சாகர் மாலா திட்டத்தின் முக்கிய நோக்கம் இந்திய துறைமுகங்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே ஆகும். சாகரமாலா திட்டம் மார்ச் 09, 2017 அன்று துவங்கப்பட்டது. இந்தியாவின் 7500 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரையில் துறைமுகங்களை மேம்படுத்துவது தான் இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
சாகர்மாலா திட்டம்
இந்தத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள், விரைவாகவும் திறன்மிக்க வகையிலும் சரக்குகளை கொண்டு செல்லும் விதத்தில் உள்நாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தான் இதன் முக்கிய நோக்கம். இதன் மூலமாக, சாலை போக்குவரத்தை தவிர்த்து சரக்குகளை நீர் வழியாக கொண்டு செல்ல முடியும். இதனால், எரிபொருள் பெருமளவு சேமிக்கப்படும். சிறப்பான வகையில் இந்தியத் துறைமுகங்களை கட்டமைப்பதன் மூலமாக சர்வதேச அளவில் வாணிகம் சிறப்பாக இருக்கும். இதன் மூலமாக, நாட்டின் பொருளாதாரம் பெருமளவு அதிகரிக்கும்.
சாகர்மாலா திட்டத்தில் அமையவிருக்கும் உத்தேச துறைமுகங்கள்
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ஆறு பெருந்துறைமுகங்கள் நிறுவ திட்டமிடப்ப்பட்டுள்ளது,
கேரளாவில் விழிஞம் என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
தமிழ்நாட்டில் குளச்சல் என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
மஹாராஷ்டிராவில் வாத்வான் என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
கர்நாடகாவில் தடடி என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
ஆந்திராவில் மச்சிலிப்பட்டினம் என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் சாகர் தீவு என்ற இடத்தில் அமையவிருக்கிறது.
சாகர்மாலா திட்டம் யாரால் அமல்படுத்தப்படும்?
சாகர்மாலா திட்டத்தில் துறைமுகங்கள் தனியார் அமைப்புகள், தனியார் – பொது அமைப்புகள் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநில அரசு இந்தத்திட்டத்தை அமல்படுத்த முதலமைச்சர் அல்லது துறைமுகங்களுக்கான அமைச்சர் தலைமையில் சாகர்மாலா குழுக்களை அமைக்கும்.
தேசிய சாகர் மாலை உயர்மட்ட குழுவில் (NSAC) இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர், இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் மத்திய அரசின் துறைகளுக்கான அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் அல்லது மாநில துறைமுக அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பர்.