- திட்டத்தின் பெயர் : ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம்
- நோக்கம் : விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு உதவுதல்
- ஆண்டு : 2007
- Rashtriya Krishi Vikas Yojana Scheme – Remunerative Approaches – பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2017 – 20 ஆண்டுவரை இந்த பெயரில் செயல்படுத்துகிறது
2007 ஆம் ஆண்டு விவசாயம் சார்ந்த துறைகளில் இருந்து வருகின்ற வருமானத்தை ஆண்டுக்கு 4% அளவிற்கு உயர்த்துவதற்கு ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது.
தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் தலைமையின் கீழ் நடந்த கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தை அடுத்த மூன்றாண்டுகளுக்கு தொடர்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. புதிய திட்டம் Rashtriya Krishi Vikas Yojana Scheme என்பதில் இருந்து மாற்றப்பட்டு Rashtriya Krishi Vikas Yojana Scheme – Remunerative Approaches என்கிற பெயரில் செயல்படும். அதாவது விவசாயத்துறையை லாபகமானதாக மாற்றிட உதவுகின்ற திட்டம்.
2017 – 2018 முதல் 2019 – 2020 வரை என மூன்றாண்டுகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்க்காக ரூ 15722 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் 60 சதவிகிதம் மத்திய அரசின் பங்காகவும் 40 சதவிகிதம் மாநில அரசின் பங்காகவும் இருக்கும். வடகிழக்கு மற்றும் ஹிமாலயா பகுதிகளுக்கு 90 : 10 என்கிற விகிதத்தில் பங்கீடு இருக்கும்.
இந்த திட்டம் மாநில அரசாங்கங்களுக்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறது. அதாவது அந்தந்த மாநிலங்கள் தங்களின் கால நிலைக்கு ஏற்பவும் , சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம். மேலும் மாவட்ட அளவில் District Agriculture Plans (DAPs) மற்றும் மாநில அளவில் State Agriculture Plan (SAP) போன்றவற்றின் மூலமாக தங்களுக்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்துக்கொள்ள முடியும்.
மேலும் பல அரசின் திட்டங்கள் குறித்து படிக்க கிளிக் செய்திடுங்கள்
அரசு தேர்வுகளுக்கு பயிற்சி செய்ய இலவச தேர்வு எழுதிப்பார்க்க கிளிக் செய்திடுங்கள்
TECH TAMILAN