Software Engineer ஆவது எப்படி?

இந்தியாவில் Software Engineer வேலைக்கு ஒரு மோகம் உண்டு. அதற்கு காரணம், Software Engineer வேலையில் வழங்கப்படும் சம்பளம். மிகக்குறைந்த வயதிலேயே லட்சங்களில் சம்பளத்தை தொடக்கூடிய வேலை அது.

அப்படிப்பட்ட Software Engineer வேலைக்கு சேர 12 ஆம் வகுப்பு முடித்த பல மாணவர்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. Software Engineer ஆவதற்கு நீங்கள் என்ன படிப்பில் சேர வேண்டும், எப்படி உங்களை தயார் படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு விசயங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மாணவர்களிடம் நீங்கள் என்னவாக எதிர்காலத்தில் ஆக வேண்டும் என்று கேட்டால் அதற்கு எளிதாக “மருத்துவர்” “பொறியாளர்” “ஆடை வடிவமைப்பாளர்” “நர்ஸ்” “ஆட்சியர்” என விரும்பியதை கூறுவார்கள். ஆனால், அந்த வேலைகளுக்கு செல்ல வேண்டுமெனில் என்ன படிக்க வேண்டும், எப்படி தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டால் பெரும்பான்மையானவர்களுக்கு பதில் தெரியாது. இதுதான் இன்று நமது மாணவர்களுக்கு இருக்கும் மிக முக்கிய பிரச்சனை. ஒருகாலத்தில் எனக்கும் இந்த பிரச்சனை இருந்தது. அதன் விளைவு தான் தொடர்ச்சியாக, வேலைவாய்ப்பு மற்றும் பணி சார்ந்த பல கட்டுரைகளை எழுதி வருகிறேன். 

நீங்கள் Software Engineer ஆக விரும்பினால் உங்களுக்கு எழக்கூடிய பல கேள்விகளுக்கு இங்கே பதில் கிடைக்கும். [Higher Study Ideas In Tamil]

Software Engineer ஆவதற்கு என்ன படிப்பில் சேர வேண்டும்?

நீங்கள் எதுவாக ஆக விரும்பினாலும் நீங்கள் எடுத்துவைக்கக்கூடிய முதல்படி என்பது “நீங்கள் சேரப்போகும் படிப்பு” தான். நீங்கள் Software Engineer ஆக வேண்டுமெனில் பின்வரும் படிப்புகள் ஏதேனும் ஒன்றில் சேருங்கள். பல நிறுவனங்கள் இன்ஜினியரிங் படித்த பட்டதாரிகளைத்தான் Software Engineer பணியில் அமர்த்துகின்றன. ஆகவே, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

பொறியியல் படிப்புகள்

1. BE [CSE : Computer Science Engineering]

2. BTech IT

இதுதவிர நீங்கள் BE (ECE),BE (EEE)  பிரிவை எடுத்து படித்தாலும் கூட Software Engineer பணிக்கு செல்ல முடியும். 

மற்ற படிப்புகள்

Bsc Computer Science 

BCA 

Diploma in Computer Science

Diploma in Computer Application

Diploma in Software Engineering

குறிப்பு : நீங்கள் இந்த பட்டங்களை பெறாவிட்டாலும் சில சிறப்பு கோர்ஸ்களை முடித்துவிட்டு தனித்திறமையுடன் இருந்தால் அவர்களையும் சில நிறுவனங்கள் அங்கீகாரம் கொடுத்து வேலை கொடுக்கின்றன. உங்களுக்கு இருக்கும் திறமை என்பது மிக முக்கியமான ஒன்று.

Internship இல் சேருங்கள்

இன்ஜினியரிங் படித்தவர்கள் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள் என்றதொரு குற்றசாட்டு எப்போதுமே இருந்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணம், தங்களை வேலைக்கு தயார் செய்துகொள்ளாமலேயே இன்டெர்வியூக்களில் கலந்துகொண்டு தோற்றது தான். படிக்கும் காலங்களில் உங்களுக்கு ஏராளமாக நேரம் இருக்கும். அந்த நேரத்தை நீங்கள் எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் வெற்றி அமையும். பல நிறுவனங்கள், உங்களுடைய கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை கவனிக்கின்றன. 

Internship ஐ பல நிறுவனங்கள் வழங்குகின்றன. படிக்கும் போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ சிறந்த நிறுவனம் ஏதேனும் ஒன்றில் Internship இல் சேருங்கள். அங்கே கிடைக்கும் பயிற்சி மற்றும் அனுபவம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க பெரிதும் உதவும்.

Certifications

நீங்கள் பெற்றுள்ள பொறியியல் பட்டம் என்பது இன்டெர்வியூ செல்வதற்கு ஓர் நுழைவு சீட்டு மட்டுமே. அது மட்டுமே உங்களுக்கு வேலையை பெற்றுத்தராது. நீங்கள் Software Engineer ஆவதற்கு சில சிறப்பு கோர்ஸ்களை படித்து அதற்கான சான்றிதழ்களை வைத்து இருந்தால் உங்களுக்கு கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும். பின்வரும் Certifications மிக முக்கியமானவை. 

Microsoft Certified Azure Developer Associate

AWS Certified Developer – Associate

Google Professional Cloud Developer

CIW Web Development Professional

Oracle Java SE 

Oracle Certified Professional, Java EE 7 Application Developer

(ISC)2 Certified Secure Software Lifecycle Professional

Redhat Certified Engineer

Salesforce Certification Exam

Certified Scrum Developer

PMI’S Project Management Professional

சம்பளத்தை விட அனுபவம் பெரிது

சிலருக்கு ஆரம்பத்திலேயே நல்ல சம்பளம் கிடைக்கும். ஆனால் பலருக்கு அப்படி கிடைப்பது இல்லை. ஒருவேளை உங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை என்றால் கவலைப்படாமல் சம்பளம் சற்று குறைவாக இருந்தாலும் வேலையில் சேர்ந்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் Java Programming படித்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்களுக்கு JAVA Programmer வேலை கிடைக்கிறது. ஆனால் மாத சம்பளம் ரூ15,000. அதே சமயம், இன்னொரு PPO வில் மாத சம்பளம் ரூ20,000 க்கு ஒரு வேலை கிடைக்கிறது. இப்போது நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? மாத சம்பளம் அதிகம் உள்ள வேலையில் சேருவது என்ற எண்ணத்தில் PPO வில் சேர்ந்துவிடாதீர்கள்.ஆரம்ப சம்பளம் குறைவாக இருந்தாலும் JAVA Programmer வேலையிலேயே சேருங்கள். 1 அல்லது 2 ஆண்டுகள் உங்களுக்கு இந்த வேலையில் பணி அனுபவம் கிடைத்தால் போதும், நீங்கள் வேறு நிறுவனத்திற்கு மாறும் போது மிக அதிகமான சம்பளத்தை பெற முடியும்.

ஆகவே, துவக்க காலங்களில் சம்பளம் குறைவாக இருந்தாலும் உங்களுக்கு ஏற்ற துறையாக இருந்தால் பணியில் சேர்ந்துவிடுங்கள். சம்பளத்தை எதிர்பார்த்து வாய்ப்புகளை விட்டுவிடாதீர்கள்.

அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் FAQ

1. 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டேன். நான் எந்த படிப்பில் சேர்ந்தால் Software Engineer ஆகலாம்

நாம் மேலே சொன்னது போல, நீங்கள்  BE CSE,  BTech IT போன்ற துறைகளில் சேர்ந்து படித்தால் எளிதாக Software Engineer ஆகலாம். பிற, டிப்ளமோ, மற்றும் இளங்கலை படிப்புகளை படித்தும் Software Engineer ஆகலாம். 

2. இந்தியாவில் Software Engineer க்கு சராசரியாக எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?

இந்தியாவை பொறுத்தவரைக்கும் சராசரியாக ரூ25,000 வரைக்கும் ஆரம்ப சம்பளமாக பெற முடியும். உங்களது திறமைக்கு ஏற்றவாறு இந்த சம்பளம் அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக சில லட்சங்கள் வாங்குகிறவர்களும் இங்கே இருக்கிறார்கள். நீங்கள் எப்படி உங்களை மேம்படுத்திக்கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் அது அமையும். 

மேலும் பல உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்.