இந்தியாவில் பொறியியல் படிக்க சிறந்த கல்லூரிகள் (Best Colleges To Study Engineering) என தேடினால் முன்வரிசையில் இருப்பவை ஐஐடி (IIT) கல்லூரிகள் தான். இங்கே படிப்பவர்கள் அனைவரும் மிகப்பெரிய நிறுவனங்களின் உயர் பதவிகளில் இருப்பார்கள் என்பதனால் இங்கே படிக்க அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு முயற்சி செய்வார்கள்.
உதாரணத்திற்கு, கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தி, முன்னாள் RBI கவர்னர் ரகுராம் ராஜன், டெல்லியின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்னும் பலர் ஐஐடியில் படித்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட, IIT கல்லூரியில் நீங்கள் படிக்க நிச்சயமாக விரும்புவீர்கள் என்றே நினைக்கிறேன். முயற்சி செய்தால் ஒவ்வொரு மாணவராலும் நிச்சயமாக ஐஐடியில் படிக்க முடியும். எப்படி நீங்கள் ஐஐடியில் சேருவது, என்ன நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
IIT நுழைவுத்தேர்வு என்றால் என்ன?
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு நீங்கள் நுழைவுத்தேர்வு எதனையும் எழுதத் தேவை இல்லை. 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேரலாம். ஆனால், IIT கல்லூரிகளில் சேர்ந்து பொறியியல் [architecture and engineering courses] பயில நீங்கள் IIT JEE என்ற நுழைவுத்தேர்வை எழுத வேண்டும். இதில் நீங்கள் தேர்ச்சி பெற்றுவிட்டால் IIT மட்டுமல்லாது NIT மற்றும் பல பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்கலாம்.
IIT JEE தேர்வு மூன்று பகுதிகளாக இருக்கிறது.
Main
Advanced
Architecture Test
What is the IIT Mains exam?
IIT Advanced தேர்வை எழுத தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்திடும் முதல்நிலை தேர்வு தான் IIT Mains தேர்வு. சற்று எளிமையான தேர்வாக இது இருக்கும். இதில் தேர்ச்சி அடைந்தாள் தான் Advanced தேர்வை எழுத தகுதி பெற முடியும். அதிலும் தேர்ச்சி அடைந்தால் தான் IIT யில் சேர முடியும்.
JEE Main தேர்வு எழுத வயது நிர்ணயம் எதுவும் இல்லை. 12 ஆம் வகுப்பில் 75% மதிப்பெண் [பொது பிரிவினர்] 65% [SC, ST பிரிவினர்] பெற்று இருக்க வேண்டும்.
What is the IIT JEE Advanced Exam?
JEE Main தேர்வில் முதல் 2,50,000 இடங்களை பிடிக்கும் நபர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதி உடையவர்கள். மிகவும் கடினமான இந்தத் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் தான் IIT கல்லூரிகளில் இடம் பெற முடியும்.
What is the JEE B (AAT) Arch?
Architecture குறித்து படிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். குறிப்பாக, JEE Main மற்றும் JEE Advanced இந்த இரண்டு தேர்விலும் தேர்ச்சி அடைந்தவர்களால் மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க முடியும். IIT Kharagpur மற்றும் IIT Roorkee ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் தான் இந்தப்படிப்பு இருக்கிறது என்பதனால் இதற்கு போட்டி மிகவும் கடுமையாக இருக்கும்.
ஐஐடியில் படிக்க இத்தனை போட்டி ஏன்?

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) படிப்பதால் பல நன்மைகள் மாணவர்களுக்கு உள்ளன.
உயர்தரக் கல்வி: இங்கே தான் மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த பாடத்திட்டம் மாணவர்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. தற்கால பொறியியல் அறிவு மாணவர்களுக்கு இங்கே இயல்பாகவே கிடைக்கும். இங்கே படிப்பவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பார்கள்.
வலுவான தொழில் தொடர்புகள்: மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு உயர் பதவிகளில் அமர்த்திட திறமையுள்ள நபர்களை தேடும் மிக முக்கியமான இடமாக இருப்பது IIT தான். இந்தக் கல்லூரிகளுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வலுவான தொடர்பை எப்போதும் கொண்டுள்ளன.
ஆராய்ச்சி வாய்ப்புகள்: ஐஐடிகள் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையங்களை கொண்டுள்ளன.இதனால் மாணவர்கள் அதிநவீன ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்க மற்றும் அவர்களின் யோசனைகளை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய வெளிப்பாடு: IIT கள் உலகெங்கிலும் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. இதனால் மாணவர்களுக்கு சர்வதேச படிப்பு, ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் எளிதில் கிடைக்கின்றன.
மதிப்புமிக்க கல்லூரி: IIT யில் படித்து வாங்கப்படும் பட்டம் மிகவும் மதிக்கப்படுகிறது. மேலும் இது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான அளவுகோலாகக் கருதப்படுகிறது.
சரியான ஐஐடி கல்லூரியை எப்படி தேர்வு செய்வது?
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பல கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சரியான கிளையைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவாலான முடிவாக இருக்கலாம். ஆனால், சரியான தகவல் மற்றும் தேடல் இருந்தால் உங்களது தேவைக்கு ஏற்றதொரு கல்லூரியை உங்களால் தேர்வு செய்துகொள்ள முடியும். சரியான ஐஐடி கிளையைத் தேர்வுசெய்ய உதவும் சில யோசனைகள் இங்கே:
உங்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் திறன்களை மதிப்பிடுங்கள்: நீங்கள் எதில் ஆர்வமாக உள்ளீர்கள் மற்றும் நீங்கள் எதில் சிறந்தவர் முதலில் முடிவெடுங்கள். உங்கள் கல்விப் பின்னணி, செயல்பாடுகள் மற்றும் தொடர்புடைய வேலை அல்லது தன்னார்வ அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள்.
வெவ்வேறு கல்லூரிகளை ஆராயுங்கள்: நீங்கள் பரிசீலிக்கும் ஐஐடியில் ஒவ்வொரு கல்லூரிக்கும் பாடத்திட்டம், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஆகியவற்றைப் பாருங்கள். நீங்கள் என்ன படிக்கப் போகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், அது உங்கள் திட்டம் மற்றும் இலக்குகளுடன் எவ்வாறு ஒத்துப்போகிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
உங்கள் தொழில் இலக்குகளைக் கவனியுங்கள்: பட்டப்படிப்புக்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைக் கவனியுங்கள், மேலும் அந்த இலக்குகளுடன் வெவ்வேறு கல்லூரிகள் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதைப் பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு கல்லூரிக்கும் வேலை சந்தை மற்றும் பட்டதாரிகளுக்கு என்ன வகையான தொழில்கள் உள்ளன என்பதைக் கவனியுங்கள்.
தற்போதைய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுடன் பேசுங்கள்: நீங்கள் பரிசீலிக்கும் ஐஐடியின் தற்போதைய மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்களை அணுகி, அவர்களின் அனுபவங்கள் மற்றும் அவர்களின் அனுபவம் பற்றி அவர்கள் விரும்பிய அல்லது விரும்பாததைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள்.
முடிவுரை
ஏற்கனவே கூறியது மாதிரியே, IIT கல்லூரிகளில் சேர்ந்து படிப்பது ஒவ்வொருவருக்கும் இருக்கக்கூடிய மாபெரும் கனவு. கடுமையாக படித்தால் நிச்சயமாக IIT கல்லூரிகளில் இடம் பெறுவது முடிந்த காரியம் தான். இந்தப்பதிவில் IIT சேருவதற்கு எப்படி நுழைவுத்தேர்வு எழுத வேண்டும், எப்படி கல்லூரியை தேர்வு செய்ய வேண்டும் என்பது பற்றி மிகவும் விரிவாக எழுதி இருக்கிறேன். இவை உங்களுக்கு நிச்சயமாக பயன்படும் என்று நம்புகிறேன்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.
மேற்படிப்புகள் குறித்து பல்வேறு கட்டுரைகள் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.