மிஷன் சாகர் திட்டம் என்றால் என்ன? Mission Sagar Scheme Explained

கோவிட்-19 காரணமாக உலகமே முடங்கிய சூழ்நிலையில் மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உதவிடும் விதத்தில் உருவான திட்டம் தான் மிஷன் சாகர். இந்தத்திட்டத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கேசரி என்கிற கப்பல் பயன்படுத்தப்பட்டது. இந்தக் கப்பல் மூலமாக மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக்குழுக்கள் அனுப்பப்பட்டது. முதல் முறையாக இந்தக்கப்பல் 2020 ஆம் ஆண்டு மே 20 அன்று புறப்பட்டது. நமது மண்டலத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பும் வளர்ச்சியும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப (Security and Growth for All in the Region ‘SAGAR’ ) திட்டம் துவங்கப்பட்டது.

மிஷன் சாகர் திட்டம் பற்றி….

அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்கும் விதத்தில் Mission Sagar திட்டம் துவங்கப்பட்டது. இந்தியாவிற்கும் அதன் கடல்சார் அண்டை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான தொலைநோக்கு பார்வையாகும். கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பல நாடுகள் உதவியை எதிர்நோக்கி இருந்த காலகட்டத்தில் மருந்து மற்றும் மருத்துவக்குழு என உதவிகளை செய்தது இந்தியா. மொத்தமாக மூன்று முறை இந்தப்பயணம் நடந்தது.

மிஷன் சாகர் – I

உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் INS கேசரியை 2020 மே 10 அன்று துறைமுகத்திலிருந்து இந்தியா அனுப்பியது. இது இந்தியப் பெருங்கடல் நாடுகளான மொரிஷியஸ், சீஷெல்ஸ், மடகாஸ்கர், கொமரோஸ் மற்றும் லா ரீயூனியன் ஆகிய நாடுகளுக்குச் சென்றது.

ஐஎன்எஸ் கேசரி 55 நாட்களில் 7,500 கடல் மைல்களுக்கு மேல் பயணம் செய்து ஜூன் 28, 2020 அன்று கொச்சி துறைமுகத்திற்குத் திரும்பியது.

மிஷன் சாகர் – II

நவம்பர் 2020 இல், ஐஎன்எஸ் ஐராவத் துறைமுகத்தை விட்டு கிளம்பியது. இது சூடான், தெற்கு சூடான், ஜிபூட்டி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு உணவு விநியோகம் செய்தது.

மிஷன் சாகர் – III

டிசம்பர் 2020 இல், ஐஎன்எஸ் கில்தான் கம்போடியா மற்றும் வியட்நாம் நோக்கிச் சென்றது. வியட்நாம் மற்றும் கம்போடியாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து பேரிடர் நிவாரணத்திற்காக INS கில்தான் 15 டன் உணவுப்பொருள்களை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணமாக (HADR) எடுத்துச் சென்றது.

மிஷன் சாகர் – IV

மார்ச் 2021 இல், ஐஎன்எஸ் ஜலஷ்வா 1000 மெட்ரிக் டன் அரிசியை வழங்குவதற்காக கொமோரோஸின் போர்ட் அஞ்சோவானை அடைந்தது. இந்திய கடற்படைக் கப்பல் ஒன்று கொமோரோஸ் நகருக்கு வருவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, மிஷன் சாகர் I இன் ஒரு பகுதியாக, இந்தியா மருந்துகளை விநியோகித்தது மற்றும் மருத்துவ உதவி குழுக்களை கொமோரோஸுக்கு அனுப்பியது.

Read This Post Also : கிசான் விகாஸ் பத்ரா திட்டம் என்றால் என்ன?


TECH TAMILAN