவே மிக மிக அதிகமான சம்பளத்தை பெறக்கூடிய நல்ல வேலையில் சேர முடியும்.
இந்தப்பதிவில், காமர்ஸ் எடுத்து படித்த மாணவர்களுக்கு இருக்கக்கூடிய மேற்படிப்பு வாய்ப்புகள் பற்றி விரிவாக பார்க்கலாம். இவை யாருக்கேனும் பயன்படும் என நினைத்தால் அவர்களுக்கு பகிருங்கள். காமர்ஸ் மாணவர்களுக்கு இருப்பது போலவே, Bio Math எடுத்து படித்தவர்களுக்கான மேற்படிப்பு விவரங்கள், Computer Science எடுத்து படித்தவர்களுக்கான மேற்படிப்பு விவரங்கள் இருக்கின்றன.
Best Courses After 12th Commerce Group
12 ஆம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்து படித்தவர்கள் தங்களுக்கு குறைவாக மேற்படிப்பு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், மற்றவர்களை விடவும் அவர்களுக்குத்தான் அதிகப்படியான மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன. இதனை நீங்கள் தெரிந்துகொள்ளும் போது சிறப்பான ஒரு மேற்படிப்பை தேர்வு செய்து பிடித்தமான வேலைக்கு செல்ல முடியும்.
Bachelor Of Commerce [B.Com]
Bachelor Of Business Administration [BBA]
Paramedical Courses
Chartered Accountancy [CA]
Certified Public Accountant [CPA]
Cost And Management Accountancy [CMA]
Company Secretary [CS]
Bachelor Of Laws [LLB]
Master Of Business Administration [MBA]
Diploma In Digital Marketing
Diploma In Financial Management
Diploma In Banking and Finance
Diploma In Business Analytics
Diploma In International Business
Diploma In Human Resource Management
Bachelor Of Statistics [B.Stat]
Bachelor Of Hotel Management [BHM]
Diploma In Tourism and Hospitality Management
Diploma In Event Management
Bachelor of Design in Fashion Designing
Bachelor of Journalism and Mass Communication [BJMC]
Diploma in Advertising and Public Relations
மேலே உள்ள படிப்புகள் குறித்து விவரமாக இங்கே பார்க்கலாம்.
Bachelor Of Commerce [B.Com]
மூன்று ஆண்டுகள் கொண்ட பி.காம் படிப்பில் வணிகம் மற்றும் வணிகம் சார்ந்த கொள்கைகள் பற்றி விரிவாக சொல்லித்தரப்படும். கணக்கியல், நிதி, சந்தைப்படுத்தல், வரிவிதிப்பு மற்றும் பொருளாதாரம் போன்றவை குறித்த அறிமுகப் பாடங்களை இங்கே நீங்கள் படிப்பீர்கள்.
கால அளவு : 3 ஆண்டுகள்
கட்டணம் : அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 10,000 வரை செலவாகலாம். தனியார் கல்லூரியில்
வேலை வாய்ப்புகள் : அரசு நடத்தும் தேர்வுகளில் நீங்கள் பங்கேற்க முடியும். வங்கி, கணக்கியல், நிதி, காப்பீடு மற்றும் விற்பனை போன்ற துறைகளில் அறிமுக வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
Bachelor Of Business Administration [BBA]
BBA என்பது மூன்று ஆண்டுகள் கொண்ட ஒரு பட்டப்படிப்பு ஆகும். இங்கே நீங்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்வதற்கான அடித்தள அறிவை இங்கே பெறுவீர்கள். இதில் சந்தைப்படுத்தல், நிதி, கணக்கியல், மனித வளம் மற்றும் மேலாண்மை குறித்து உங்களுக்கு சொல்லித்தரப்படும்.
கால அளவு : 3 ஆண்டுகள்
கட்டணம் : அரசுக் கல்லூரியில் ஆண்டுக்கு 10,000 வரை செலவாகலாம். தனியார் கல்லூரியில்
வேலை வாய்ப்புகள் : Marketing Associate, Sales Representative, or Financial Analyst போன்ற பல்வேறு பணிகளில் நீங்கள் சேர முடியும்.
Paramedical Courses
12 ஆம் வகுப்பில் காமர்ஸ் குரூப் எடுத்து படித்தவர்கள் Paramedical Courses ஐ படிக்க முடியும். தகுந்த பயிற்சிகளை பெறுவதன் மூலமாக சுகாதாரத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற முடியும். இங்கே அப்படியான சில படிப்புகள் பற்றிய விவரங்களை பெற முடியும்.
B Voc MLT
B Voc OT Technician
MLT Course
DMLT Course
Hospital Administration Course
Chartered Accountancy [CA]
பலரால் விரும்பத்தகுந்த ஒரு படிப்பாக Chartered Accountancy [CA] இருக்கிறது. கணக்கியல், தணிக்கை, வரிவிதிப்பு மற்றும் நிதி மேலாண்மை போன்ற பல்வேறு விசயங்கள் பற்றி இங்கே உங்களுக்கு சொல்லித்தரப்படும். இதனால் உங்களால் பெரிய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றிட முடியும்.
கால அளவு : 4 – 5 ஆண்டுகள்
கட்டணம் : 50,000 முதல் 2.5 லட்சம் வரைக்கும் செலவாகும்.
வேலை வாய்ப்புகள் : Public Accounting, Corporate Finance, Taxation, Banking, Consultancy என பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளன. பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பை பெறலாம்.
Certified Public Accountant [CPA]
American Institute of Certified Public Accountants (AICPA) என்ற அமைப்பு தான் CPA என்ற சான்றிதழை வழங்குகிறது. ஒருவர் இதற்கான தேர்வை இந்தியாவில் இந்த எட்டு இடங்களில் எழுதிட முடியும். பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், மும்பை, கல்கத்தா, புது டெல்லி, சென்னை மற்றும் திருவனந்தபுரம்.
இந்தத் தகுதித் தேர்வை நீங்கள் எழுத வேண்டுமெனில் முதலில் இதற்கான தகுதியை நீங்கள் பெற்று இருக்க வேண்டும். நீங்கள் ஒரு டிகிரியை படித்து இருக்க வேண்டும், 150 மணி நேர CPA பயிற்சி வகுப்பில் நீங்கள் கலந்திருக்க வேண்டும்.
Bachelor Of Laws [LLB]
மூன்று ஆண்டுகள் கொண்ட இந்த சட்டப்படிப்பில் அடிப்படை சட்டங்கள் பற்றி நீங்கள் படிப்பீர்கள். இதில் சிவில் சட்டங்கள், கார்ப்பரேட் சட்டங்கள் என பல்வேறு விசயங்கள் பற்றி படிப்பீர்கள்.
நீங்கள் ஏதேனும் மூன்றாண்டுகள் கொண்ட ஒரு இளங்கலை பட்டத்தை முடித்து இருந்தால் 3 ஆண்டுகள் கொண்ட LLB ஐ படிக்கலாம். இல்லையேல் மொத்தமாக 5 ஆண்டுகள் கொண்ட படிப்பை படிக்கலாம்.
Diploma In Digital Marketing
தற்போது மிகவும் பிரபலம் அடைந்துவரக்கூடிய ஒரு துறையாக Diploma In Digital Marketing உருவாகி வருகிறது. நீங்கள் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெற முடியும். சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் இதற்கான சான்றிதழ் வகுப்புகளை நடத்துகின்றன.
ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரைக்கும் உள்ள இந்த சான்றிதழ் வகுப்புகளில் பங்கேற்று சான்றிதழ் பெறுவதன் மூலமாக, Social Media Marketing, Digital Marketing Manager, Email Marketing Manager, SEO Manager என பல்வேறு வேலை வாய்ப்புகளை பெற முடியும்.
12 ஆம் வகுப்பு முடித்த பிறகு உடனடியாக இந்த பயிற்சி வகுப்பில் இணைந்துவிடாமல் ஏதேனும் ஒரு டிகிரியில் சேர்ந்துகொள்ளுங்கள். கூடவே, இதற்கான பயிற்ச்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெறுங்கள். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் ஓர் துறையாக இது இருக்கும்.
Diploma In Business Analytics
இதுவொரு குறுகிய டிப்ளமோ படிப்பு. இதிலே, data analysis மற்றும் visualization பற்றி சிறப்பானதொரு பயிற்சியை உங்களுக்கு வழங்குவார்கள். பல்வேறு நிறுவனங்களில் இதற்கான வேலைவாய்ப்புகள் எளிதாக கிடைக்கும். உதாரணத்திற்கு, data analyst, business analyst, data scientist, என பல்வேறு வேலைகள் கிடைக்கும்.
Bachelor Of Hotel Management [BHM]
3 முதல் 4 ஆண்டுகளை கொண்ட இந்த படிப்பில் hospitality industry பற்றிய முழு பயிற்சியையும் பெறுவீர்கள். 12 ஆம் வகுப்பை முடித்த பிறகு நீங்கள் படிக்க தகுதி வாய்ந்த ஒரு படிப்பாக இது இருக்கிறது. நீங்கள் தேர்வு செய்திடும் கல்லூரியை பொறுத்து உங்களுக்கான ஆண்டு கட்டணம் என்பது மாறுபடும். சராசரியாக, 1 லட்சம் முதல் 3 லட்சம் வரைக்கும் செலவாகும். Hotel Manager, Food and Beverage Manager, Front Office Executive போன்ற பல்வேறு வேலைவாய்ப்புகளை பெற முடியும்.
Conclusion
நீங்கள் 12 ஆம் வகுப்பில் காமர்ஸ் எடுத்து படித்தால் இருக்கக்கூடிய மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்து தான் இந்தப்பதிவில் விரிவாக பார்த்து இருந்தோம். இதுமட்டும் இல்லாமல் இன்னும் பல்வேறு மேற்படிப்பு வாய்ப்புகளும் இருக்கவே செய்கின்றன. ஆகவே, பிகாம் எடுத்து படித்துவிட்டோம் என நினைக்காமல் உங்களுக்கு இருக்கும் வாய்ப்புகளில் சிறந்த ஒன்றினை தேர்வு செய்து படித்தால் நீங்கள் அருமையான வேலைகளில் அமர முடியும்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு படிப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என நினைத்தால் இங்கே கமெண்டில் பதிவிடுங்கள்.
இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தவறாமல் வாட்ஸ்ஆப்பில் பெற விரும்பினால் இங்கே கிளிக் செய்து எங்களது சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.